பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 12)

முனைவர் செ.இராஜேஸ்வரி


எம் ஜி ஆரின் கூச்ச சுபாவம்

எம
் ஜி ஆர் அறுபது வயதில்பதினாறு வயது பெண்ணோடு நடிக்கிறார். அவர் தன வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் . இப்படி சிறு பெகளோடு டுஉயட் பாடாக் கூடாது. என்று பல விமர்சனங்கள் வந்த காலத்தில் அவற்றை பொருட்படுத்தாமல் ' நான் திரையில் பார்க்கும் பொது இளமையாக தோன்றுகிறேன் ? அது தான் நடிப்பு இருபது வயதுக்காரர் என்பது வயது கிழவராக நடிப்பதும் அறுபது வயதுக்காரர் இருபது வயதாக நடிப்பதும் நடிப்பு தான். படத்தில் நான் இளமையாக இருப்பதால் தானே ரசிகர்கள் படம் பார்க்கின்றனர். என் படங்கள் வெற்றி வாகை சூடி வசூலை குவிக்கின்றன என்றார். இவ்வாறு இளம்பெண்களுடன் நடித்த எம் ஜி ஆர் உண்மையில் பெண்கள் என்றால் மிகவும் கூச்சப்படுவார். இது தான் அவரது நிஜ முகம். அவர் பெண்களிடம் அரட்டை அடிக்கஇ கதை பேசஇ சிரித்து பேசஇ கும்மாளம் அடிக்க ஆசைபடுகிறவர் கிடையாது. இவ்வாறு அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொண்டதாகவோ தனிப்பட்டமுறையில் யாரிடமும் பலகியதாகவோ நமக்கு ஒரு தகவல் கூடக் கிடைக்கவில்லை. மாறாக அவர் கூச்சசுபாவம் கொண்டவர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எம்ஜிஆரின் கூச்ச சுபாம்


பெண்களின் உள்ளம் கவர்ந்த அரசியல் கட்சி தலைவராக மக்கள் தலைவனாக திரைப்பட நாயகனாக விளங்கும் எம் ஜி ஆர் என்று உண்மையல் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர். அவர் பெண்களிடம் அதிகம் பேசுவதில்லை. பெண்களிடம் பேச வேண்டி இருந்தால் மிகவும் மரியாதையாக தன்னடக்கத்தோடு பேசுவது அவருடைய வழக்கம். பெண்களைப் பற்றி இழிவாக கேலி பேசுவதோ இரட்டை அர்த்தத்தில் அவர்களின் பெண்மையை இழிவு படுத்தி பேசுவதோ பெண்களை ஒருமையில் அழைக்கும் பழக்கமோ அவரிடம் கிடையாது. அவர் காலத்தில் பெரிய நடிகர்இ கதாசிரியர் பாடலாசிரியர் நடிகைகள் ஆகிய அனைவரையும் ஒருமையில் அழைத்துப் பேசுவதும் பட்டப் பெயர் வைத்து அழைப்பதும் உண்டு. முண்டக் கண்ணா குரங்கு என்று அழைப்பதுஇ கணவர் முன்னிலையிலேயே நடிகையிடம் ஆபாசமாக பேசுவது போன்ற பழக்கங்கள் சில முன்னணி நடிகர்களிடம் இருந்து வந்தன. அவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் எம் ஜி ஆர.

எம் ஜி ஆர் நடிகையாக இருந்தாலும் நடிகைகள் அல்லாத வேறு பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் உடனே அதை தீர்த்து வைக்க முயல்வார். பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய தாயார்

தைரிய லட்சுமியாக விளங்கிய தாயார் சத்தியபாமா


எம்ஜிஆர் விவரம் தெரிந்த நாளிலிருந்து தன் தாயாரின் அரவணைப்பில் வழிகாட்டுதலில் வளர்ந்தவர் என்பதால் பொதுவாகவே பெண்கள் என்றால் ஒருவித பயமும் மரியாதையும் அதிகபட்ச அன்பும் அவருக்கு இருந்தது. எனவேதான் வயதான பெண்களை பார்க்கும் போதெல்லாம் அவர் தன்னுடைய தாயை பார்ப்பதாகவே உணர்ந்தார்; தன் தாய் அன்பை அவர்களிடம் அறிந்து கொண்டார்.

