பெண் இனம் போற்றும் பெருந்தலைவர்
எம்.ஜி.ஆர் (தொடர் - 8)
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்.ஜி.ஆர் காதல் பாடல்களில் மலரும் மரபும்
சங்க காலம் தொட்டு காதலன் காதலிக்கு பூக்களும் தழைகளும் சேர்த்து
கட்டிய பூங்கொத்தை பரிசாகத் தரும் பழக்கம் இருந்து வ்ருகிறது. இதை
கையுறை எங்கிரது சங்க இலக்கியம். கையுறை என்பது காதல் பரிசு அல்ல; அன்பு
காணிக்கை. ஏனென்றால் தலைவனோடு பழகிய பரத்தை அவனது மகனை தெருவில் கண்ட
போது அச் சிறுவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று தங்கப் பூண்
ஒன்றை நெய் தடவி கையில் மாட்டி விடுகிறாள் இதுவும் கையுறை தான்.
சங்க இலக்கியத் தோழி காதலன் கையுறையாக 'தழையும் மலர்களும் சேர்த்து
கட்டிக்' கொடுத்து அதை தலைவியிடம் கொடுத்து தன் காதலை அவளிடம்
வெளிப்படுத்தும்படி சொல்லும்போது அவள் அதை பெற மறுத்துவிடுகிறாள். இதை
தொல்காப்பியம் கையுறை மறுத்தல் என்கிறது. தமிழர் வாழ்வின் பண்பாட்டு
வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்
ஆதிகாலம் தொட்டு காதலன் காதலிக்கு இடையே பூக்கள் அன்பளிப்பாக
வழங்கப்படுவதை தெரிவிக்கிரது.
கூந்தலில் பூச்சூட்டல்
கூந்தலில் முதன் முதலாக பூச்சூட்டுதல் காதலன் காதலிக்கு தரும்
அன்பளிப்பாக இருப்பதால் தான் அவன் இறந்த பிற்கு பூ களைத்ல் ஒரு கைம்மைச்
சடங்காயிற்று. தன் மகளின் கூந்தலில் பூ மணப்பதை உணர்ந்த சங்க காலத் தாய்
தன் மகள் யாரையோ காதலிக்கிறாள் என்பதை புரிந்துகொள்கிறாள். அதுவரை
பெண்கள் தலையில் பூச்சூடுவது கிடையாது. தலைமாலை என்னும் கண்ணி
ஆண்களுக்கு மட்டுமே உரியதாகும். இன்றும் சில சமூகத்தினர் திருமண்
நிச்சயதார்த்தம் செய்யும் சடங்காக பெண்ணுக்கு பூ வைத்தல் சடங்கு
நிகழ்த்துகின்றனர். அதாவது அவளுக்கு பூ வைப்பதால் இனி அந்த பெண் ஒரு
ஆணுக்கு உரியவள் ஆகிறாள்.
நாட்டுப்புறக் காதல் பாடலில் பூக்கள்
சங்க இலக்கியப் பாடல் மட்டுமல்லாது நாட்டுப்புறப் பாடல்களிலும் காதலன்
தன் காதலிக்கு பூ வாங்கி கொடுத்து தன் அன்பை தெரிவிப்பது பதிவாகி உள்ளது.
