பெண் இனம் போற்றும் பெருந்தலைவர்
எம்.ஜி.ஆர் (தொடர் - 11)
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்ஜிஆர் படங்களில் அண்ணன் தங்கை பாசம்
எம் ஜி ஆரின் ரசிகர்கள் அவரை நேரில் பார்க்கும்போது அண்ணே என்று தான்
அழைப்பார்கள். பல நடிகர்இ நடிகைகளும் அவரை அண்ணே என்று அழைப்பதுண்டு.
தெலுஙகு சூப்பர் ஸ்டாரும் முன்னாள் முதல்வருமான என் டி ஆர் எம் ஜி ஆரை
அண்ணன்காரு என்று அழைப்பார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் எம் ஜி
ஆரின் மீது நீங்காப் பற்றுடையவர் அவரும் எம் ஜி ஆரை அண்ணா என்று தான்
அழைப்பார். கட்சிக்காரர்களும் அவரை அண்ணே என்று தான் அழைப்பார்கள்.
படங்களில் நகைச்சுவை நடிகர்கள் எம் ஜி ஆரை அண்ணே என்று அழைக்கும்
படங்கள் பல உண்டு.
ஜோதி பிரபாவின் கடிதம்
எம் ஜி ஆர் பெண்களின் மதிப்பையும் அன்பையும் பெற்ற மக்கள் தலைவராக
விளங்கியது பற்றி அறிவதற்கு ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல ஒரு
சகோதரியின் கடிதம் காணக் கிடைக்கிறது. அவர் சத்யா ஸ்டியோவில் வேலை
பார்த்த ஒரே பெண் ஊழியர். எம் ஜி ஆர் அண்ணா திமுக ஆரம்பித்த பிறகு
அவருக்கு நிறைய போன்கால்கள் வந்ததனால் அதனை கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை
டெலிபோன் ஆபரேட்டராக நியமித்தனர். அவர் பெயர் ஜோதி பிரபா. அவர் சினேகிதி
என்ற மகளிர் இதழுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
எம் ஜி ஆர் முதல்வராவதற்குப் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு சத்யா
ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். அங்கு 14 வருடங்கள் வேலை பார்த்த தன்
அனுபவத்தில் எம்ஜிஆரை பற்றி அறிந்துகொண்ட செய்திகளை தொகுத்து ஒரு கடிதம்
வாயிலாக கூறியிருந்தார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் சில
முக்கியமான விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்வோம். எந்த நிலையிலும்
அதிகார தோரணையுடன் இருக்கமாட்டார். ஆடம்பரமாக நடந்து கொள்ள மாட்டார்.
சத்யா மூவிஸின் டெய்லர் ஒருவர் மைசூரில் இறந்துவிட்ட போது அவருடைய
மூன்று பெண் குழந்தைகளுக்கும் எம்ஜிஆர் எவ்வித விளம்பரமும் இன்றி
திருமணம் முடித்து வைத்தார். அவர் சத்யா ஸ்டூடியோவில் இருப்பதாகத்
தெரிந்தால் அங்கு நிறைய குருவிக்காரர்கள் நரிக்குறவர்கள் அவரை
பார்ப்பதற்காக வந்துவிடுவார்கள். அவ்வாறு வரும்போது ஒருநாள் வாயிற்காவல
அவர்களை வெளியேற்ற முனைந்த போது இந்த தகவல் தெரிந் து எம் ஜி ஆர் உடனே
காவல்காரரைச் சத்தம் போட்டு அந்த குருவிகாரர்களையும் நரிக்குறவர்களையும்
உள்ளே வரவழைத்து அவர்களோடு பேசி சிறிது நேரம் இருந்துவிட்டு போட்டோ
எடுத்துக்கொண்டு பிறகு அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களுக்கு காபி
டிபன் கொடுத்து அனுப்பி வைத்தார். தனது அம்மாவின் நினைவு நாள் அன்று
மௌன விரதம் இருக்கும் அவர் தன்னுடைய கழுத்தில் அம்மா படம் பொறித்த டாலரை
அணிந்து இருப்பார். தினமும் அந்த படத்துக்கு சந்தனம் தொட்டு வைத்து
பிறகு தன் பனியனுக்குள் அணிந்து கொள்வார். பெரிய விருந்துகள் அங்கு
நடக்கும் போது அவர் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவர்
சாப்பிடுவதையும் பார்த்து அவர்களிடம் அன்பாக பேசி நிறைய சாப்பிடுங்கள்
என்று சொல்வார்.
ஒருமுறை ஜோதி பிரபா டெலிபோனில் கருணாநிதி பேசினார் என்று சொன்னபோது
எம்ஜிஆர் அவ்வாறு சொல்லக்கூடாது கலைஞர் என்றுதான் அவரை அழைக்க வேண்டும்
என்று திருத்தி இருக்கிறார். வயதானவர்கள் ஏழையாக இருந்தாலும்
பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களிடம் அவர் மிகவும் மரியாதையுடன் நடந்து
கொள்வார். மற்றவர்களும் மரியாதையுடன் நடக்க வேண்டும் என்பதை
வலியுறுத்துவார்.
