பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 21)

முனைவர் செ.இராஜேஸ்வரி
 

எம்.ஜி.ஆர். படங்களின் கனவுக் காட்சிகள்:

எம்.ஜி.ஆர். படங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் ஆடிப்பாடி மகிழும் காட்சிகள் கதாநாயகியின் கனவாக இடம்பெறுவதுண்டு. 'வினையே ஆடவர்க்கு உயிரே மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' என்ற குறுந்தொகையின் வரிகளுக்கேற்ப பெண்களுக்கு எப்போதும் தன் அன்புத் துணைவரின் நினைவுகள் இருந்துகொண்டே இருப்பதால் அவர்கள் இனிமையான வாழ்க்கையைக் கனவு காண்பதாகவே எம்.ஜி.ஆரின் படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு விமர்சனம் செய்வோர் எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணையும் நினைத்து காதலித்தது இல்லையா கனவு கண்டது இல்லையா? ஏன் பெண்களே அவரை நினைத்து கனவு காண்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியது உண்டு. இந்த கேள்விக்கு விடை ஆண்கள் எப்போதும் தங்கள் தொழில் ரீதியான சிந்தனையிலேயே இருப்பதால் அவர்களுக்கு கனவு காணும் வாய்ப்பும் நேரமும் குறைவு. ஆனால் பெண்கள் எத்தனை பொறுப்புகள் இருந்தாலும் அவற்றோடு தங்கள் காதல் துணைவரை பற்றியும் மனதுக்குள் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சிந்தனை கனவுகளாக விரிவடைவதும் உண்டு.

ஒருமுறை பேராசிரியர் சாலமன் பாப்பையா தன்னுடைய பட்டிமன்றத்தில் தொலை தூரத்தில் பணிசெய்யும் தன் கணவனை வீட்டில் இருக்கும் மனைவி எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பாள் என்பதற்கு சில எளிமையான எடுத்துக்காட்டுகளைக் கூறினார். குழம்புக்கு காய் வாங்கும் போது கணவனுக்கு பிடித்தமான காய்களைப் பொறுக்கி எடுத்து வாங்கி இந்தக் காய் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும், அங்கு பாவம் என்ன சாப்பிடுகிறாரோ என்று நினைத்துக் கொள்வாளாம். அதன்பிறகு துணி துவைக்கும் போது கணவனுடைய துணிகளை அங்கு யார் துவைத்து கொடுப்பார்? அவர் கொஞ்சம் அழுக்காக இருந்தாலும் போட்டுக் கொள்ள மாட்டார். அவருக்கு தினமும் சுத்தமாக துவைத்து தேய்த்து தரவேண்டுமே; பாவம் அங்கு என்ன கஷ்டப்படுகிறாரோ என்று நினைத்துக்கொண்டே தன்னுடைய அன்றாட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று சாலமன் பாப்பையா அவர்கள் தெரிவித்தார்கள். இதுபோல பெண்கள் தங்களுடைய அன்றாட அலுவல்களுக்கு இடையே தங்களுடைய காதலரையோஇ கணவரையோ எந்நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பது ஒரு சகஜமான காரியமாகும்; இயல்பான விஷயமாகும்.

கனவுகள் என்பது வெகுகாலமாக ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகவே இருந்துள்ளது. இந்தியாவில் சோதிடத்தின் ஒரு பிரிவாகக் கனவு சாஸ்திரம் பிரிவு உள்ளது. இந்த சாஸ்திரத்தின் படி கனவுக்கு பலன் சொல்லப்பட்டது. அதில் யானை விரட்டுவது போல கனவு கண்டால் திருமணம் நடக்கும்இ பாம்பு கொத்துவது போல கனவு கண்டால் நம்மை பிடித்த பீடைகள் விலகும்இ ஆடையின்றி இருப்பது போல கனவு கண்டால் தரித்திரம் பிடிக்கும், மலத்தைக் கனவில் கண்டாள் பணம் வரும் என்று கனவுகளுக்குப் பலன்கள் சொல்லப்படுவதுண்டு.

மேலைநாடுகளில்

மேலைநாடுகளில் கனவுகள் குறித்து ப்ராய்ட், யுங் போன்ற உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சிகள் பல செய்துள்ளனர். பொதுவாக ஆண்களின் கனவுகளில் ஆயுதங்களும் பெண்களின் கனவுகளில் உரையாடல்களும் அதிகம் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். பெண்கள் கனவுகளில் கூட பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என்று அவர்கள் நம்புகின்றனர்.

