பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 6)

முனைவர் செ.இராஜேஸ்வரி


வேறு படங்களில் அறிமுகமாகி எம்ஜிஆர் படத்தால் பிரபலமான ஜோடிகள்

தமிழ்த் திரையுலகில் பல இயக்குனர்களால் புது முகங்களாக அறிமுகமான நடிகைகள் எம் ஜி ஆர் படாங்களில் நடித்த பிறகு பிரபலமாயினர். அவர்களில் முக்கியமான ஒரு சிலரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கே.ஆர் விஜயா

கற்பகம் படம் எம்ஜிஆரை கதாநாயகனாகக் கொண்டு தயாரிப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் எம்ஜிஆரின் கால்ஷீட் கிடைக்க காலதாமதம் ஆனதால் தயாரிப்பாளர் வேறு ஒருவரைக் கொண்டு படத்தை முடிக்க கருதினார். அதனால் ஜெமினி கணேசன் படத்தின் கதாநாயகன் ஆனார். அவருடைய மனைவி சாவித்திரி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். புதுமுகமாக கே.ஆர் விஜயா ஒப்பந்தமானார். கே.ஆர் விஜயாவின் குழந்தைத்தனமான சிரித்த முகத்தை பார்த்த இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவான கே. எஸ். கோபால கிருஷ்ணன் அவரை அந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார். மாடு முட்டிச் சாகும் கே.ஆர் விஜயா பெண்களின் உள்ளம் கவர்ந்த நடிகை ஆனார். இவர் எம் ஜி ஆர் படத்தில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர் அடுத்த படமாக தொழிலாளியில் எம் ஜி ஆருடன் நடித்தார். தொடர்ந்து தாழம்பூவில் நடித்தார்.

தொழிலாளியில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆள் தேடியபோது வசனகர்த்தா ஆரூர்தாஸ் கற்பகம் படத்தில் நடித்த கே.ஆர் விஜயாவைப் பற்றி தன் மனைவி புகழ்ந்து பேசியதாக சொல்லவும் தயாரிப்பாளர் இந்த படத்திலும் கே.ஆர் விஜயாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்து எம்ஜிஆரிடம் கேட்டார். எம்ஜிஆர் விஜயாவை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்தார்.

கே.ஆர்.விஜயா தொழிலாளி படத்தில் காதல் ரசம் ததும்பும் காட்சியிலும் கோபம் பொங்கும் காட்சியிலும் வெறுப்பை வெளிப்படுத்தும் காட்சியிலும் இயலாமையால் தவிக்கும் காட்சியிலும் முகபாவங்களையும் உடல்மொழியையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி இருந்தார். இதனால் கே.ஆர்.விஜயாவுக்கு நல்லதொரு எதிர்காலம் திரையுலகில் உண்டானது. இப்படத்தின் இரண்டாவது கதாநாயகி என்றாலும் தொடக்கம் முதல் முடிவு வரை இவருடைய காட்சிகள் நீண்டன.

கே.ஆர் விஜயா திருமணம் செய்துகொண்ட பிறகு இவரும் இவர் கணவரும் எம்ஜிஆருடன் நல்ல நட்புறவு கொண்டிருந்ததனால் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நடித்து வந்தார். விவசாயி, நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன் ஆகிய வெற்றிப்படங்களில் விஜயா எம் ஜி ஆருடன் ஜோடியாக நடித்திருந்தார். ஒருசமயம் எம்ஜிஆருக்கு தேர்தல் செலவுக்கு பணம் தேவைப் பட்டபோது விஜயாவின் கணவர் வேலாயுத நாயர் ஒரு சூட்கேஸ் நிறைய பணம் கொடுத்ததாகவும் செய்திகள் வந்தன.

ஜெயலலிதா காஞ்சனா சரோஜா தேவி ஆகியோர் முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் எம்ஜிஆர் நடித்த பிறகுதான் அவர்கள் பிரபலமானார்கள் சரோஜாதேவி ஒரு குழு நடனக்காரர் ஆக அறிமுகமானார் பின்பு மூன்று படங்களில் நடிக்க மொத்தமாக குறைந்த சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் அதன் பிறகு திருடாதே படத்தில் எம்ஜிஆருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் இந்தப் படம் வருவதற்குள் எம்ஜிஆருக்கு மேடையில் இன்பக் கனவு நாடகத்தில் நடிக்கும் பொழுது கொண்ட மணி அவர் மீது விழுந்ததால் கால் எலும்பு முறிந்து ஆறுமாதம் சிகிச்சையில் இருந்த இருந்ததனால் இப்படம் முடிவடையும் ஒரு வருடம் ஆயிற்று ஒரு வருடத்துக்கு மேலாயிற்று.

