பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 9)

முனைவர் செ.இராஜேஸ்வரி



பாகம் 2 எம் ஜி ஆர் காதல் பாடல்களில் பூக்களின் பங்கு - 2

பூ என்பது மண்ணும் மரபும் சார்ந்தது;; மணம் நிரம்பியது; வண்ணங்கள் கொண்டது.;. அதன் படைப்பின் நோக்கம் தான் பூத்த செடியை போல இன்னொரு செடியை அல்லது மரத்தைஇ கொடியை உருவாக்க விதை தர வேண்டும். இந்த விதையை உற்பத்தி செய்ய தன் இனத்தை பெருக்க அந்த பூ படைக்கப்பட்டுள்ளதை போல பெண்ணும் படைக்கப்பட்டுள்ளாள். அவளும் தன் குடும்பத்துக்குரிய வாரிசை பெற்று வளர்க்கக் கடமைப்பட்டவள் ஆகிறாள். இதுவே அவளது படைப்பின் நோக்கமும் சமுதாயக் கடமையும் ஆகும். எனவே தான் பெண்னை பூவுக்கு உவமையாக கூறுகின்றனர். பூவும் பெண்ணும் ஒரே இனமாக கருதப்படுகின்றன. மரபு வழியாக வந்த இக்கருத்தை எம் ஜி ஆரும் தன் பாடல்களில் காதல் காட்சிகளில் பெண்கள் விரும்பும் வகையில் பயன்படுத்தியுள்ளார்.

பூ வைத்த பூவை


வையை என்னும் பொய்யா குலக்கொடியான வைகை நதியின் அணைக்கட்டில் மாட்டுக்கார வேலன் படப்பிடிப்பு நடந்த்து. மதுரை மல்லிகைப்பூ இல்லாமல் அங்கு ஒரு காதல் காட்சி எடுக்க முடியுமா? . வேலன் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் இடம்பெறும் காதல் காட்சியில் எம் ஜி ஆர் தன் கை நிறைய மல்லிகை பூக்களை வைத்திருந்து அவ்ற்றை ஜெயல்லிதாவின் தலையில் கொட்டுவார். அதில் இருந்து ஒரு மல்லிகை பூவை கையில் எடுத்து ஜெயலலிதா .

பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூச் சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யூஉ


எனப் பாடுவதாக காதல் காட்சி தொடங்கும். இந்த அணைக்கட்டில் உள்ள ஒவ்வொரு சிலையுடனும் நின்று போஸ் கொடுத்து பாடுவதாக இக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும். (இங்கு இருந்த கிருஷ்ணர், தொழிலாளி குடும்பம் போன்ற சிலைகளை என் மாமா கருப்பையா ஸ்தபதி செய்தவை ஆகும்.)

காதல் பூ


கண்ணன் என் காதலன் பட்த்தில் வாணிஸ்ரீ எம் ஜி ஆருடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார். கதைப்படி பர்மா பெண் என்பதால் அதிகம் கவர்ச்சி காட்டும் வாய்ப்பு அப்படத்தில் அவருக்கு கிடைத்தது. கணகள் இரண்டும் விடி விளக்காக என்று தொடங்கும் ஒரு பாடல் காட்சியில்

முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம் ம் ம் ம் ம்
எண்ணி எண்ணி பார்த்தால் எத்தனை வெட்கம்
இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவா
சொல்லாமால் புரிகின்ற பொருள் அல்லவா


என்ற வரிகளை எம்ஜி ஆரும் வாணிஸ்ரீயும் ஒவ்வொரு வரியாக மாறி மாறி பாடுவர்.. இந்த பல்லவியில் எழுத்துஇ சொல்இ பொருள் என்ற மூன்று இலக்கணங்களும் காதலுக்குள் இருப்பதாக சொல்லப்பட்டன.. இந்த பாட்டுக் காட்சியில் ஒரு கல் மேடையில் காதல என்ற எழுத்துக்கள் பூக்களால் அழகாக அமைக்கப்பட்டிருக்கும. அப்போது எம் ஜி ஆர் .