ஒரு முறை அவர் வீட்டில் ஒரு பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்திருந்த போது
கேக் வெட்டுவது மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பதும் மேலைநாட்டு பண்பாடு அதை
நாம் செய்யக்கூடாது. எரிகின்ற விளக்கை ஊதி அணைப்பது சரியல்ல. எனவே
விளக்கை ஏற்றி வைத்து கடவுளை வணங்கி கோவிலுக்கு போய்விட்டு வந்து
பெரியோர்களிடம் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வாங்கிக் கொண்டு தன்னால்
இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்ய வேண்டும். அப்படித்தான்
பிறந்தநாள் கொண்டாடவேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
ஜோதி பிரபாவின் சித்தப்பாவின் பெயர் ராமலிங்கம். அவர் தான் ஜோதி பிரபாவை
எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். எம் ஜி ஆர்
இராமலிங்க வள்ளலார் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததாள் ராமலிங்கம்
என்று பெயரிட்டு அழைக்காமல் அவரை செல்லமாக வள்ளலார் என்றே அழைத்து
வந்தாராம். இவை அனைத்தும் அவருடைய நீண்ட கடிதத்தில் இருந்து
எடுக்கப்பட்ட சாராம்சம் ஆகும் இதுபோல் நிறைய சம்பவங்கள் கடிதங்கள்
நமக்கு ஏராளமாக பத்திரிகைகள் வாயிலாகவும் பேட்டிகள் வாயிலாகவும்
கிடைக்கின்றன இந்த சினேகிதி பத்திரிகையை வாசிக்கும் பெண்கள் ஜோதி
பிரபாவின் கடிதத்தை மூலமாக எம்ஜிஆரை பற்றி நிறைய தெரிந்து கொள்வார்கள்.
ஏற்கனவே எம் ஜி ஆரை பற்றி தெரிந்தவர்கள் அவருடைய மனிதாபிமானம் அன்பு
அடக்கம் குறித்து இன்னும் மகிழ்ச்சி அடைவர்.
எம் ஜி ஆரின் அன்பும் அடக்கமும்
பெண்களின் மனதை கவர்ந்தராக அவர்களின் மதிப்பை பெற்றவராக எம்ஜிஆர்
விளங்குவதற்கு முக்கிய காரணம் அவரிடத்திலிருந்த அன்பும் அடக்கமும்
பெண்கள்பால் அவர் வைத்திருந்த மரியாதையும் ஆகும். எம்ஜிஆர் எந்த
நிலையிலும் தன்னை பற்றி பெரிய அளவில் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை.
எம் ஜி ஆர் தன்னுடைய படங்களில் அன்பான அண்ணனாக நடித்திருப்பதை பார்த்தது
இளம்பெண்கள் தனக்கு இப்படி ஒரு அண்ணன் இருநதிருந்தால் நன்றாக இருக்குமே
என்று நினைக்க வைத்திருப்பார். இதற்கு முக்கிய காரணம் மற்ற நடிகர்கள்
படங்களில் அண்ணனும் தங்கையுமபாசமாக வாழ்ந்தும் துன்பம் அனுபவிப்பர்.
ஒருவரோ அல்லது இருவருமோ செத்து போவார்கள். ஆனால் எம் ஜி ஆர் பட்டத்தில்
அப்படி அமைய கிடையாது எம் ஜி ஆர் தன தங்கைகளை வாழ வைப்பார். சாக விட
மாட்டார். இது தான் ஒரே வித்தியாசம்.
படங்களில் வரும் தங்கைகள்
எம் ஜி ஆருடைய படங்களில் பெரும்பாலும் அப்பா அண்ணன் தம்பி தங்கை
போன்றோர்இ அதிக படங்களில் இருக்க மாட்டார்கள். தங்கை கதாபாத்திரங்கள்
இடம் பெற்ற படங்கள் என்றால் என் தங்கை ஜ31-5-1952ஸ அரசிளங்குமரி
ஜ11-1-1961ஸஇ காஞ்சித்தலைவன் ஜ26-10-1963ஸஇ தேர்த்திருவிழா
ஜ23-2ஸ்ரீ1908ஸஇ கணவன் ஜ15-8-68ஸஇ பணக்கார குடும்பம் ஜ23-4-64ஸஇ
தனிப்பிறவி ஜ16-9-1966ஸ என் அண்ணன் ஜ12-5-1970ஸ எங்கள் தங்கம்
ஜ9-10-1970ஸ சங்கே முழங்கு ஜ4-2-1972ஸ நான் ஏன் பிறந்தேன் ஜ9-6-1972ஸ
இதயவீணை ஜ20-10-1972ஸ நினைத்ததை முடிப்பவன் ஜ9-5-1975ஸ ஆகியவற்றை
கூறலாம்.