சரோஜாதேவி எம்ஜிஆருடன் நடித்த திருடாதே படமும் வெளிவராத நிலையில் நாடோடி மன்னன் படத்தில் நடித்து வந்த பி பானுமதி படப்பிடிப்பின் போது முகம் கோரியதால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் அதன்பிறகு வேறு புதுமுகம் வேறு நடிகையை தேடியபோது சரோஜாதேவி எம்ஜிஆருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்

சரோஜாதேவி

சரோஜாதேவி பேசும் வசனங்கள் அப்போதைய நடிகைகளில் பேசுவதைப் போல இல்லாவிட்டாலும் எம்ஜிஆருக்கு அவர் பேசியது பிடித்து இருந்த காரணத்தால் அவருடைய நடையில் சற்று வேறுபாடு காணப்பட்டாலும் அதுவும் ஒரு கவர்ச்சியாக தோன்றுகிறது என்று எம்ஜிஆர் கருதியதால் நாடோடி மன்னன் படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தார் . பி. பானுமதியை நீக்கிவிட்டு ஒரு புதுமுகத்தை ஒப்பந்தம் செய்து படம் எடுக்கும் போது உள்ள இடர்பாடுகளை நினைத்துப் பார்த்த எம்ஜிஆர் தொழில்நுட்ப ரீதியாக அதை சரி செய்ய முனைந்தார் உடனே சரோஜாதேவி நடிக்கும் காட்சிகளை மன்னர் படமாக எடுக்க முடிவு செய்தார் அவருடைய காட்சிகள் அனைத்தும் கன்னித்தீவு என்ற தீவில் படமாக்க படுவதாக படமாக்க படுவதாக காட்டப்பட்டன.

எம்ஜிஆருடன் சரோஜாதேவி நாடோடி மன்னன் என்ற வண்ணப் படத்தில் நடித்து

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப
காவிய கலையே ஓவியமே


என்ற காதல் பாடலை கடலுக்கு அடியே தரைத்தளத்தில் பாடுவதாக கற்பனை காட்சி படம் பிடிக்கப்பட்டு திரையில் வெளிவந்தபோது ரசிகர்களின் உற்சாகத்திற்கு அளவேயில்லை. ரசிகர்களும் ரசிக்கும் ரசிகர்கள் மிகவும் ரசித்து இந்த வண்ண படக்காட்சியை கடலுக்கு அடியில் நடக்கும் காதல் காட்சியை ரசித்து ரசித்து பார்த்தனர். இதன்பிறகு எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி பிரபலமாயிற்று 26 படங்களில் தொடர்ந்து இருவரும் ஜோடியாக நடித்து வந்தனர்.

1967 இல் எம் ஜி ஆர் எம் ஆர் ராதா சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது சரோஜாதேவியின் தாயார் அளித்த பேட்டியில் இனி அவர் நடிக்க வருவாரா என்பது தெரியாத நிலையில் அவருடன் என் மகள் நடிப்பாரா என்ற கேள்வி கேட்கிறீர்களே நான் எப்படி நடிப்பார் என்று சொல்ல முடியும் அவர் முதலில் நடிக்கட்டும் பார்க்கலாம் என்று பதிலளித்த அதைக் கேட்டு அறிந்த எம் ஜி ஆர் மிகவும் வேதனைப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தார். இனி சரோஜாதேவியோடு படம் நடிப்பதில்லை. புதிய ஒரு புதுமுகத்தை போட்டு நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இவ்வேளையில் சரோஜாதேவிக்கு திருமண ஏற்பாடு நடந்தது அவரை வாழ்த்தி புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர் நடித்த கடைசி படமான அரசகட்டளை இரண்டாம் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவை ஜோடியாக இறுதிக்காட்சியில் முடிவு செய்துவிட்டனர். முடிவு செய்துவிட்டு சரோஜாதேவிக்கு பிரியா விடை கொடுத்து விட்டார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பதினைந்தாவது வயதில் சரோஜாதேவி கதாநாயகியாக நடிக்கும் கன்னடப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் இருவரில் ஒருவராக இடம் பெற்றார். இதற்கு முன்பு அவர் The epistle என்ற ஆங்கிலப் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்திய படத்தில் அவர் முதன்முதலாக அறிமுகமானது கன்னட படத்தில் தான்.