கண்கள் இரண்டும் விடிவிளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக்
கைகளிரண்டும் தொட்ட சுகமாக்
கலந்திருப்போம் நாம் யுகம் யுகமாக்


என்று பாடி முடிக்கும் போது தன் கையில் இருந்த ஒரே ஒரு பூவை அந்த காதல என்ற பூ அலங்காரத்தின் கடைசி எழுத்தின் மேல் வைத்து அதை காதல் என்று மாற்றிவிடுவார். இது ஒரு நயமான காதல் மலர் காட்சி.

இந்தப்பாட்டும் திருமண நாளிரவை பற்றிய கற்பனை பாடலாக இப்படத்தில் அமைந்தது. . இதில் 'கட்டழகு மட்டும்' என்று பாடும் எம் ஜி ஆர் அடுத்த வரியை வாணிஸ்ரீ பாடுவார் என்று எதிர்பார்ப்பார். ஆனால் நாணம் காரணமாக வாணிஸ்ரீ பாட மறுத்து தலையை அசைப்பார். பின்பு எம் ஜி ஆரே அந்த 'வெட்ட வெளியாக' என்ற வரியை பாடி நடிப்பார். பாட்டில் காட்டப்படும் இந்த காட்சி தமிழ் பெண்ணின் பண்பாட்டை விளக்கும் காட்சி என்பதால் பெண்களை மிகவும் கவர்ந்தது.

கொடுத்தவர் கரமோ தாமரை பூ

எம் ஜி ஆரை ரோஜாப்பூ என்றும் தாமரை பூ என்றும் வருணிப்பது உண்டு. எங்க வீட்டு பிள்ளை பட்த்தில் பெண் வீட்டுக்கு வரும் எம் என் நம்பியாரிடம் மாப்பிள்ளை எப்படி இருப்பார் என்று கேட்கும் போது அவர் ரோஸ் கலந்த சிவப்பு என்பார். பாசம்பட்த்தில் சரோஜாதேவியுடனான் 'பால் வண்ணம் பருவம் கண்டேன்' என்ற ஒரே ஒரு கனவு காட்சி காதல் பாட்டில் சரோஜாதேவி எம் ஜி ஆரை பார்த்து பாடும்போது 'பொன் வண்ணம் அங்கே கண்டேன் பூ வண்ணம் இங்கே கண்டேன்' என்பார். பரிசு படத்தில் சாவித்திரியும் எம் ஜி ஆரும் இட்ம் பெறும்காதல் காட்சியில் எம் ஜி ஆரை பார்த்து,
 
கூந்தல் கறுப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொடுத்தவர் கரமோ தாமரை பூ
ம் ம் ம் ம்

என்பார். பதிலுக்கு எம் ஜி ஆர் பாடும்போது இதே பல்லவியின் இறுதி வரியை கொண்டவள் கரமோ ரோஜாப்பூ என்பார்.

இரவுக்குறியில் செம்பருத்தி மலர்


குடியிருந்த கோயில் படத்தில் ஜெயலலிதாவை இரவில் ரகசியமாக காண வரும் எம் ஜி ஆர் ஒரு செம்பருத்தி பூவைப் பறித்து சன்னல் வழியாக வீட்டுக்குள் எறிவார். அந்த பூ 'சோதனையாக' ஜெயலலிதாவின் அப்பா குடிக்கும் பால் டம்ளரின் மீது வந்து விழும். இதன் பிறகு பல கலாட்டாக்கள் நடந்து முடியும். கடைசியில் இருவரும் தோட்டத்தில் சந்தித்து ஒரு செயற்கை குளத்தின் மீது தொங்கும் ஊஞ்ச்லில் அமர்ந்தபடி,
 
நீயே தான் எனக்கு மணவாட்டி - என்னை
மாலையிட்டு கை பிடிக்கும் சீமாட்டி –
நானே தான் உனக்கு விழிகாட்டி
உன்னை வாழ வைக்க காத்திருகும் வழிகாட்டி


எனப் பாடி மகிழ்வர்.