நான்கு வகையான கனவுகள் உலகளவில் பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகின்றன. அவை நகர இயலாமல் தன்னை யாரும் அழுத்தி பிடித்திருப்பது போல உணர்கின்ற தன்மை. இதைத்தான் நாம் நமது கிராமங்களில் அமுக்குப் பிசாசு வந்து பிடித்துக் கொண்டதாகக் கூறுகின்றனர். இரண்டாவது கனவு எப்போதும் எங்கேயும் காலதாமதமாக வந்து சேர்வது ஆகும். மூன்றாவது வகைஇ கனவு வானத்தில் பறப்பது போன்ற ஒரு காட்சி, நான்காவது வகைக் கனவு பொதுஇடத்தில் ஆடையின்றி இருப்பதாக அமைவது. இதுபோன்ற கனவுகளுக்கு நம் ஊர்களில் சில காரணங்கள் சொல்வதுண்டு.

அடுத்து, ஒடுக்கப்பட்ட உணர்வுகல் கனவுகளில் வருவதாக மேலைநாட்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மன அழுத்தங்களும் பாலியல் சுரண்டல் போன்றவற்றாலும் பிற்காலத்தில் பெண்களுக்கு கனவுகளில் சில காட்சிகள் தோன்றுவதுண்டு கருவுற்று இருக்கும்போது அல்லது அதிக உடல் எடை கொண்டு இருக்கும்போது தூக்கத்தில் சில பயங்கரமான கனவுகள் ஜniபாவஅயசநளஸவருவதும் உண்டு. இது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

பொதுவாக ஒடுக்கப்பட்ட பாலுறவு சிக்கல்கலால் பெண்களுக்கு ஹிஸ்டீரியா எனப்படும் மனநோய் வருகின்றது. இந்த மனநோயாளிகள் தங்களுக்கு கடவுளோடு தொடர்புகொண்டு இருப்பதாக அல்லது காதல் கொண்டு இருப்பதாக சொல்லிக் கொள்வார்கள் மனதார நம்புவார்கள். கனவுகளில் கடவுள்களைக் காதலித்து மகிழ்வார்கள். கிரேக்கத்தில் ஹுஸ்ட்ரா என்றால் கர்ப்பப்பை என்பது பொருள். எனவே பாலுணர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு வரும் நோய் ஹிஸ்டீரியா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. ஹிஸ்டீரியா நோயாளிகளுக்கும் அதீத காதல் உணர்ச்சிகளும் மிகையான கற்பனைகளும் இருப்பதால் இவர்கள் சிலவேளைகளில் தெய்வீகக் காதல் கொண்டவர்களாகப் போட்ரப்படுவதும் உண்டு.

பொதுவாக ஒருவரது ஒடுக்கப்பட்ட உணர்வுகள் கனவுகளில் முரண்பாடாக வெளிப்படுவது இயலபு. முதலாளியால் ஒடுக்கப்பட்ட வேலையாள் கனவில் எலி பூனையைத் துரத்துவது போல கனவு வரும். இது அவருடைய ஆசையின் வெளிப்பாடு. டாம் அண்ட் ஜெர்ரி சிரிப்பு படத்தில் எப்போதும் எலி வெற்றிபெறுவதும் பூனை முட்டாளாகி போவதும் பலராலும் ரசிக்கப் படுவதற்கு காரணம், அவர்களுடைய கனவுகளிலும் இதுபோல வலிமை குறைந்தவன் வெற்றி பெறுவதும் வலிமை கூடியவன் தோற்றுப் போவதும் உண்டு.

எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக இருப்பவர் அந்த ஊர் பிரமுகராக அரசியல் செல்வாக்கு பணபலம் உள்ளவராக இருப்பார். ஆனால் எம்.ஜி.ஆர். சாதாரண தொழிலாளியாக ஏழையாக படிப்பறிவு உடையவனாக இருப்பான்இ சர்வ வல்லமை படைத்த பணக்கார வில்லனை மிக எளிமையான நிலையில் இருப்பவரை எம்.ஜி.ஆர் தோற்கடித்து விடுவார். இது ஒவ்வொரு ஏழையின் கனவாகும். இந்த கனவு படத்தில் நிறைவேறும் பொழுது படம் பார்க்கும் ஏழை எளிய கிராமத்து மக்கள் மற்றும் நகர்வாழ் மக்கள், அலுவலகத்தில் அதிகாரிகளால் ஒடுக்கப்படுகின்ற குமாஸ்தாக்கள், பணி புரியும் பெண்கள் போன்றவர் அல்லது மேலதிகாரியின் ஒடுக்குதலுக்கு உள்ளாகும். மற்ற அதிகாரிகள் என இவர்கள் எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்கும்போது நம்மாலும் அந்த அதிகாரியை நம் மீது அதிகாரம் செலுத்துபவரை நியாயமான வழியில் வெல்ல முடியும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்தையும் உற்சாகத்தையும் பெறுகின்றனர். நான் நேர்மையாக நடந்தால் நம் மீது அதிகாரம் செலுத்தும் கெட்டவர்களை நேர்மையான வழிமுறைகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை எம்.ஜி.ஆர். படங்கள் தருகின்றன. வாழ்வில் தன்னம்பிக்கையும் தைரியமும் ரசிகர்களுக்கு எம் ஜி ஆர் படங்களால் கிடைக்கின்றன. இவர்கள் டாம் அண்ட் ஜெர்ரி கனவுகளைக் காண வேண்டிய அவசியம் கிடையாது.

சில ஏழை எளிய பெண்களுக்குப் பணக்கார வாலிபரை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ வேண்டும் என்ற கனவு இருக்கும். ஏழை இளைஞர்களுக்கும் மதுரை வீரனைப் போல பணக்காரப் பெண்களை காதலித்து கரம் பிடிக்கும் ஆசை இருக்கும். நிஜத்தில் நடைபெறாத விஷயங்களை கற்பனை செய்வதும் கனவில் நினைத்து பார்ப்பதும் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இக்கனவுகளை நனவாக்கும் வகையில் எம்.ஜி.ஆரின் படங்களில் ராஜா ராணி கனவுகள் இடம்பெறும் தன் காதலன் ராஜாவாகவும் தான் ஒரு ராணியாகவும் உடையுடுத்தி தோரணையாக பாட்டுப் பாடி மகிழ்ந்து இருப்பது போன்ற கனவுகள் வரும் போது அவரவர் உள்ளத்தின் ஆசைகளும் எண்ணங்களும் கற்பனையாக நிறைவடைகின்றன.

திரைப்படப் பாடல்களில் வரும் கனவுக் காட்சிகளை எவ்வாறு ரசிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். என் அண்ணன் படத்தில் நடித்துக் காட்டி இருப்பார். ஒரு இளைஞர் திரைப்படத்தில் வரும் கதாநாயகியைக் கற்பனையில் காதலித்துக் கனவு காணக் கூடாது. அது தவறு. தன் காதலியை அந்த கதாநாயகி அணிந்திருக்கும் உடையில் அலங்காரத்தில் ராணி போல கற்பனை செய்து கனவு காணலாம். இது திரைப்படத்தைக் கண்டு கனவு காணும் பெண்களுக்கும் பொருந்தும். தத்தம் காதலரை ராஜா ராணியாகக் கற்பனை செய்து கொள்ளலாமே தவிர எம்.ஜி.ஆரையோ அல்லது ஜெயலலிதாஇ சரோஜாதேவியையோ கற்பனை செய்து கனவு காணக் கூடாது. அவ்வாறு கற்பனை செய்வதாக எழுதப்பட்ட கதை தான் சினிமாவுக்கு போன சித்தாளு. அக்கதை வந்த பொது எம்.ஜி.ஆர். ஜெயகாந்தனிடம் கோபம் கொள்வார். என்று பலரும் எதிர்பார்த்து இத்தகவலை அப்வரிடம் போய் தெரிவித்தனர். அனால் எம்.ஜி.ஆர். கோபிக்கவில்லை. காரணம் அவருக்கே அந்த பெண் செய்தது தவறு என்று தோன்றியது.