ஸ்ரீதர் தன்னுடைய வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க ஏராளமான பெண்களை ஆய்வு செய்து இறுதியில் ஜெயலலிதாவை தேர்வு செய்து நடிக்க வைத்தார். பின்பு பத்மினி பிக்சர்ஸ் பந்துலு அவர்கள் சிவாஜி படங்களை எடுத்து பிரபலமாகி இருந்து பின்னர் கஷ்டப்பட்டு அந்த நஷ்டத்தை தீர்ப்பதற்காக எம்ஜிஆரிடம் வந்து சேர்ந்தார். அவர் வண்ணப்படம் ஒன்று தயாரிக்க முடிவு செய்தார். அதில் ஜெயலலிதா கதாநாயகி ஆனார்.

அனைத்து பெரிய நிறுவனங்களும் முதலில் வண்ணப் படம் எடுக்கும் பொழுது வேறு எந்த நடிகரையும் போட்டு ரிஸ்க் எடுப்பதில்லை. எம் ஜி ஆரை மட்டுமே ஒப்பந்தம் செய்தன. அதுபோல எம்ஜிஆரை ஒப்பந்தம் செய்து ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை எடுத்தார். இப்படத்தின் காட்சிகள் கோவாவில் எடுக்கப்பட்டன. புதிய படம் வண்ணப் படம் என்பதால் ஒரு இளம் கதாநாயகியை ஒப்பந்தம் செய்யலாம் என்ற முடிவுடன் தேடிக் கொண்டிருந்தபோது ஜெயலலிதாவைப் பற்றி அறிந்து எம்ஜிஆரின் ஒப்புதலை பெற்றனர்.

ஜெயலலிதா வெண்ணிற ஆடை படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு சரோஜாதேவி நடித்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு புதிய படம் எதிலும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை ஜெயலலிதாவோடு புதிய படங்களில் எம்ஜிஆர் நடித்தார். ஜெயலலிதா காட்டிய ஒத்துழைப்பும் சுறுசுறுப்பும் அழகும் ரீடேக் வாங்காத திறமையும் நிறைய படங்களை விரைவாக முடிக்க உதவின. கன்னித்தாய் 12 நாட்களில் முகராசி 30 நாட்களில் தனிப்பிறவி 42 நாட்களில் என்று தேவர் ஃபிலிம்ஸ் எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ஒப்பந்தம் செய்து மளமளவென்று படங்களை எடுத்து குவித்தன.

ரவிச்சந்திரனுடன் அதிக படங்களில் நடித்து வந்த ஜெயலலிதா அதன்பிறகு எம்ஜிஆரின் பிரத்தியேக கதாநாயகியாகி 28 படங்களில் எம்ஜிஆருடன் நடித்தார் . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து முடித்த பிறகு ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் போன்றோருடன் வேறு பல படங்களில் நடித்து வந்தாலும் கருப்பு வெள்ளை படங்களில் நடித்த போதும் எம்ஜிஆர் கதாநாயகி என்று ஆன பிறகு தான் இவர் பிரபலமடைந்தார். அதன்பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் அதிக சம்பளம் வாங்கும் நம்பர்ஒன் நாயகியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சனா

ஸ்ரீதர் தான் இயக்கிய காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருந்தாலும் எம்ஜிஆருடன் பறக்கும் பாவை படத்தின் இரண்டாம் கதாநாயகியாக நடித்து அவரை ஒருதலையாக காதலிக்கும் நர்ஸ் பெண்ணாக வந்து பின்னர் அவர் தன்னை காதலிக்கவில்லை என்பதை அறிந்ததும் அவர் காதலிக்கும் சரோஜாதேவியை கொலை செய்ய ஆட்களை நியமிக்கும் கொலைகார எண்ணம் கொண்ட ஒரு வில்லியாகவும் இந்தப் படத்தில் நடித்த பின்பு பிரபலமானார். அதுவரை இது போன்ற அழகிய வில்லியை பார்த்திராத தமிழக ரசிகர்களின் மனதில் காஞ்சனா இடம் பிடிக்க தொடங்கினார். பின்னர் எம் ஜி ஆருடன் நான் ஏன் பிறந்தேன் படத்தில் நடித்தார்

ஏ.வி.எம் ராஜன், இரவிச்சந்திரன் ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுடன் சிறப்பாக நடித்து வந்த காஞ்சனா சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து சிவந்தமண் படத்தில் நடித்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகை விட்டு காணாமல் போய்விட்டார்.

இவ்வாறாக எம்ஜிஆர் அறிமுகம் செய்தல் கதாநாயகிகள் சிறப்பாக நடித்தனர் வாழ்ந்தனர். அவருடைய படத்தில் நடித்தபிறகு பிரபலமானவர்கள் திரையுலகில் சிறப்பான இடத்தைப் பெற்றனர். சரோஜாதேவி, பாரதி, கே.ஆர் விஜயா போன்ற சிலர் இன்றும் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்