தங்கையாக விஜயகுமாரி
காஞ்சித்தலைவன்இ தேர்த்திருவிழா, கணவன் ஆகிய மூன்று படங்களிலும்
விஜயகுமாரி எம்ஜிஆருக்கு தங்கையாக நடித்து இருப்பார். இவற்றில் காஞ்சித்
தலைவனில்
''ஒரு கொடியில் இரு மலர்கள் மலர்ந்ததம்மா; மலர்ந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா
என்ற பாடல் பலரின் மனம் கவர்ந்த பாடல் ஆகும். தேர்த்திருவிழாவில் சினிமா
பட இயக்குனர் முத்துராமனை நம்பி தன் பெண்மையை பறிகொடுத்த தன் தங்கையை
வாழவைப்பதற்காக சென்னைக்குப் போய் அந்த இயக்குனரை கண்டுபிடித்து
இருவரையும் சேர்த்து வைப்பதுதான் முக்கிய கதையாகும். கணவன் படத்தில்
திருமணமாகாத விஜயகுமாரி ஒரு அனாதைக் குழந்தையை எடுத்து வளர்க்க போய்அவரே
அக்குழந்தையின் தாய் என்று தவறாக நினைத்து பெண் பார்க்க வந்தவர்கள்
திரும்பிப் போய் விடுவார்கள். அந்த அனாதை குழந்தையை அதனுடைய உண்மையான
தாயிடம் ஒப்படைத்துவிட்டு முதலில் பெண் பார்க்க வந்தவர்களை எம் ஜி ஆர்
அழைத்துவந்து உண்மையை எடுத்துச் சொல்லி அந்த மாப்பிள்ளையோடு தன்
தங்கைக்கு திருமணத்தை முடித்து வைப்பார் என்றார்.
எம் ஜி ஆரோடு விஜயகுமாரியை ஜோடி சேர்க்கலாம் என்று தயாரிப்பாளர்கள்
கருதிய போது எம் ஜி ஆர் என் தம்பி எஸ் எஸ் ஆர் விஜயகுமாரியை ஆசை ஆசையாக
காதலித்து திருமணம் செய்திருக்கிறார் அதனால் அவருடன் ஜோடியாக நடிக்க
கூடாது என்று சொல்லிவிட்டார். நடிப்பு என்றாலும் அதிலும் ஒருகன்னியம்
இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர் எம் ஜி ஆர். இதை விஜயகுமாரியும்
ஒரு டிவி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். அதனால் அவருக்கு தங்கை
வாய்ப்பு அதிகமாகக் கிடைத்தது. மூன்று படங்களில் எம் ஜி ஆருக்கு
தனகையாக நடித்திருந்தார். விவசாயி படத்தில் கே ஆர் விஜயாவுக்கு
அக்காளாக நடித்திருந்தார்.
எம் ஜி ஆர் படத்தில் தங்கைகளின் பொது இயல்பு.
பொதுவாக எம்ஜிஆர் படங்களில் அவரது தங்கைமார்இ மிக நல்லவர்களாக
அமைதியானவர் அன்பானவர் அண்ணன் மீது மிகுந்த பாசம் உடையவர் மற்றும்
அண்ணனை முழுக்க முழுக்க நம்பி இருப்பவர்களாகவே காட்டப்படுவார்கள்.
இதற்கு விதிவிலக்காக அமைந்த ஒரே ஒரு படம் நான் ஏன் பிறந்தேன். அதில்
தங்கையாக நடித்திருக்கும் ஜி. சகுந்தலா மாற்றாந்தாயின் மகளாக வருவார்.
அவர் வாயாடியாக அண்ணன் அனுப்பி வைக்கும் பணத்தை திருடிக் கொள்ளும்
திருடியாக உணவுப் பொருட்களை ஒளித்து வைத்துவிட்டு தன் அண்ணன்
குழந்தைகளுக்கு தன் தம்பி தங்கைகளுக்கும் தராத ஒரு சுயநலக்காரியாக
நடித்திருப்பார். இந்த ஒரு தங்கையை அதுவும் மாற்றாந்தாயின் மகளாக வரும்
இவரைத் தவிர மற்ற அனைத்து படங்களிலும் எம்ஜிஆரின் தங்கை கதாபாத்திரம்
ஒரு முன்மாதிரி பாத்திரமாகவே அமைக்கப்பட்டிருக்கும்.
முன்மாதிரி இளம்பெண்ணாக வரும் தங்கைகள்
எம் ஜி ஆரின் தங்கை என்றால் அவள் ஒரு முன்மாதிரியான இளம் பெண்ணாகவே தன்
படத்தில் அமைவதைத்தான் அவர் விரும்பினார். அடங்காப்பிடாரியான பெண்
கதாபாத்திரங்களை அவர் தன் படத்தில் அமைப்பது கிடையாது. மிக அரிதாக ஓரிரு
படங்களில் ஆரம்பத்தில் கதாநாயகிகள் அப்படி இருப்பதுண்டு. பொதுவாக
எம்ஜிஆர் படத்தில் கொலைகாரி கொள்ளைக்காரி போன்றவர்களை கெட்ட குணங்களும்
கேவலமான எண்ணங்களும் கொண்ட பெண்களை பார்க்க இயலாது. இதுவே அவர் பெண்ணின்
பெருமையை நிலை நிறுத்த வேண்டும் என்று நினைப்பதற்கான ஒரு சான்றாக
அமைகிறது இதய வீணை மற்றும் இதயக்கனியில் வில்லிகளாக வரும் பெண்களைக்
கூட அவர் வெறுக்கத்த்தக்க வகையில் அமைக்கவில்லை. கேட்டவர்கள் என்று
நினைக்கும்படியாக மட்டுமே அமைத்திருந்தார். .