எம்ஜிஆரின் தாயார் சத்யபாமா ஏழு வயதில் எம்ஜிஆரை நாடக கம்பெனிக்கு அனுப்பி வைத்தார். பின்பு எம் ஜி ஆரும் அவர் அண்ணனும் பதினேழு பதினெட்டு வயதுக்கு பிறகுதான் தன் தாயாரோடு சேர்ந்து ஒரு வீட்டில் வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் என்ன அநியாயம் நடந்தாலும் உடனே முதலில் அதை தட்டிக் கேட்டு எதிர்ப்புக் குரல் கொடுப்பவர் எம்ஜிஆரின் அம்மா சத்யபாமா அம்மையார் மட்டுமே. அவர் எம் ஜிஆரிடம் ''நீ எதற்கும் பயப்படக்கூடாது. சாவுக்கு அஞ்சக்கூடாது. நாம் இந்த உலகில் பிறப்பதன் காரணம் முடிந்த பிறகுதான் சாவு நம்மை வந்தடையும். எனவே அஞ்சாமல் இரு'' என்று அறிவுரை கூறி துணிவுடன் வளர்த்திருந்தார்.

எம் ஜி ஆரின் குடும்பம் குடியிருந்த வீட்டுக்கு முன்பு ஒரு கோபக்கார நாய் அலைந்துகொண்டிருந்தது. ஒரு நாள் அந்த நாய் அவ்வழியே போன ஒரு சிறுவனின் டிரவுசரை பிடித்து கடித்து விட்டது. டிரவுசரைக் கடித்தவுடன் அந்த சிறுவன் அலறிக் கொண்டு ஓடினான். அந்த நாயும் அவன் பின்னாலேயே டிரவுசரை பிடித்த பிடியை விடாமல் ஓடியது. தெருவில் உள்ள அனைவரும் நாயை அடிக்க கல்லெறிந்தனர். அடிக்க ஓடினர். ஆனால் நாயைப் பார்த்து பயந்து கொண்டு அருகில் போகாமல் எட்டி நின்று அதட்டினார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த சத்யபாமா அம்மையார் இடுப்பு சேலையை இறுக்கமாக சொருகிக்கொண்டு அந்த சிறுவனின் பின்னால் ஓடி அந்த நாயின் பின்னங்கால்களை பிடித்து இழுத்து மூன்று சுற்று சுற்றி தரையில் ஓங்கி அடித்தார். நாய் நினைவிழந்து விழுந்து விட்டது. சிறுவன் தப்பித்துவிட்டான். அந்த தெருவின் அனைவரும் சத்யபாமா அம்மையாரின் துணிச்சலை பார்த்து வியந்து போயினர். சத்தியபாமா அம்மாவை பாராட்டினர். இதனைக் கண்ட எம் ஜி ஆர் தனது தாயாருக்கு இருந்த துணிச்சலைக் கண்டு மகிழ்ந்து தன்னுடைய நான் ஏன் பிறந்தேன் என்ற சுய வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார்.

பெண்கள் பயந்தவர்கள் கோழைகள்; ஆண்களை அண்டிப் பிழைப்பவர்கள் அல்லர். அவர்கள் துணிவு உடையவர்கள்; தனித்து வாழும் திறன் படைத்தவர்கள்; ஒரு குடும்பத்தை முன்னேற்றும் முனைப்பு கொண்டவர்கள்; என்பதை தன் குடும்பத்தை கொண்டு தன் தாயாரை கொண்டு அறிந்து கொண்டதனால் எம்ஜிஆர் பெண்களிடம் மிகுந்த மரியாதையோடு நடந்து கொள்வது வழக்கம்.