ரயில் மேலே போற பெண்ணே
ரோஜாப்பூ வாங்கி தாறேன்
ரயிலை விட்டு கீழிறங்கி வா வா வா
மலை மேலே போற பெண்னே
மல்லிகை பூ வாங்கி தாறேன்
மலையை விட்டு கீழிறங்கி வா வா வா
பூத்தரு புணர்ச்சி
காதல் தோன்றும் களங்களாக தொல்காப்பியர் விளக்கும்போது மூன்றினை
குறிப்பிடுவார் அவ்ற்றில் ஒன்று பூத்தருப புணர்ச்சி.ஆகும். காதலி
ஆசைப்படும் பூவை அவளுக்கு பறித்துக்கொடுத்து அவளை மகிழ்வித்து அவள்
அன்பை பெறுவதாகும். அன்பே வா பட்த்தில் சரோஜா தேவி எம் ஜி ஆரிடம் 'அந்த
பூவை பறித்து தாருங்கள் அதை என் கன்னத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்'
என்று ஆசை காட்டி அவரை ஜில் தண்ணீரில் விழ வைத்து கார் சாவியை கொண்டு
வந்து விடுவார். பிறகு அதனால் அவருக்கு டபுள் நிம்மோனியா
வந்துவிட்ட்தாக கருதி உருகுவார்.. இப்படியாக அவர்களூக்குள் காதல் மலரும்
வளரும். இதில் ஒரு காதல் கனவு கான்பார் சரோஜா தேவி
ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
எனற பாடல் ஒரு பிரெஞ்சு மொழி பட்த்தை பார்த்து அது போல ஏ வி எம்
செட்டியார் எடுக்க ஆசைப்பட்டு எடுத்த பாடல் காட்சி ஆகும் அந்த
காட்சியில் சரோஜாதேவியின் கிரீடம்இ உடை ஆகியன் எலிசபெத் மகாராணியின்
கிரீடம் மற்றும் உடையை பார்த்து வடிவமைத்த்தாகும். இன்று வ்ரை எம் ஜி
ஆர் ரசிகர்களின் விருப்பப் பாடலாக இப்பாடல் இருந்து வருகிறது.
ஏன் பூ தர வேண்டும்?
பூவின் மணம் மனதை மயக்கும். இங்குள்ள பூக்கள் தான் மணக்கும்.
வெளிநாடுகளில் கடும் பனி பெய்வதால் அங்கு பூக்கள் மணக்காது மேலும் அங்கு
வெப்ப நாடுகளை போல பல வகை பூக்களும் கிடையாது. வெளி நாட்டினரை அதிகமும்
மயக்கும் ரோஜாப்பூ கூட வளை குடா நாடுகளில் தான் அதிகமாகப் பூக்கின்றது.
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
என்றார் திரையிசை கவிஞர். அதனால் பூக்களைப் பார்த்து அவள் மகிழ்ந்தால்
த்ன் காதலை ஏற்றுக்கொண்டாள் என அறியலாம் அல்லது அவள் மனதில் இருப்பதை
அறிய இயலாது.
தாழம்பூ
எம் ஜி ஆர் ஓர் உண்மை கொலைகாரனை அறிய தோட்டக்காரனாக கே ஆர் விஜயா
வீட்டில் வந்து சேர்ந்திருப்பார். விஜயாவுக்கு அவர் பட்ட்தாரி என்பது
தெரியும் என்பதால் அவர் ஒரு தலையாக எம் ஜி ஆரை காதலிப்பார். அப்போது
ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலம் இருக்கு
எட்டு வேலி நிலத்திலயும்
என்ன போட்டால் தோப்பாகும்
எனப் பாடுவார். அதற்கு கே ஆர் விஜயா எம் ஜி ஆருக்கு ஈடு கொடுத்து
வாழை போட்டால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தல் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது போட்டால்
அத்தனையும் பொன்னாகும்
என்று பதில் பாட்டு பாடுவார். இப்பாடலில் தன் மனக் கருத்தை குறிப்பாக
உணர்த்துவார்.
காலம் இன்று கனியும் என்று
கனவு கண்டு வந்து விட்டேன்
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
என்று எம் ஜி ஆர் வெளிப்படையாகவே தன் காதலுக்கு வழி உண்டா என்று
கேட்பார். அப்போது அவர் கையிலொரு ரோஜா மலர் இருக்கும் இந்த மலரை
விஜயாவிடம் உயர்த்தி காட்டி அதை முகர்ந்து பார்த்தபடியே பாடி வருவார்.
இந்தப் பாட்டில் காதலும் காம்மும் களி நடம் புரியும். விஜயா எம் ஜி ஆர்
அருகே வந்து நின்றதும் அந்த மலரை விஜயாவின் கூந்தலில் செருகுவார்.
இருவர் மனதிலும் காதல் கனிந்ததை இக்காட்சி அழகாக நயமாக வெளிப்படுத்தும்.