முன்மாதிறி அண்ணனாக எம் ஜி ஆர்
எம்ஜிஆர் படங்களில் வரும் தங்கைகள் விதவை கிடையாது. வாழாவெட்டியாக
வந்திருந்தாலும் எம்ஜிஆர் முயன்று அவர்களை வாழ வைத்து விடுவார். கணவனோடு
சேர்த்து வைத்து விடுவார். அதுவே அவரது முதல் கடமையாக இருக்கும். எனவே
ஒரு குடும்பத்தில் தன்னை நம்பியிருக்கும் தாயையும் தங்கையையும்
காப்பாற்ற வேண்டியது அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டியது ஒரு
ஆணின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்பதை அவர் தன் படங்களில் ஆழமாக
வலியுறுத்தினார். ரசிகர்களுக்கு எம்ஜிஆரை போன்ற ஒரு அண்ணன்
இருந்திருந்தால் நம்முடைய வாழ்க்கை சிறக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்
என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே தோன்றிவிட்டது.
கொடுமைக்காரப் பெண்கள் கிடையாது
எம் ஜி ஆர் படத்தில் தங்கையை கொடுமைப்படுத்தும் கொடுமைக்கார அண்ணி 'மூலி
அலங்காரிகள்'' கிடையாது. சொத்து பிரச்சனை செய்யும் அக்காள் தங்கை
கிடையாது. சொத்துக்காக கொலை செய்யும் பெண்இ சண்டையிடும் பெண்இ
குடும்பத்தில் கோள் மூட்டும் எந்தப் பெண்ணும் எம்ஜிஆர் படத்தில்
இருக்கமாட்டார். நடத்தை கேடு உள்ள தங்கைகளும் கிடையாது. எம் ஜி ஆர்
குடும்பத்தைச் சேர்ந்த வேறு பெண்களும் மோசமானவர்களாக இருக்கமாட்டார்கள்.
என் தங்கை படத்தில் எம் ஜி ஆர்
எம்ஜிஆர் படத்தில் என் தங்கை தவிர வேறு எந்தப் படத்திலும் தங்கைமார்
இறந்து போகவில்லை. இது மிகப் பழைய படம். பொதுவாக எம் ஜி ஆர் படங்களில்
தன்கைமார்களை வாழ வைக்க வேண்டும் என்பதே எம்ஜிஆரின் கொள்கையாக இருக்கும்.
எம்ஜிஆர் படத்தில் அவருடைய குடும்பத்தில் பெண்களுக்குள் சண்டை போட்டுக்
கொள்வது கிடையாது மாமியார்-மருமகள் சண்டை கூட இருப்பதில்லை
என் அண்ணன் படத்தில் வரும் மாமியார் மருமகளை தன் மகள் போல பாவிப்பார்
தன் கணவனை கொன்றவனின் மகள் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணை விலக்கி
வைத்து விடுவார். இது மாமியார் மருமகள் பிரச்சினை கிடையாது. கணவனை
கொன்ற கொலைகாரனின் மகள் என்பதனால் அந்தப் பெண்ணை விலக்கி வைத்து
விடுவார். கொடுமைக்கார மாமியார் படத்தில் இல்லை. படத்தில் எம் ஜி ஆரால்
தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையும். எனவே படம் பார்க்கும் இளம்பெண்களுக்கு
எம்ஜிஆர் மீது மிகுந்த நம்பிக்கையும் நன்மதிப்பும் ஏற்பட்டது.
இதய வீணை என்ற ஒரு படத்தில் மட்டும் தங்கையின் கணவராக நடித்த
சிவகுமார்இ எம்ஜிஆர் தன் சொந்த மைத்துனர் என்பது தெரியாமல் அவர் மீது
சந்தேகப்படுவார். அதற்கான சூழநிலைகளும் படத்தில் இருக்கும். சங்கே
முழங்கு படத்தில் எம்ஜிஆர் கொலைகாரர் என்ற செய்தியை அறிந்த பிறகு அவர்
தங்கையின் கணவர் சொத்துக்கள் கிடைக்காது என்ற காரணத்தினால் எம்ஜிஆரின்
தங்கைக்கு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் அலட்சியப்பதுத்துவார்.
பின்பு உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்டு தன் மனைவியை நல்ல முறையில்
வைத்து குடும்பம் நடத்துவார்.
வறுமையிலும் செம்மையாக வாழும் தங்கைமார்.
எம் ஜிஆர் படங்களில் வரும் தங்கைமார் பசியாலும் நோயாலும் வாடினாலும்
அவர்கள் நன்னடத்தையும் அன்பாலும் அறத்தாலும் ரசிகர்களின் மதிப்பை
பெற்றவர். சங்கே முழங்குஇ நான் ஏன் பிறந்தேன்இ படங்களில் வரும் இ.வி
சரோஜாஇ ஜெய கௌசல்யாஇ குட்டி பத்மினி போன்றோர் மிகச் சிறப்பாக தங்கை
கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.
தங்கையின் காதலும் திருமணமும்
தங்கையின் திருமணம் பல படங்களில் ஒரு பிரச்சனையாக காட்டப்பட்டிருக்கும்.
தங்கையின் காதல் அதைத் தொடர்ந்து வரும் திருமண பிரச்சனை திருமணத்துக்கு
பின்பு சேர்ந்து வாழ முடியாமல் கணவரோடு ஏற்படும் பிணக்கு போன்றவை
நான்கைந்து படங்களில் முக்கிய சிக்கலாக இடம்பெற்றதுண்டு.