சினிமாவை ரசிக்கலாம் ஆனால் சினிமா மாயை கூடாது என்பது எம்.ஜி.ஆருக்கு ஆழமான கருத்தாகும். சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கலைப்படைப்பாக இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டாலும் அதன் மூலமாக நல்ல பல கருத்துக்களை மக்களுக்குச் சொல்ல முடியும் என்பதையும் அவர் ஆணித்தரமாக நம்பினார்.
சினிமாவை சொந்த வாழ்க்கைக்கு எப்படி எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அவர் என் அண்ணன் படத்தில் காண்பித்திருப்பார். அப்படத்தில் குதிரை வண்டிக்காரனாக வரும் எம்.ஜி.ஆரும் புல்லுக்கட்டு காரியாக வரும் ஜெயலலிதாவும் ஒரு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு செல்வார்கள். அங்கு மேடையில் நிகழ்ச்சியை நடத்தும் கலைஞர்கள் என்ன உடையில் ஆடிப்பாடுகின்றனரோ அதே போன்ற உடையில் அதே பாடலை தாங்கள் பாடுவதாக அவர்கள் இருவரும் சேர்ந்து கனவு கண்டு கொண்டிருப்பார்கள். இந்த ஒரு படத்தில் மட்டும் தான் எம்.ஜி.ஆரும் கதாநாயகியோடு இணைந்து கனவு காண்பதாக காட்டப்பட்டிருக்கும் இருவரின் கனவுகளிலும் மேடையில் ஆடும் கலைஞர்களைப் போலவே உடை உடுத்தி பாட்டுப்பாடி ஆடி மகிழ்வார்கள். இங்கு சினிமா என்ற பொழுதுபோக்கு இவர்களின் மன உளைச்சலை தீர்க்கும் மருந்து சாதனம் ஆகிறது.

மிகுந்த மன உளைச்சலோடு இருக்கும்போது யாரிடமாவது தன் துயரங்களை கொட்டி புலம்புவதும் பாட்டு பாடுவதும் நடனமாடுவதும் விளையாட்டுகளில் ஈடுபடுவது மனதுக்கு அமைதி தரும் வழிமுறைகளாகும். இதனை தான் உளவியல் நிபுணர்கள் வயடம வாநசயில என்றும் pடயல pடயல வாநசயில என்றும் அழைக்கின்றனர். கிராமங்களில் மதியவேளையில் திண்ணைகளிலும் அல்லது வீட்டின் பின்புறத்திலோ உட்கார்ந்து பெண்கள் பல்லாங்குழி ஆடுவதும் சொட்டாங்கல் விளையாடுவதும் கோலங்கள் போட்டு வரைந்து பார்ப்பதும் உண்டு. இவை எல்லாம் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வாழ்வியல் சிகிச்சை முறைகளாகும்.

Talk therapy, play  என்பன மன நோயாளிகளை குணமாக்க அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகும். மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் மருத்துவர்களைப் பார்க்க வரும்போது அவர்களை மனம் விட்டு பேசச் சொல்வார்கள் அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கு எங்கே எப்போது எந்த சூழ்நிலையில் மன அழுத்தம் ஆரம்பித்துள்ளது என்பதை அறிந்துகொள்வார்கள். அதை பேசி தீர்க்க முயல்வர். அதிகமாக யோசிக்காமல் இருக்க அமைதிப்படுத்தும் மருந்துகளை பரிந்துரை செய்வர்.

அன்றாட வாழ்வில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசும் போது ஒருவருடைய மனதில் இருக்கும் அழுத்தமும் குறைகிறது. தன்னுடைய பிரச்சினைகளுக்கு தன் வாயிலாகவே ஒரு தீர்வும் கிடைக்கிறது இதனை நீதிக்கு பின் பாசம் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் காட்டி இருப்பார் தன் அத்தை மகளை தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொன்னதனால் அப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். எனவே அவளையே தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தன் காதலியிடம் விளக்கிச் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர். அத்தை மகள் இறந்து விட்ட செய்தியை அறிந்ததும் மனம் வருந்தி மீண்டும் போய் இதை காதலியிடம் சொல்லி விடலாம் என்று ஆர்வமாக ஓடிப்போனால் அங்கு காதலியும் தண்ணீருக்குள் குதித்து விட்டால் என்பது தெரியவரும். இந்த துயரத்தைத் தாங்க முடியாமல் அவர் ஓரிடத்தில் அமர்ந்து இருப்பார்இ அப்போது அங்கு வந்த எம் ஆர் ராதா தன்னுடைய பிரச்சினை ஒன்றை அவரிடம் சொல்லி அவரிடம் இருந்து தீர்வு கேட்க நினைப்பார். எம்ஆர் ராதா தான் தன் காதலியின் தந்தை என்பதை தெரியாது எம்.ஜி.ஆர். தந்து காதல் கதையை அவரிடம் சொல்லிவிட்டு அவருடைய கதையையும் கேட்டுக் கொள்வார். அதற்கு முன்பு நோயாளிக்கு நோயாளி ஆறுதல் என்பது போல உங்கள் கதையை முதலில் சொல்லுங்கள் நான் கேட்டுக்கொள்கிறேன். பிறகு என்னுடைய கதையை சொல்கிறேன் இதுதான் வயடம வாநசயில. மனம்விட்டு பேசுவதே ஒரு சிகிச்சை முறையாக இருந்து மனநோயை தீர்க்கின்றது.