சங்க இலக்கியத்தில் இரவு குறி ஜஇரவு சந்திப்பு - குறி என்றால் குறியிடம்; இரவு குறி என்றால் இரவில் அவர்கள் சந்திப்புக்கு குறிக்கப்பட்ட இடம்ஸ வரும் தலைவன் பெண் வீட்டின் அருகில் வந்து அவளைச் சந்திக்க வேண்டும்; அதுவும் அவள் வீட்டார் கூப்பிடும் சத்தம் கேட்கும் தொலைவுக்குள் இந்த சந்திப்பு நிகழ வேண்டும் என்று ஒரு வரையறை கொடுக்கப்பட்டிருக்கும்.. இதற்கெல்லாம் வரையறையா? எனக் கேட்டால்இ ஆம் அப்போது தான் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு ; அவள் அவனை வெளியே எங்கும் போய் இரவில் சந்திக்க கூடாது; அது அவளுக்கு ஆபத்தாகப் போய்விடும்.. நம் முன்னோர் தொல்காப்பியம் என்ர இலக்கண நூலில் காதலுக்கும் இலக்கணம் வகுத்து வைத்திருகின்றனர். எம் ஜி ஆர் தனது படங்களில் இந்த இலக்கணத்தை பின்பற்றி காட்சிகளை எடுத்திருக்கிரார். அதனால் அவை மரபு மீறாமல் இருக்கின்றன. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நம்பும்படியாகவும் இருக்கின்றன. தங்களை அந்தக் காட்சியில் இணைத்து பார்க்கவும் உதவுகின்ரன.

தூய்மைக்கு தும்பை பூ


இன்று போல என்றும் வாழ்க படத்தில் ஒரு பட்டிக்காட்டு பணக்காரனாகத் திருமணத்துக்கு பெண் தேடி சென்னைக்கு வருவார். ராதா சலூஜாவின் தோழிகள் எப்படி பெண் வேண்டும் என்று எம் ஜி ஆரை கலாட்டா செய்யும் போது அவரது மணப்பெண் வருணனையில் இதுவரை எவரும் பயன்படுத்தியிராத ஒரு பூ பெயர் இடம்பெறும்.

தும்பை பூ போலே துளசி செடி போலே

ஒரு பெண் தனக்கு மனைவியாக அமைய வேண்டும் எனப் பாடுவார். அக்காட்சியில் கதாநாயகி ராதா சலூஜா வெள்ளை நிரத்தில் நீண்ட உடை ஜமேக்சிஸ அணிந்திருப்பார்..

ஒற்றை ரோஜா பூ


ஒன்றே கால் கோடி வசூல் செய்த படமான இன்று போல் என்றும் வாழ்க படத்தில் சென்னையில் நடக்கும் ஆடம்பரங்கள் பட்டிக்காட்டை சேர்ந்த எம் ஜி ஆருக்கு பிடிக்காது. ஆனால் கதாநாயகி ராதா சலூஜா தன் பிறந்த நாள் விழாவுக்கு எம் ஜி ஆரை அழைத்திருப்பார். அப்போது எம் ஜி ஆர் ஒரு ரோஜாப்பூவை மட்டும் கையில் ஏந்தி வந்து ராதா சலூஜாவுக்கு கொடுத்துவிட்டு வாழ்த்து சொல்வார்.