அரசிளங்குமரி பத்மினி வேலைய்யா என்பவனை ஒரு போர்வீரனாக நினைத்து
காதலித்த பின்பு அவன் அவளை கைவிட்டுவிட்டு அந்த நாட்டின் அரசிளங்
குமரியை மணந்துகொண்டு நாட்டின் அரசனாக வேண்டும் என்று திட்டம்
தீட்டுவான். அப்போது எம்ஜிஆர் புகுந்து தளபதியாக இருக்கும் அவனை அழைத்து
வந்து தன தங்கையுடன் சேர்ந்து வாழ வைப்பார். இதில் பத்மினியின் ஜோடியாக
நம்பியார் நடித்திருப்பார்
கெட்டவர்களிடம் இருந்து தங்கை கணவர்களை
மீட்டல்
தனிப்பிறவி படத்தில் எம் ஜி ஆர் தன தங்கையான ரேவதியை அவர் காதலிக்கும்
ஆனந்தனுக்கே திருமணம் செய்து வைத்துவிடுவார். அதுவரை தாடி வளர்த்து
வருவார். தங்கை திருமணம் முடிந்ததும் எடுப்பேன் என்பார். பின்பு
எடுத்துவிடுவார். பின்பு தன் தங்கையின் கணவன் கொள்ளைக் கூட்டத்தில்
சேர்ந்து இருப்பதை அறிந்த எம் ஜி ஆர் அவரை அந்த கூட்டத்திலிருந்து
விலக்கி வெளியே கொண்டுவர அரும்பாடு படுவார். தங்கைக்கு தெரியாமலேயே
இந்த காரியத்தை அவர் செய்து முடிப்பார்.
எங்கள் தங்கம்
எண்கள் தங்கம் படம் எம் ஜி ஆர் கருணாநிதியின் வீட்டுக்கடனை
அடைப்பதற்காக இலவசமாக நடித்து கொடுத்த படமாகும். இப்படத்திலும் கண்
தெரியாத தங்கை புஷ்பலதாவின் கணவனாக வரும் ஏவிஎம் ராஜன் பூட்டு
திறப்பதில் கில்லாடி என்பதால் கொள்ளைக் கூட்டம் அவரை அழைத்து பூட்டுகளை
திறக்க சொல்வதை அறிந்த எம் ஜி ஆர் அவர் செய்த தவறுக்கு தான் பழி
ஏற்றுக்கொண்டு திருடன் என்ற பெயரில் ஒளிந்து மறைந்து வாழ்ந்து பின்பு
உண்மையை கண்டறிந்து தன் தங்கையையும் தங்கை கணவரையும் சேர்த்து வைப்பார்.
தனிப்பிறவிஇ எங்கள் தங்கம் ஆகிய இரண்டு படங்களிலும் சந்தர்ப்பவசத்தால்
தங்கையின் கணவர்கள் கெட்டவர்களிடம் சிக்கிக் கொள்வார்கள். அப்போது
அவர்களை மீட்டு கொண்டு வந்து தங்கையின் கண்ணீரைத் துடைப்பது அன்பான
அண்ணனின் பணி என்ற பொறுப்பை நிறைவேற்றி காட்டுவார்.
தந்தைக்கும் தங்கைக்கும் மறு வாழ்வு
என் அண்ணன் படத்தில் செ ய்யாத கொலைக்கு பொறுப்பேற்று சிறையில் இருக்கும்
தன் தந்தையின் மீது சுமத்தப்பட்ட கொலைப்பழியை நீக்கி உண்மையான
குற்றவாளியை கண்டுபிடிப்பார். தன் தங்கையின் மாமனாரை கொன்றவர் தன்
தகப்பன் அல்ல என்பதை நிரூபித்து தன் தங்கையை மீண்டும் அவள் மாமியார்
வீட்டிற்கு போய் வாழ வைப்பார் கணவனோடு இணைந்து வாழ வைப்பார். இதில்
தந்தையின் மீதுள்ள கொலைப்பழியும் நீக்கப்பட்டது; தங்கையின் கண்ணீரும்
துடைக்கப்பட்டது. தங்கை மீண்டும் தன் கணவனோடு சேர்ந்து வாழ்கிறார்.
இந்தப் படம் நாகேஸ்வரராவ் நடித்து தெலுங்கில் வெளிவந்த ஒரு படத்தின் மறு
படைப்பாகும். பொதுவாக தெலுங்கில் என்டிஆர் நடிக்கும் படங்களை தமிழில்
எம்ஜிஆர் நடித்து படைப்பாக வரும் ஆனால் இந்தப் படம் அண்ணன் தங்கை
பாசத்தை விளக்கும் ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது.
காமெடியனுக்கு ஜோடியான தங்கை
பணக்கார குடும்பம் படத்தில் வரும் தங்கையான மணிமாலா படத்தின்
ஆரம்பத்தில் தன் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதை
அறிந்ததும் கோபித்துக் கொண்டு கிளம்பும் அண்ணனோடு சேர்ந்து இவரும்
வீட்டைவிட்டு வெளியேறி விடுவார். இருவரும் நாகேஷின் வீட்டில் தங்கி
இருப்பார்கள். மணிமாலா நாயரை காதலிக்க தொடங்கி விடுவார். எம்ஜிஆர்
தங்கையின் திருமணத்தையும் நடத்தி வைத்தார் சரோஜாதேவி எம்ஜிஆருக்கு
ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார். தங்கை மணிமாலா சரோஜாதேவியின்
கல்லுஉரி தோழியாக நடிதத்தார்.