திரையுலகில் எம் ஜி ஆர் பெண்களிடம் பழகுவதில் மிகவும் கண்ணியமானவர் என்பதை மற்றவர்களின் பேட்டி மற்றும் நடிகைகளின் பேட்டிகள் வாயிலாகவும் அறியலாம்.

எம் ஜி ஆரின் கூச்சம்:


கலங்கரை விளக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து எம்ஜிஆரும் சரோஜாதேவியும் எதிரெதிரே ஓடி வர வேண்டிய காட்சியை இயக்குனர் சங்கர் எம்ஜிஆரிடம் விவரித்தார். அப்போது எம்ஜிஆர் இருவரும் எதிர் எதிராக ஓடிவந்தால் குறுகிய படிக்கட்டில் ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொள்ள நேரிடுமே என்று சங்கோஜப்பட்டு கேட்டார். அதற்கு இயக்குனர் 'இடித்துக் கொண்டால் தான் என்ன? கதாநாயகனும் கதாநாயகியும் தானே? ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு கூச்சப்படுகிறார்கள்?' என்றார்.

நடிப்புக்காகக் கூட எம்ஜிஆர் தன் ஆரம்ப கால படங்களில் நடிகையர் மீது கைவைத்து நடிக்கும் போது அவரது கையை பட்டும் படாமலும் தான் வைபபார். அவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ள மாட்டார் அவருடைய

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்


பாட்டு காட்சியில் சரோஜாதேவியுடன் காரில் பயணிக்கும்போது சரோஜாதேவியின் தோளில் கை வைத்திருக்கும் எம்ஜிஆர் தன்னுடைய விரல்களை மடக்கி வைத்திருப்பார். விரல்களால் அவருடைய தோளை தொட்டபடி இருக்க மாட்டார்.

எம்ஜிஆருடன் நடித்த பழைய நடிகைகள் 'அவர் நடிகைகளை தொட்டு நடிக்க மிகவும் கூச்சப்படுவார்' என்பதை தங்கள் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளனர். பானுமதியுடன் நடிக்கும்போது அவர் மிகப் பெரிய நடிகை என்பதாலும் அவர் அஷ்டாவதானி என்பதாலும் அவர் மீது எம் ஜி ஆர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரைத் தொட்டு நடிக்க எம் ஜி ஆர் கூச்சப்பட்டார். பின்பொரு முறை பானுமதியை தமிழ் இசை கல்லுரி முதல்வராக்கிய பொது நடந்த விழாவில் அவரது சிறப்புகளை பட்டியலிட்டு பேசினார். பானுமதியே வியந்து போய்விட்டார்.

பெரும்பாலும் எம் ஜி ஆர் பெண் வேடம் போடுவதில்லை. புதுமை பித்தன்இ காதல் வாகனம் ஆகிய படங்களில் பெண் வேடமிட்டு நடனம் ஆடுவார். காதல் வாகனம் படத்தில்

என்ன மேன் பொண்ணு நான்
சும்மா சும்மா பார்க்காதே


என்ற பாடலுக்கு ஆங்கிலோ இண்டியன் பெண் போல நாகரிக உடையில் வந்து அசோகனை மயக்கி ஜெயலலிதாவை காப்பாற்றி செல்வார். இந்த பாட்டை எல் ஆர் ஈஸ்வரி பாடி இருந்தார்.

ஒருமுறை டைரக்டர் சோமு எம்ஜிஆரின் படப்பிடிப்பு தளத்திற்கு போயிருந்தபோது எம்ஜிஆர் பெண்வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தார். அந்த டான்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த டைரக்டர் சோமுவை பார்த்ததும் நடிப்பை நிறுத்திவிட்டு உள்ளே போய்விட்டார்.அவருக்கு பிறர் முன்பு பெண் வேடத்தில் இருப்பது கூச்சமாக இருந்தது என்று இயக்குனர் சோமு தெரிவித்திருந்தார்.