சுண்டி விடும் மல்லிகை பூ
எம் ஜி ஆரின் காதல் பாடல்கள் ஸ்வீட்டாக இருக்கும் என்று ஸ்ரீ தேவி ஒரு
பேட்டியில் சொன்னார். பெண்களை கவரும் வகையில் நனி நாகரிக முறையில் காதல்
காட்சிகளை எம் ஜி ஆர் கவ்னமாக எடுத்திருப்பார். பெண்கள் முகம்
சுளிக்காத வகையில் அதே சமயம் ரசிக்கத்தக்க வகையில் இக்காட்சியை தனி
கவனம் செலுத்தி எடுப்பார். சண்டை காட்சிக்கு தரும் கவனத்தை காதல்
காட்சிக்கும் தருவார்.
எம் ஜி ஆரைக் கல்யாணம் செய்ய அனுமதி தராத சூழ்நிலையில் தன் அப்பாவின்
வீட்டை விட்டு கிளம்பி வந்து எம் ஜி ஆரின் வீட்டில் தங்கியிருப்பார்
சரோஜாதேவி. அப்போது ஓர் இரவில் இருவரும் தனியே தோட்டத்தில்
சந்திக்கின்றனர். ஒரு பாட்டு பாடும்படி தன் காதலியை கேட்கும் எம் ஜி ஆர்
அந்த நள்ளிரவில் அங்கு பூத்திருந்த ஒரு மல்லிகை பூவை இலையோடு கிள்ளி தன்
உள்ளங்கையில் வைத்து தன் நடுவிரலால் சுண்டி விடுகிறார். அடுத்த
காட்சியில் அந்த பூ காதலியின் கொண்டையை அலங்கரிக்கிறது. இது இரு மனம்
ஒப்பிய காதல் உணர்வை புலப்படுத்துகிறது.
பாட்டு ஒரு பாட்டு
ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு – காதல் பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு – அதை
எழுதும்போது மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
என்ற இக்காதல் காட்சியில் எம் ஜி ஆர் சரோஜாதேவியை அவர் நாடியில் தன் நடு
விரலால சுண்டுவார். அந்தக் காதலின் முதல் தொடுகை. அதே முறையில் அவருக்கு
சரோஜாதேவியால் திருப்பி தரப்படும் . அவரும் அதே மாதிரி தன் நடு விரலால்
எம் ஜி ஆரை சுண்டுவார்.. சிறிய செய்கை ஆனால் பெரிய விளைவு.. ஏதோ
கேரம்போர்டு விளையாடுவதை போல ஒருவரை ஒருவர் சுண்டி விளையாடுவர். இரவில்
தனிமையில் தன் வீட்டில் காதலியை சந்திக்கும் காதலனுக்கு அவளைத் தொட்டு
விளையாட ஆசை வரும். அதை ஆசையை இருவரும் மிகுந்த கண்ணியத்தோடும்
வெளிப்படுத்தும் அழகை இப்படத்தில் காணலாம். காதலியை ஒற்றை விரலால்
தொடும்போது ஏற்படும் கிளர்ச்சியே இக்காட்சியின் சாரம் ஆகும்.
நீ அறியும் பூவே
சங்க காலத்து காதலன் தழைகளாலும் பூக்களாலும் ஒரு சரம் கட்டி கொடுப்பதும்
உண்டு. அவள் தலையில் பூச்சூட்டி முகர்ந்து பார்ப்பதுண்டு. அதனால் தான்
பாண்டிய மன்னனுக்கு பெண்கள் கூந்தலில் இயற்கை மணம் உண்டா என்ற சந்தேகம்
வந்த போது இறையனார்
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்ச்சிறை தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
என தும்பியை அழைத்து ''நீ அறியும் பூவே'' என முடிக்கிறார். இந்த
சந்தேகமே இல்லாமல் எம் ஜி ஆர் தன் காதல் காட்சிகளில் காதலியின் கூந்தலை
தடவுவதும்இ அதை முகர்வதும் கூந்தலைப் பிரித்து விரலால் அளைவதுமாக ஒரு
காட்சியை வைத்திருப்பார். சாவித்திரியுடன் வேட்டைக்காரன் பட்த்தில்
தேனிலவு காட்சியில்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
பாட்டு பாடும்போது எம் ஜி ஆர் சாவித்திரியின் சடை பின்னலை எடுத்து தன்
கழுத்தை சுற்றி போட்டுக்கொள்வார்.