படத்தில் சரோஜாதேவியின் குழுவுக்கும் மணிமாலாவின் குழுவுக்கும் கல்லூரி
நாட்களில் நடக்கும் சடுகுடு போட்டி அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கர பக்கத்துல காத்திருப்பேன் வாடி
என்ற பாடல் எல்லோரது மனம் கவர்ந்த பாடல் ஆகும். இதில் மணிமாலா தமிழ்
நாட்டைப் பற்றியும் சரோஜாதேவி கர்நாடகாவை பற்றியும் பாடுவதாக பாடல்
வரிகளை கவிஞர் எழுதியிருப்பார்.
காவிரிப்பூம்பட்டினத்தை பார்த்து இருக்கியாடி
கண்ணகி வீடு எங்கள் வீட்டுப் பக்கம் தாண்டி
என்று மணிமாலா பாடவும் அதற்கு பதிலாக சரோஜாதேவி
காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலால புலிகளை மிதிச்சவ தாண்டி
சீரங்க பட்டணத்தை பார்த்து இருக்கியாடி
திப்பு சுல்தான் பிறந்தது எங்க ஊர் தாண்டி
என்று கர்நாடகாவின் பெருமைகளை சரோஜாதேவி பாடுவதாக அமைந்திருக்கும் இந்த
பாடல் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்ட பாடலாகும். இபபடத்தில் தங்கை
கதாபாத்திரத்தால் எவ்வித துன்பமும் ஏற்படவில்லை மகிழ்ச்சியான நகைச்சுவை
ஜோடியாக மணி மாலாவும் நாகேஷ் இந்த படத்தில் இடம் பெற்றார்கள்.
என தங்கையின் கதையும் எம் ஜி ஆரின் இரக்க குணமும்
1952 இல் வெளிவந்த என் தங்கை என்ற படம் 350 நாள் ஓடிய படம். உலகம்
சுற்றும் வாலிபன் அடுத்தபடியாக அதிக நாள் ஓடிய படம். இப்படத்தில் எம்
ஜி ஆருக்கு தங்கையாக நடித்தவர் பாவாடை சட்டை அணிந்து இருக்கும் சிறு
பெண்ணாக வந்த இ. வி சரோஜா ஆவார். இவருக்கு பார்வை கிடையாது. பார்வையற்ற
பெண்ணான சிறுமியை அவள் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர் வறுமையில் பாதுகாத்து
கொண்டுவருவதாக அமைந்திருக்கும். தங்கை இறந்து போவதாக அமைந்த ஒரே படம்
இதுதான். அதுவும் தங்கை பசியால் இறந்து போவாள்.
தங்கைக்கு உணவு வாங்கி வரும் வேளையில் எதிரே வரும் ஒருவர் ''ஐயா
பசிக்குது' என்று கையேந்தி கேட்கும்பொழுது எம்ஜிஆர் தன் கையிலிருந்த
உணவை அவரிடம் கொடுத்து விடுவார். கொடுத்துவிட்டு வேறு உணவு வாங்க
காசில்லாமல் திரும்பி தங்கையிடம் ஓடி வருவார். தங்கை பசியால் இறந்து
விடுவாள். பசி பசி என்று கதறிய தங்கைக்காக வாங்கி வந்த உணவை தன்னலம்
கருதி அவளுக்கு கொண்டு போகாமல் எதிரே வந்தவர் பசி என்று சொல்லியதும்
அவரிடம் கொடுத்து விடும் காட்சி நெஞ்சை தொடும் காட்சியாகும் காண்பவர்
உள்ளத்த்தை நெகிழச்செய்யும் காட்சியாகும்.
என் தங்கை படம் எம்ஜிஆரின் ஆரம்ப நாட்களில் வந்தது என்றாலும்
அதுவும்கூட எம்ஜிஆரின் கொடைத்தன்மை தன்மையை பரப்புவதற்கு அச்சாரம்
இட்டது. இப்படத்தில் எம்ஜிஆரின் பெயர் ராஜேந்திரன் அவருடைய அண்ணன் எம்ஜி
சக்கரபாணி எம் ஜி ஆரின் சொத்தை அபகரிக்கும் வில்லன் சித்தப்பாவாக
நடித்திருப்பார். அதனால் இவர் குடும்பம் வறுமை பசி பட்டினி என்று
அவதிப்படு இப்படம் வந்த போது இவருடைய அண்ணனுக்கு ஒரு ஆண் குழந்தை
பிறந்தது. அந்த குழந்தைக்கு எம் ஜி ஆர் என் தங்கை படத்தின் ராஜேந்திரன்
என்று தன் கதாபாத்திர பெயர் சூட்டி மகிழ்ந்தார். எம்ஜிஆரின் அண்ணன்
குழந்தைகளுக்கெல்லாம் எம்ஜிஆர் தன் படத்தின் பெயர்கள் சூட்டினார்
இலங்கையில் இப்படம் ஒரு வருடம் ஓடியதாக சொல்வார்கள் அங்குள்ள
தமிழர்களின் குடும்ப வாழ்க்கையை இப்படம் எடுத்துக்காட்டுவதாக
அமைந்திருந்தது.