இன்னொரு முறை எம்ஜிஆர் தன்னுடைய மேக்கப் அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தபோது டைரக்டர் சோமு உள்ளே வந்தார். அங்கு வேறு ஒருவர் எம்ஜிஆருடன் பேசிக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் முழங்காலுக்கு கீழே ரோஸ் நிறத்தில் அவருடைய கெண்டை கால் செழிப்பாக இருந்தது. என்றும் அதை அங்கிருந்தவர் உற்று பார்த்த போது அவர் மிகவும் கூச்சப்பட்டார் என்றும் இயக்குனர் சோமு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து நடித்திருப்பார். நடிப்புக்காக அவர் இது போன்ற குட்டை உடைகளை அணிந்தாலும் அது அவரைப் பொறுத்தவரை ஆபாசமாகவோ பெண்களால் கண்திறந்து காண முடியாததாக இருக்காது. அதனால்தான் அந்தப் படம் பாடல் வெற்றி பெற்றது.

எம்ஜிஆர் தன் முதல் படமான ராஜகுமாரி நடிக்கும்போது அதில் ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்த தவமணி தேவி தன்னுடைய மேலாடையில் கழுத்தை மிகவும் கீழே இறக்கி வைத்து தைத்து இருந்தார். அப்போது இயக்குனர் 'அம்மா இந்த உடையை தணிக்கையாளர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்' என்று கூறியபோது அவர் அந்த இறக்கப்பட்ட கழுத்தின் அளவை மறைப்பதற்காக ஒரு பெரிய செயற்கை பூவை சொருகிக்கொண்டு நடித்தார். அவருடன் நடிக்கும் காட்சிகளில் எம்ஜிஆர் மிகவும் கூச்சப்பட்டதாகவும் எம்ஜிஆரின் கைகளை எடுத்து தன் தோளில் வைத்துக்கொண்டு தவமணி தேவி வசனம் பேசியதாகவும் அவர் பேட்டியளித்துள்ளார்.

ஆரம்ப கட்டங்களில் எம்ஜிஆர் நடிப்புக்காக கூட பெண்களை தொட்டு நடிக்க விரும்பவில்லை. மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராகவே இருந்தார். இவருடைய கூச்ச சுபாவம் பற்றி ''எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்'' என்ற கட்டுரைத் தொடரில் அவருடைய மனைவி வி.என். ஜானகி அம்மையார் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்ஜிஆருக்கு சிறுநீர் குழாயில் 'கத்திட்டர்' பொருத்தப்பட்டிருந்தது. அந்தக் கத்திட்டரை நீக்கிவிட்டு வேறு ஒன்றை புதிதாக பொருத்துவது செவிலியரின் பணி. எம்ஜிஆர் நினைவு தப்பி இருந்த நாட்களில் செவிலியர் தன் கடமையை செய்து கொண்டிருந்தனர். எம்ஜிஆருக்கு நினைவு வந்த பிறகு அவர் தன் மனைவியை அழைத்து 'இந்த வேலையை எல்லாம் நீயே செய்; நர்சுகளை செய்ய சொல்லாதே' என்று சொல்லிவிட்டார். செவிலியர் தாய்மை உணர்வோடு தியாக உள்ளத்தோடு இத்தகைய பணிகளை செய்தாலும் கூட எம்ஜிஆருக்கு இருந்த கூச்ச சுபாவத்தால் அவர் செவிலியரை இந்தப் பணியைச் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு தன் மனைவியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.