எம்.ஜி.ஆர். படத்தின் கனவு காட்சிகள் படம் பார்ப்போருக்கு மன உளைச்சலை தீர்க்கும் தீர்வாக அமைகின்றன. அவர்களின் மன அழுத்தத்தை குறைத்து காற்று போல லேசாக்கும் மருந்தாகவும் அமைகின்றன. பகல் கனவு பலிக்காது என்ற ஒரு நம்பிக்கை இருந்தாலும் கூட தான் ஆசைப்பட்ட காதலியோடு ஆடிப்பாடி மகிழ்வது போல் கற்பனை செய்து பார்ப்பது ஒவ்வொரு ஆணும் விரும்புவது இயற்கை. அவ்வாறு கற்பனை செய்யும் பொழுது வீட்டிற்குள் ஒரு மூலையில் ஒரு தோட்டத்தில் இருந்து பேசுவதாக இல்லாமல் வானத்தில் பறப்பதும் கடலுக்குள் நடப்பதாகவும் கூட கற்பனை செய்ய இயலும் .மனமென்னும் குதிரைக்கு கடிவாளம் ஏது.

பலவகைக் கனவுகள்


எம்.ஜி.ஆர். படங்களில் பலவகையான கனவு காட்சிகள் உண்டு. அந்தக் காட்சிகளில் விதவிதமான உடைகள் கொடுத்து தலை அலங்காரம் செய்து சிறப்பான வகையில் பாடல்கள் இயற்றி அதற்கு நடனம் அமைத்து ஒலி ஒளி அமைப்புகள் மூலமாகவும் சிறப்பு சேர்ப்பது உண்டு.

திருமணம், குழந்தைப்பேறு போன்ற நிகழ்ச்சிகளை கனவு பாடல்களில் காணலாம். வானத்தில் மிதப்பது போலவும், கடலில் நடப்பது போலவும் கனவு காண்பதுண்டு. வெளிநாட்டு மன்னர்களைப் போல கனவான்களை போல உடை உடுத்திக்கொண்டு பாடுவதாகவும் ஆடுவதாகவும் கனவு காட்சிகள் எடுத்துள்ளனர். ஒரே கனவுப் பாடலில் ஆறு அல்லது ஏழு உடைகளில் விதவிதமான தலையலங்காரம் அணிமணிகள் அணிந்து காலணிகள் அணிந்து எம்.ஜி.ஆரும் கதாநாயகிகளும் ஆடிப் பாடுவதாக காட்சிகள் அமைவதுண்டு.

கனவு காட்சிகள் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே கற்பனை கலந்து காணப்படும். கணவன் படத்தில் வரும் ஒரே ஒரு கனவு காட்சி மட்டும் எதிர்மறை எண்ணத்துடன் வருவதாக இருக்கும். கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு மேடைக்குச் செல்லும் ஒருவனை சொத்துக்காக திருமணம் செய்த ஜெயலலிதா அவன் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டு தண்டனை நீக்கப்பட்டு அவன் விடுதலையாகி வீட்டுக்கு வந்ததும் அதிர்ச்சி ஆகிவிடுவார். ஆண்களை வெறுக்கும் இவர் தன் கணவனுக்கு இனி தான் மனைவியாக வாழ வேண்டுமே என்ற பயத்தில் கனவு காண்பதாக ஒரு பாடல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாட்டு எம் ஜி ஆர் பாடுவதாக அமைந்திருக்கும்;

'நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்,
உன்னை புரிந்து கொண்டேன் ஒரு புன்னகையில்
இன்னொரு பிறவி என்று உன்னிடம் உறவு
கொண்டு வந்தேனே நன்றி சொல்வேனே'

இந்த பாட்டில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை அவருடைய விருப்பத்திற்கு மாறாக அடைய நினைப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு, பாட்டும் நடனமும் இருக்கும் ஆனால் உண்மையில் ஜெயலலிதா கண்ட கனவு பொய்யாகிவிடும். அவர் நினைத்தது போல எதுவும் நடக்காது. எம்.ஜி.ஆர் அவரை எந்த தொந்தரவும் செய்யாமல் அறையை விட்டு வெளியே போய்விடுவார். இது ஒன்று மட்டுமே ஒரு எதிர்மறையான சிந்தனையை க்காட்டிய கனவு பாடலாகும் மற்ற கனவு காட்சிகள் ஆக்கபூர்வமான மகிழ்ச்சியான மனநிலையை விவரிப்பதாகவே அமைக்கப்பட்டன.

நிகழ்ச்சிகளாக அமைந்த கனவுகள்


தன் காதலனை திருமணம் செய்து கொள்வதாக ஒரு காதலி கனவு காணும் பாடல் நம்நாடு படத்திலும், பாசம் படத்திலும் இடம்பெற்றன. நம்நாடு படத்தில்

'ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி
நெஞ்சில் ஆசை வெள்ளம் வடியவழிய அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படிக்குதடி
புது நினைவு வந்து மனதில் நின்று குரல் கொடுக்குதடி'


என்ற பாடலில் இடையே பின்னணி இசை வரும் போது ஒரு சிறிய கனவுக் காட்சி இடம்பெறும்இ அதில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சுயமரியாதை திருமண முறையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்வதாக காட்டப்படும். இது பாட்டின் இடையே வந்த கனவு காட்சியாகும். ஆனால் பாசம் படத்தில் சரோஜாதேவி திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு எம்.ஜி.ஆர். வந்ததும் தங்களுக்கு திருமணம் முடியப் போவதாக கனவு காண்பார். அந்தப் பாடல் இலக்கிய நயம் செறிந்த பாடலாகும் .

'பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்'


எனத் தொடங்கும் இந்த பாடலில் 'கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்' என்று கம்பர் கம்பராமாயணத்தில் இராமபிரானைப் பாராட்டியது போலஇ அந்த வரிகளின் சாயலில் கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல் இது. ராமபிரான் வில்லை ஒடித்து சீதையை திருமணம் செய்த நிகழ்ச்சியையும் பின்பு கல்லாய் மாறி இருந்த அகலிகையின் மீது ராமனின் கால் பட்டு அவள் உயிருடன் எழுந்த நிகழ்ச்சியையும் இணைத்து கம்பர் 'கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்' என்று குறிப்பிடுவார்.

பாசம் படத்தில் வரும் பாடலில் வண்ணம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து பொருளழகும் தேனிசையும் கொண்டதால் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடலாக அமைந்தது. இந்த படத்தில் இந்த ஒரு காட்சியில் மட்டும் எம்.ஜி.ஆர். மணமகன் கோலத்தில் அழகாகத் தோன்றுவார். உலகம் பிறந்தது எனக்காக என்ற பாடலில் எம்.ஜி.ஆரின் தோற்றம் நன்றாக இருக்கும். மற்ற காட்சிகளில் அவர் ஒரு திருடனாக அருவருப்பான தோற்றத்தில் காட்சியளிப்பார். எப்போதும் இடது கை விரல் நகத்தை கடித்தபடி ஒரு மேனரிசத்தை பின்பற்றி இருப்பார். இப்படத்தில் இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல் ஆகும். இப்பாடலில் இருவரும் மணமகள் மணமகன் அலங்காரத்தில் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால் திருமண நிகழ்ச்சியோ சடங்குகளோ காட்டப்படவில்லை.