வண்ண மலர் மாலை கட்டி
நீதிக்குப் பின் பாசம் படத்தில் சரோஜாதேவி எம் ஜி ஆருக்கு சிறப்பு
செய்யும் வகையில் ஒரு விளையாட்டுக் கல்யாணம் போல அங்கு கிடைக்கும்
பூக்களை தொடுத்து.
வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன்
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் –இனி
வாழ்வும் தாழ்வும் உன்னதென்று என்னைத் தந்தேன்
என்று அந்த மாலையை ஒருவருக்கு சூட்டி பின் இருவருமாக மாலைக்குள் இணைந்து
மாலையும் மணமும் போல கலந்து மகிழ்வர்.
மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழை தந்த்து
சிலை அல்லவோ உடலை தந்தது
என பாடி எம் ஜி ஆர் வருணிப்பார்ர் . அதற்கு பதில் பாடும் சரோஜாதேவி
தேக்கு மரம் உடலை தந்தது'
சின்ன யானை நடையை தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன் அல்லவோ நிறத்தை தந்தது
என்பார். இங்கு எம் ஜி ஆரின் சிரிப்பை பூக்கள் எல்லாம் தந்தன என்று
வருணித்து பாடியிருப்பார். எம் ஜி ஆரின் மலர்ந்த முகம் அனைவரின்
உள்ளத்தை கொள்ளை கொண்டதனால் அவரது சிரிப்பை மலர்கள் எல்லாம் சேர்ந்து
தந்ததாக கவிஞர் புனைந்துரைக்கிறார்.
தொழிலாளி பட்ட்தில் புதுமுகமாக ரதனா அறிமுகம் ஆனார். புதுமுகங்கள்
விரைவில் ரசிகர்களிடையே சென்றடைய வேண்டும் என்பதற்காக காட்சிகளில் அதிக
சிரத்தை எடுக்கப்படுவது மரபு. காதல் காட்சிகள் இப்படத்தில் மிகுந்த
கவனத்துடன் எடுக்கப்பட்டிருக்கும். இருவருக்கும் உரையாடல் வடிவில்
அமைந்த பாடல் காட்சி.
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பை கொடுப்பேன் நான் அன்பை கொடுப்பேன்
என் ஆடிப் பாடி வரும்போது எம் ஜி ஆர் பல அடி நீளமுள்ள மலர்ச்சரத்தை வீசி
ரதனாவை தன்னுடன் சேர்த்து பின் இருவரும் அந்த மலர் சரத்தினுள்ளிருந்து
வெளியே வருவதாக ஒரு காட்சி அமையும்.
ஏழைக்கும் மகிழ்ச்சி அளிக்கும் மலர்கள்
மலர்களால் சூழப்பட்டிருப்பது என்பது எம் ஜி ஆர் படத்தில் மகிழ்ச்சி
நிரம்பிய காதல் காட்சிகளில் ஒன்றாகும். பெண்களைக் கவரும் வகையில் காதல்
காட்சிகளை அமைக்கும் நோக்கில் இந்த மலர் காட்சிகள் படத்தில் இடம்
பெறுகின்றன. மல்ர் அதிக செலவில்லாதது. ஏழைக் காதலனும் தன் காதலிக்கு ஒரு
முழம் பூச்சரம் வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதால்
இக்காட்சிகள் தன் நிதி நிலைக்கு உட்பட்டு இருப்பதால் அவர்களை காதல்
காட்சியில் அதிகளவில் ஒன்றிப்போக வைக்கின்றன. இக்காட்சிகளை காணும்
இளம்பெண்கள் காதலிக்கும் போது மலர்ச்சரம் கோர்த்து சூடி காதலரை
மகிழ்விப்பது தொல்காப்பியர் காலம் தொட்டு நம் பண்பாட்டில் சிறப்பிடம்
பெற்றுள்லது. காதல் கனிந்து திருமணமான பிறகு கணவன் தன் மனைவியுடம்
மகிழ்ச்சியாக பேசும் தருணங்களில் அவள் ஆக்கிப் போடும் உணவும் தொடுத்து
சூடும் பூச்சரமும் வானத்து அமுதத்தை போன்றது என்பானாம்.