இதே வருடத்தில் தான் சிவாஜி திரையுலகில் பராசக்தி மூலம் புகுந்தார்.
அந்தப்படமும் நூறு நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. அந்த சமயத்தில் அண்ணன்
தங்கை பாசம் சொல்லும் கதைகள் கிராமப்புறங்களில் நல்லதங்காள் கதையை
நினைவுபடுத்துவதாக அமைந்திருந்ததால் வெற்றி நடை போட்டன.
இன்னொரு மாற்று திறனாளி தங்கை
எம்ஜிஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் இந்தியில் வந்த சச்சா ஜூட்டா
ஜஉண்மையும் பொய்யும்ஸ என்ற படத்தின் மறு படைப்பாகும். இப்படத்தில்
மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளான மாற்றுத்திறனாளி தங்கையாக வரும் சாரதா
மிக அருமையாக நடித்திருப்பார். அவருடைய நடிப்பின் சிறப்பை கண்ட எம்ஜிஆர்
படம் முழுவதும் அவருக்கு காட்சிகள் அமையும்படி அவருடைய கதாபாத்திரத்தை
அதிகப்படுத்தும் இயக்குனரிடம் எடுத்துக் கூறினார்.
ஜமேலும் இந்தப் படம் முடிந்ததும் அவருக்கு சொந்த அன்பளிப்பாக சில ஏக்கர்
நிலம் கொடுத்ததாகவும் அந்த நிலத்தை எக்காரணம் கொண்டும் தான் உயிரோடு
இருக்கும் வரை விற்கக் கூடாது என்றும் சொந்தப் படம் எடுக்கக் கூடாது
என்றும் இரண்டு உறுதிமொழிகளை அவரிடம் பெற்றுக்கொண்டதாகவும் அந்த இடத்தை
இப்போது அவர் விற்பதற்கு ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஒரு நிலத் தரகர்
தெரிவித்தார் இந்த செய்தியில் எத்தனை சதவீதம் உண்மை என்பது தெரியாது
ஆனாலும் இது ஒரு தகவல்ஸ இப்படத்தில் வரும் தங்கை சாரதாவுக்கு ஜோடி
நம்பியார். மற்ற படங்களில் வில்லனாக வரும் நம்பியார் நினைத்தை
முடிப்பவன் படத்தில் நல்லவராக நடித்திருப்பார். போலீஸ் அதிகாரியாக
நடித்திருப்பார்.
தங்கையின் திருமண வாழ்த்து பாடல்கள்
எம்ஜிஆர் படங்களில் இதயவீணை படத்திலும் நினைத்ததை முடிப்பவன் படத்திலும்
இரண்டு திருமண வாழ்த்து பாடல்கள் இடம்பெற்றன. இதே நிலையில் தன் சொந்த
தங்கையான லட்சுமியின் திருமணத்திற்கு நேரடியாக வர இயலாமல் ஒரு சாமியாரை
போல மாறுவேடம் பூண்டு வந்து
திருவளர்ச்செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
இருவிழி போலே இருவரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
என்ற இப்பாட்டு இன்றைக்கும் திருமண வீடுகளில் தாலி கட்டி முடிந்ததும்
பாடப்படுகிறது.
நினைத்ததை முடிப்பவன் படத்தில் நடக்க தடுமாறும் தன் தங்கையை பணத்தாசை
பிடித்த மாற்றான் தாயிடம் விட்டு வந்த எம்ஜிஆர் தன் தங்கைக்கு
நல்லபடியாக பணம் சேர்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற
எண்ணத்துடன் நகரத்த்டுக்க் வருகிறார். அங்கு யாரோ ஒரு பெண்ணின்
திருமணத்தின் போது தன் தங்கையை அந்த மணப் பெண்ணை கற்பனை செய்து கொண்டு
மணமக்களை வாழ்த்திப் பாடுவதாக அமைந்த பாடல்
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
கொஞ்சிடும் வண்ண தங்கையின் முகத்தில்
குங்குமம் சிரிக்கின்றது
இப்பாடல் காட்சி தாம்பரம் ராணுவப்பயிற்சி பள்ளியில் சிறப்பு அனுமதி
பெற்று எடுக்கப்பட்டது. எம் ஜி ஆர் இசைக்கருவி வாசிப்பவராக இருந்ததனால்
அங்குள்ள பேண்ட் வாத்திய கோஷ்டி சேர்ந்து அவர்களின் இசை கருவிகளை வாங்கி
வாசித்தபடி செல்வார். இந்தப் பாட்டும் இன்றைக்கும் திருமண வீடுகளில்
திருப்பூட்டு முடிந்ததும் இசைக்கப்படுகிறது.
தங்கை கதாபாத்த்திரத்துக்கு கௌரவம் அளிக்கும் வகையில் இப்பாடல்கள்
இரண்டும் அமைந்துள்ளான. எம் ஜி ஆரே தன தங்கையின் திருமணத்தில் வந்து
வாழ்த்தி பாடுவதாக இப்பாடல்கள் திருமண மண்டபத்தில் ஒலிக்கின்றன.