குழந்தை வளர்ப்பு கனவு


எம்.ஜி.ஆர். படங்களில் வரும் கனவு காட்சியில் கதாநாயகிகள் கனவு காண்பது இயற்கை என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பொதுவாக காதலிகள் கணவனோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கும் காட்சிகளைத்தான் கனவில் காண்கின்றனர். ஆனால் கண்ணன் என் காதலன் படத்தில் தான் ஒருதலையாக காதலித்த எம்.ஜி.ஆரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யாக தன் கால் உடைந்து விட்டது என்று கூறி திருமணம் செய்துகொள்ளும் ஜெயலலிதா திருமண நாளன்று கனவு காணும்போது அவரோடு சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்று அந்தக் குழந்தையை வைத்து இருவரும் கொஞ்சுவதோடுஇ எம்.ஜி.ஆர். அந்த குழந்தையை குளிக்க வைத்து சாப்பாடு ஊட்டுவதாக, சைக்கிளில் வைத்து வீட்டுக்குள்ளேயே சுற்றுவதாக என கனவு காண்பார். எம் ஜி ஆரின் குழந்தை வளர்ப்பு காட்சிகள் விரிந்துகொண்டே போகும்.

'மின்மினியை கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன் அன்னை உன்னை
ஓ சச்சா மம்மா, பப்பா , ஓ ஓ சச்சா மம்மா பப்பா
அழகு மகன் மழலை மொழி,
தென்பொதிகை செந்தமிழோ'

என்ற இந்த கனவு பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பாடலாகும்.

இப்பாட்டில் எம்.ஜி.ஆர். வேட்டியை முழங்கால் வரை மடித்து வைத்துக் கொண்டு குழந்தையை காலில் படுக்கவைத்து குளிக்க வைப்பத, பின்பு அதற்கு தலை துவட்டி ஆடை மாற்றி அதை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் பால் சாதம் வைத்து ஊட்டுவதுஇ மூன்று வயது ஆனபிறகு குழந்தையை மூன்று சக்கர மிதி வண்டியில் வைத்து வீட்டுக்குள்ளேயே சுற்றி வருவது என வரும் இப்பாடல் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.

கனவுகளில் அதீத செயல்கள்


மனிதர்கள் அன்றாடம் செய்யும் செயல்களை விட்டுவிட்டு அதீதமாக செய்ய இயலாத செயல்களை செய்வதாக கனவு காண்பது ஒரு வகையில் மகிழ்ச்சியை தருவதாகும். எனவே எம்.ஜி.ஆரும் தனது கனவு பாடல்களில் அதீத செயல்களை புகுத்தினார். வானத்தில் பறப்பது போலவும் கடலில் நடப்பது போலவும் அப்போது ஆடிப்பாடி மகிழ்வது போலவும் காட்சிகளை அமைத்தார்.

புதுமை பித்தன் படத்தில் உலக உருண்டையின் மீது சுற்றி வந்து ஆடுவதாக ஒரு கனவு பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரும்இ பி.எஸ். சரோஜாவும் வெள்ளை வெல்வெட் உடை உடுத்தி வெள்ளை வெல்வெட் உடை உடுத்தி தேவதைகள் போல மெல்ல உலா வருவர்.

உள்ளம் இரண்டும் ஒன்று நம்
உருவம் தானே இரண்டு
எழில் ஓவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று

என்று தொடங்கும் பாடல் காட்சி ரசிகர்களின் பெரு வரவேற்பை பெற்ற பாடல் காட்சி ஆகும்.

பெற்றால் தான் பிள்ளையா படத்தில் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து அப்படியே அந்த ஜீப் வானத்திற்கு உயர்ந்து மேகக் கூட்டங்களின் வழியாக பயணிக்கிறது. அந்த ஜீப்பில் இருந்தபடியே எம்.ஜி.ஆரும்இ சரோஜாதேவியும்,

'சக்கரக்கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தன கட்டி மேனியிலே
நான் சாஞ்சிக்கவா சொல்லு மகராணி'


என்று பாடியபடி செல்கிறார்கள். இப்பாடலில் வாலி முதலில் என் மனச வச்சுக்கோ பாப்பாத்தி என்று எழுதி இருந்தார். அதை வாசித்த அறிஞர் அண்ணா பாப்பாத்தி என்ற சொல் பார்ப்பனர் வீட்டு பெண்களை குறிக்கும் என்பதால் அவர்கள் மனம் புண்படலாம் எனவே இச் சொல்லை மாற்றி விடுங்கள் என்றார். வாலிக்கு மிகவும் வியப்பாக இருந்தது பிராமண எதிர்ப்பில் வேரூன்றி போயிருந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அண்ணா அவர்கள் பிராமணப் பெண்களின் மனம் வருந்தக் கூடாது என்பதில் காட்டிய அக்கறை கவிஞர் வாலிக்கு அவர் மீது கொண்டிருந்த மதிப்பை உயர்த்தியது.