''ஏனது சுவைப்பினும் 'நீ கை தொட்டது
வானோர் அமுதம் புரையுமால் எமக்கு'
என அடிசிலும் பூவும் தொடுத்தற்கண்ணும்
புகழ்ந்து மகிழ்வான் என்கிறார் தொல்காப்பியர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு
முற்பட்ட தொல்காப்பியம் அதற்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை
எடுத்துரைக்கிரது. அந்தக் காலத்தில் இளைஞரின் காதல் வாழ்வில் மலர்கள்
பெற்றிருந்த மகிமையை அதன் இன்றியமையாமையை எடுத்தியம்புகிறது.
மலர் உடை
எம் ஜி ஆர் படங்களில் அதிகளவில் மலர்கள் இடம்பெறும் காட்சி .திருமணமான
பின்பு காட்டப்படும் இரவு காட்சி ஆகும். ஆயிரத்தில் ஒருவன் பட்த்தில்
எம் ஜி ஆருக்கு புது ஜோடி அறிமுகம். ஜெயல்லிதாவை வித்தியாசமாவும்
சிறப்பாகவும் காட்ட வேண்டும் என்ற நோக்கில் இருவரும் இணைந்து மண
வாழ்க்கையை தொடங்கும் காட்சியில் அவருக்கு மல்லிகை மலர்களால்
தைக்கப்பட்டது போன்ற ஓர் உடை வடிவமைக்கப்பட்ட்து. அந்த மலர் உடையில்
வரும் ஜெயல்லிதாவை பார்த்து எம் ஜி ஆர்
நாணமோ இன்னும் நாணமோ
என்று எம் ஜி ஆர் கேட்க
நாணுமோ பெண்மை நாணுமோ
தன்னை நாடும் காதலன் முன்னே –
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோஇ நாணுமோ
என ஜெயலலிதா பாடுவதாக ஒரு காட்சி. இந்தப்பாடல் காட்சி இன்றும் பசுமையாக
தமிழ் ரசிகர்கள் மனதில் நிற்கும் காதல் பாட்டு காட்சி ஆகும்.
இதயக்கனி படத்தில் ஆடி மாதம் திருமணமாகி 'ஆவணி மாசம் அஞ்சாம் தேதி' வரை
காத்திருக்கும் எம் ஜி ஆர் – ராதா சலூஜா ஜோடி தேனிலவுக்காக பெங்களூர்
வந்து ஊரைச் சுற்றி பார்த்துவிட்டு இரவு அறைக்குள் வந்த்தும் அங்கு
அவர்களின் படுக்கைஇ மல்ர் படுக்கையாக் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அப்போது எம் ஜி ஆர் அந்த மலர்களை கூட்டி குவித்து ராதாசலூஜாவின் தலையின்
மீது கொட்டுவார்.
இந்த படம் வெளிவந்ததும் எம் ஜி ஆர் ஒரு ரசிகரை பார்த்து 'அம்மா படம்
பார்த்தார்களா' என்று கேட்டார் . 'ஆமாம்' என்றார். 'அம்மா என்ன
சொன்னார்கள்' எனக் கேட்டார். 'வர வர எம் ஜி ஆர் படம் கூட பார்க்க
முடியாது போல' என்று சொன்னார்கள். 'சரி நீ போ' என்று சொல்லிவிட்டு எம்
ஜி ஆர் எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து மீண்டும் பட்த்தில் இருந்து சில
நெருக்கமான காட்சிகளை வெட்டி எடுத்துவிட்டு அனைத்து திரைஅரங்குகளுக்கும்
த்கவல் கொடுத்தார். அந்த காட்சிகளை வெட்டிவிடுங்கள் என்றார்.
தாய்மார் முகம் சுளிக்கும் காட்சிகள் கணவன் மனைவியின் நெருக்கமான
காட்சிகளாக இருந்தால் கூட அவை தன் படத்தில் இடம் பெறக் கூடாது என்பதில்
மிகவும் கவனமாக இருந்தார். பெண்கள் ரசிக்கக்கூடியதாக காதல் காட்சிகள்
இருந்ததால் அவரது படங்கள் திரும்ப திரும்ப பார்க்கப்படுகின்றன.
மலரும் மரபும் தொடரும்............
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|