ஜானகி ராமச்சந்திரன்


எம் ஜி ஆரின் காதல் மனைவி ஜானகி அம்மையார் தலை வாரி கொண்டை போட்டு பூ சூடி இருப்பார். அவர் தலையில் பூ இல்லாமல் அவரை எங்கும் பார்க்க இயலாது. எம் ஜி ஆரோடு இருக்கும் அனைத்து படத்திலும் அவர் தலையில் பூ சூடியிருப்பதை பார்க்கலாம். இறப்பு வீட்டிற்கு எம் ஜி ஆருடன் வரும்போது மட்டும் ஜானகி அம்மையாரின் தலையில் பூ இருக்காது. எம் ஜி ஆர் மறைந்த பிறகு அவர் பூச்சூடவில்லை.. அவர் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆனார். 28 நாட்கள் பதவியில் இருந்தார். அப்போது பல தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்தார். எம் ஜி ஆர் அறிவித்த இலவசக் காலணி திட்டத்தைஇவர் தன் ஆட்சிக் காலத்தில் தொடக்கி வைத்தார். அந்த நாட்களில் அவர் தலையில் பூ கிடையாது. .

ஜெயலலிதா


ஜெயலலிதா சென்னையில் சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்ததால் பள்ளியில் சீருடை அணியும் போது பூ வைக்க அனுமதி இல்லை. அவர் சிறு வயதில் தினமும் பூ வைக்கவில்லை. நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பூச்சூடினார். பின்னர் அதற்கும் பிலாஸ்டிக் பூக்கள் வைக்க தொடங்கிவிட்டார். சினிமா நடிகையான பிறகு விழாக்களுக்கு வரும் போது சடை போட்டிருந்தால் தலை நிறைய பூ வைத்திருப்பார். கொண்டை போட்டால் பூ வைக்க மாட்டார். பொதுவாக அவருக்கு பூ வைக்க பிடிக்காது. நல்ல வாசனை செண்ட்களை மட்டும் பயன்படுத்துவார்.

அரசியலில் முதல் வெற்றிக்கு உதவிய பிளாஸ்டிக் பூ


திண்டுக்கல்லில் முதல் அரசியல் களத்தை சந்தித்தார் எம் ஜி ஆர். அண்ணா திமுக ஆரம்பித்து ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் வந்தது. தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன்னால் உலகம் சுற்றும் வாலிபன் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது. தேர்தலில் ஐந்து அரசியல் கட்சிகள் தனித்தனியாக மோதின. திமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் அண்ணா திமுகவின் வெற்றிக்கு முன்னால் டெபாசிட்டை இழந்தன.

திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் ஒரு வாக்கு சேகரிப்பு புரட்சி செய்தனர். அண்ணாதிமுக சார்புள்ள பெண்கள் அதன் கட்சி சின்னமான இரட்டை இலையுடன் கூடிய ஒற்றை ரோஜாவை தலையில் சூடிய படியே இருந்தனர். இந்த பூவில் இருந்த இரட்டை இலை பார்ப்பவர் கண்களில் பட்டு அண்ணாதிமுகவின் சின்னத்தை நினைவூட்டிய படியே இருந்தது. ஒரு காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் இந்த பூவால் பெரிய பிரச்சனையே வந்துவிட்டது. ஆனால் அந்தப் புது மருமகள் கணவரை பிரிய நேரிட்டாலும் கூட அந்த பூவை அகற்ற மாட்டேன்; எம் ஜி ஆர் மீதான பற்றை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். பெண்களின் இந்த மனஉறுதியும் ஒற்றை ரோஜாவும் திண்டுக்கல் தேர்தலில் எம் ஜி ஆருக்கு அமோக வெற்றியை அளித்தது. அரசியல் பற்றி அதிக ஆர்வமோ விருப்பமோ இல்லாமல் இருந்த பெண்கள் எம் ஜி ஆர் அரசியல் கட்சி தொடங்கியதும் அவரது வெற்றியை தமது வெற்றியாகக் கருதினர். பிளாஸ்டிக்காலான இரட்டை இலையுடன் கூடிய ஒற்றை ரோஜா அண்ணாதிமுகவின் சின்னமாக பெண்களின் கூந்தலில் ஒய்யாரமாக இடம் பெற்றது. எம் ஜி ஆரின் பொது கூட்டங்களுக்கு வரும்போதும் பெண்கள் இப்பூவைச் சூடிக்கொண்டனர்.


                                                                                                               

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்