நாடோடி மன்னன் படத்தில் பாதிப்படம் வண்ணத்தில் எடுக்கப்பட்டபோது அதில் எம்.ஜி.ஆருக்கும் புதுமுகமாக வந்து சேர்ந்த சரோஜாதேவிக்கு ஒரு கனவு பாடல் வைக்கப்பட்டது அந்த கனவு பாடல் காட்சி கடலுக்கு அடியில் நடந்து பாடிக்கொண்டு போவதாகவும் சங்குகளின் மீது சாய்ந்தபடியும் எடுக்கப்பட்டன. கடலுக்குள் இருந்து நீர்க்குமிழிகள் மேல் நோக்கி வருவது அற்புதமான காட்சியாக அனைவரும் ரசிக்கக்கூடிய காட்சியாக அமைந்தது. அதுபோல உள்ளே இருக்கும் சங்குகள் விதவிதமான கடல்பாசிகள் கடல் தாவரங்கள் பல வண்ண நிறங்களில் இன்றைக்கு நாம் யூ-டியூபில் பார்ப்பது போல அன்றைக்கே அப்பாடல் காட்சியில் இடம் பெற்றிருந்தன.

'கண்ணில் வந்து மின்னல் போல்
காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே'

என்று தொடங்கும் பாடலில்

'சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே'


என்ற பாடல் வரிகளில் கவிஞர் சுரதா ஒரு புதுமையை பயன்படுத்தியிருந்தார் தாழம்பூ வானில் மின்னல் வெட்டியதும் மலரும் இந்த புதிய தகவல் இப்பாட்டில் காணப்பட்டது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய

'அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்'

என்ற பாடலில் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் படம் பிடித்த காட்சிகளே அதிகம் இடம்பெற்றன. அவற்றுடன் இணைப்பதற்காக எம்.ஜி.ஆரும் லதாவும் மிகப் பெரிய நீச்சல் தொட்டியில் நீந்துவது போன்ற காட்சி இங்கு வந்து எடுக்கப்பட்டது. இதற்காக சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டு அதனைச்சுற்றி கேமரா கொண்டு வந்து படம் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டன. வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த கேமராவால் இக்காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. இக்காட்சிகளில் நல்ல ஒளி அமைப்பு இருந்தது. இக்காட்சி எடுக்கப்பட்ட விதம் பற்றி நடிகை லதா விவரிக்கையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் 'நாங்கள் இன்று எடுக்க யோசிக்கும் இது போன்ற முயற்சிகளை அன்றே புரட்சிதலைவர் எடுத்திருக்கிறார். நீங்களும் நன்றாக நடித்திருக்கிறீர்கள்' என்று பாராட்டியதாக குறிப்பிட்டார். . சில காட்சிகளே இப்பாட்டில் இடம்பெற்றாலும் அவை மிகத் தெளிவாக இருந்தன. இன்னும் எம் ஜி ஆருக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்திருந்தால் இந்த காட்சிகள் அதிகளவில் அப்பாட்டில் இடம்பெற்றிருக்கும்.

எம்.ஜி.ஆர். சொந்தமாக அண்ணா திமுக கட்சி ஆரம்பித்து விட்டதனால் கட்சிப் பணிகளின் சுமை பாடல் காட்சிக்கு அதிக நேரம் ஒதுக்க விடவில்லை. இது லதாவின் கனவாக அமைந்த பாடலாகும். மஞ்சுளா எம்.ஜி.ஆரை ஒருதலையாக காதலிக்கும் லதாவிடம் எம்.ஜி.ஆருக்கு அவரை திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்ததும் லதாவின் கனவாக இப்பாடல் வரும், இப்பாடல் உவமை சுவைமிகுந்த பாடல் ஆகும்.
 


எம்.ஜி.ஆர். படங்களின் கனவுக் காட்சிகள் தொடரும்.....................
 

                                                                                                          

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்