அக்காள் தம்பி பாசம்
எம்ஜிஆர் நடித்த படங்களில் மூன்று படங்களில் மட்டும் அவருக்கு அக்காள்
கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. அந்தப் படங்களிலும் அக்கா கதாபாத்த்திரம்
சோகமாகவே இருக்கும். பெரிய இடத்துப் பெண்இ எங்க வீட்டு பிள்ளைஇ
ரிக்க்ஷாக்காரன் ஆகிய படங்களில் அக்காள் கதாபாத்திரங்கள் உள்ளன.
இவற்றில் மூன்று அக்காளுமே துன்பப்படுவார்கள். இவர்களின் கண்ணீரை எம்
ஜி ஆர் துடைப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கும்.
பெரிய இடத்துப் பெண் படத்தில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான
ராமண்ணாவின் அக்கா டி ஆர் ராஜகுமாரி எம்ஜிஆரின் அக்காவாக
நடித்திருப்பார். இருவருக்கும் சேர்ந்து ஓரிரு காட்சிகள் மட்டுமே உண்டு.
அவர் அக்காவை படத்தில் வில்லனாக வரும் கதாநாயகியின் அப்பா எம்ஆர் ராதா
கெடுத்துவிட்டதால் அவர் எம்ஆர் ராதா அவை குத்திக் கொலை செய்ய வேண்டும்
என்ற உணர்வோடு ஒளிந்து வாழ்ந்து கொண்டிருப்பார். இந்த உண்மை தெரிந்ததும்
அக்காவுக்கு நீதி கிடைக்கும் வரை எம்ஜிஆர் திருமணம் செய்துகொண்ட தன்
மனைவி சரோஜா தேவியை விலக்கி வைத்துவிட்டு வில்லனை பழிவாங்கி விட்டு அதன்
பின்பு மனைவியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார். ஆனால்
இவருக்கு பதிலாக இவருடைய அக்காவே வந்து எம் ஆர் ராதா குத்திக் கொன்று
விடவார்.
ரிக்ஷாக்காரன் படத்தில் எம் ஜி ஆரின் அக்காவான ஜீ சகுந்தலாவை திருமணம்
செய்து கொள்வதாக கூறி மேஜர் சுந்தர்ராஜன் ஏமாற்றி விடுவார். சகுந்தலா
குழந்தை பெற்ற பின்பு அவருக்கு அசோகன் உணவில் விஷம் வைத்து விடுவார்.
இதை அறிந்ததும் சகுந்தலா தன் தோழியான பத்மினியிடம் வந்து தன் குழந்தையை
கொடுத்துவிட்டு இறந்துபோவார். அந்தக் குழந்தையை வளர்த்து பின்னர்
எம்ஜிஆருக்கு திருமணம் செய்து கொடுப்பார். தன் அக்காவை ஏமாற்றிய நீதிபதி
மேஜர் சுந்தர்ராஜனை மிரட்டி ஏமாற்றிக கொண்டிருந்த அசோகனை எம்ஜிஆர்
நீதியின் கரங்களில் ஒப்படைப்பார்.
எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் பூஞ்சோலை ஜமீனின் குழந்தைகளான ராமு
எம்ஜிஆரும் அவரது அக்கா பண்டரிபாயும் நம்பியாரின் கைகளில் சிக்கி பயந்து
கொண்டு வாழ்ந்து வருவார்கள். அப்போது அவர்கள் இருவரையும் கெட்டவர்களிடம்
இருந்து மீட்டு நம்பியாரையும் திருத்தி பூஞ்சோலை எஸ்டேட் பணியாளர்களின்
துன்பத்தையும் போக்கி அனைவருக்கும் நல் வாழ்க்கை தருபவராக இன்னொரு எம்
ஜி ஆர் இளங்கோ வருவார்.
எம்ஜிஆர் படங்களில் வந்த அக்காள்கள் மூவரும் மிகுந்த துன்பத்தை
அனுபவிப்பவர்களாகவே இருந்தனர். மூவரின் துன்பத்தையும் தீர்த்து வைத்தவர்
எம்ஜிஆர்.
நிறைவு:
எம் ஜிஆர் படங்களில் வரும் அக்கா தங்கை ஆகியோர் நல்லவர்களாகவே
இருக்கின்றனர். எம் ஜி ஆரும் குடும்பத்தில் ஒருவராக இறுதி அவர்களின்
வாழ்க்கைக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும் பொறுப்பு உடையவராகவே
காட்டப்படுகிறார். அக்காள்இ தம்பி தங்கை என வரும் கதாபாத்திரப்
படைப்புக்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரி படைப்புகளாக இலட்சிய
கதாபாத்திரங்களாவே அமைந்துள்ளன. அவர் தான் மட்டுமல்ல தன
குடும்பத்தினரும் நல்லவர்கள் என்றே தனது படங்களில் சித்திரித்துள்ளார்..
இதனால் படம் பார்க்கும் ரசிக ரசிகையரும் தம்மை இந்த நல்ல
கதாபாத்திரங்களுடன் இணைத்தது நோக்குகின்றனர். இதனாலும் எம் ஜி ஆரின்
செல்வாக்கு பெண்களின் மத்தியில் உயர்ந்து நிலை பெற்றுள்ளது.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|