சினிமாவில் இளம்பெண்களுடன் ஆடிப்பாடி கேலியாக பேசி சிரித்து விளையாடும் எம்ஜிஆர் அந்த காட்சி முடிந்ததும் அவர்களிடம் தொழில் சம்பந்தமாக பேசுவதாக இருந்தால் மட்டுமே பேசுவார். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் பொது யாரும் சிரித்து பேசி விளையாட மாட்டார்கள். இது தொழில் செய்யும் இடம் என்று எம் ஜி ஆர் அதட்டுவார். நடிகைகளோடு சிரித்து பேசி கொண்டிருந்தவர்களை கடுமையாக கண்டித்து இருக்கிறார். நடிகைகளுக்கும் அறிவுரை சொல்லி திருத்தி இருக்கிறார். எப்போதும் பெண்களின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்

எம்ஜிஆர் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் இருக்கும்போதுகூட யாரையும் கேலி கிண்டல் செய்து பேசுவதோ பாலுறவு சொற்களை பயன்படுத்துவது அசிங்கமான வார்த்தைகளை ஆபாசமான விஷயங்களைப் பேசுவது கிடையாது. யாராவது பேசினால் கூட அவர் நமக்கு ஏன் வம்பு என்று சொல்லி நிறுத்திவிடுவார். அவர்கள் பேசுவதை ஊக்கப்படுத்தி அதைக் கேட்டு சிரித்து மகிழ மாட்டார்.

சிறு வயதில் அவருடைய தாயார் அவருக்கு கற்றுக் கொடுத்த நல்ல பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று. யாரையும் கேலி பேச கூடாது; குறிப்பாக பெண்களை பற்றி ஆபாசமாகவும் அவதூறாக பேசக்கூடாது என்று அவருடைய தாயார் கற்றுக் கொடுத்திருந்தார்.

திரைப்படங்களில் எம்ஜிஆர் காதலைப் பற்றியோ கல்யாணத்தை பற்றியோ அவர் அம்மாவிடம் பேசும் போது வெட்கப்படுவதாக சில காட்சிகள் வரும் அன்னமிட்ட கைஇ குடியிருந்த கோவில்இ தாய் சொல்லை தட்டாதே போன்ற படங்களில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அல்லது காதல் தானாக வெளிப்பட்டுவிடும் காட்சிகளில் எம்ஜிஆர் தன் தாயாரிடம் மிகவும் வெட்கப்பட்டு நானி கோணி நடிப்பார். இது படத்துக்காக எடுக்கப்படும் காட்சியாக இருந்தாலும் உண்மையிலேயே அவர் பெண்களிடம் பழகுவதில் மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர் என்பதால் இக்காட்சி தத்ருபமாக அமைந்திருக்கிறது.

காதலை வெளிப்படுத்துவதில் கூச்சம்
எம்ஜிஆர் நாடகங்களில் நடித்துக் கொண்டு சினிமா பட வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலத்தில் அவருக்குள் ஒரு காதல் முகிழ்த்தது. பக்கத்து வீட்டில் இருந்த ஒரு இளம்பெண் மீது அவருக்கு காதல் வந்தது. ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்து தன்னுடைய காதலை வெளிப்படுத்த அவருக்கு தயக்கமாக இருந்தது. காரணம் அவர் தாயார் அதை ஏற்றுக் கொள்வாரோ இல்லையோ என்ற அச்சம் அவருக்குள் உறைந்து கிடந்தது. இதனால் இவர் தன்னுடைய உள்ளக்கிடக்கையை தன்னுடைய காதலை அப்பெண்ணுக்கு உணர்த்தும் வகையில் ஒரு ஆர்மோனியப் பெட்டியை வைத்துக்கொண்டு சத்தம் போட்டு பாட்டு பாடுவார். அவர் பாடும் பாடல்களை அந்த பெண் கேட்டு இவருடைய காதல் உணர்வை புரிந்து கொள்வாள் என்பது இவருடைய கணிப்பாக இருந்தது.

சில நாட்கள் எம்ஜிஆரின் பாடும் பாட்டுக்களைக் கேட்டுகொண்டிருந்த அவருடைய தாயார் ஒரு நாள் 'ஏன் இப்படி சத்தம்போட்டு 'பாடுகிறாய் என்று கேட்டார் 'அம்மா நாடகத்தில் சத்தமாக பாடினால்தான் வாய்ப்பு கொடுப்பார்கள்இ அதனால் நான் சத்தமாக பாடுகிறேன்.' என்றார். சத்யபாமா அம்மையார் இன்னும் சில நாட்கள் கவனித்துக்கொண்டிருந்தார். இவர் அந்தப் பெண் தன் வீட்டுப் பக்கம் வரும் நேரத்தில்தான் இவ்வாறு சத்தமாக பாடுகிறார் என்பதை புரிந்துகொண்ட சத்யபாமா அம்மையார்இ ஒருநாள் மிகுந்த கோபம் கொண்டு இவர் தலையில் ஒரு குடம் தண்ணீரை கடகடவென்று கொட்டினார். அன்றோடு எம்ஜிஆர் ஆர்மோனிய பெட்டியை வைத்து பாட்டு பாடுவது நின்று போயிற்று.

முதல் காதல்

எம் ஜி ஆர் பிரபலம் அடைந்த பிறகு ஒரு பேட்டியின்போது நிருபர் 'உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா' என்று கேட்கிறார். அப்போது எம்ஜிஆர் 'அதைப்பற்றி மட்டும் கேட்காதீர்கள். அது மிகவும் சோகமானது' என்று பதிலளித்தார். இந்த சோகத்துக்கு காரணம் என்னவென்றால் அவருடைய கூச்ச சுபாவம் தான். அவர் தன் காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தி இருந்தால் ஒருவேளை அவருடைய திருமணம் நடந்திருக்கலாம். ஆனால் அந்த காதல் வெளிப்படுத்தப்படாத சிப்பிக்குள் இருக்கும் முத்தாகவே முடிந்துவிட்டது. பின்பு தன்னுடைய மனைவிமார் அடுத்தடுத்து அவர் திருமணம் செய்து ஒவ்வொரு மனைவியாக இரண்டு மனைவிகளும் இறந்து போன பிறகு அவர் ஜானகி அம்மா யாரை திருமணம் செய்து கொள்கிறார

தன்னுடன் நடித்த ஜானகியிடம் தன் காதலை தெரிவித்த பின்பு அவரை திருமணம் முடிக்க 12 வருடங்கள் எம்ஜிஆர் காத்திருந்தார். பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்து பின்பு தன் காதலை கல்யாணத்தில் நிறைவேற்றிய எம்ஜிஆர் அந்த கல்யாண நாளன்று வருடந்தோறும் புது மணமக்கள் போல புத்தாடை உடுத்தி மாலை மாற்றி தேவர் போன்ற பெரியவர்களிடம் ஆசி வாங்குவார்கள் ஒவ்வொரு வருடமும் எம் ஜி ஆர் தன் கல்யாண நாளை மிகச் சிறப்பாக கொண்டாடி ஜானகி அம்மையாருக்கு பெருமை சேர்த்தார்.

எம் ஜி ஆர் பற்றி வெளி இடங்களில். படப்பிடிப்பு தளத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற பேச்சு எதுவும் இல்லாததால் சமூகத்தில் அவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டாயிற்று. படங்களில் பெண்களிடம் மரியாதையாக நடந்து கொண்டார். படமும் நிஜமும் ஒன்றிணைந்து அவருக்கு நல்ல பிம்பத்தையும் பேரையும் பெண்களிடம் பெற்று தந்தது. அவை வாக்குகளாக மாறி அவரை அரசு கட்டிலில் உட்கார வைத்தது. அவரும் பெண்களின் நல் வாழ்வுக்கு பல நல்ல திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினார். வரை பெண் இனம் போற்றும் பேருண் தலைவராக புகழ் பெற்றுள்ளார். சுநிடலகுழசறயசன
 

                                                                                                            

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்