ரூபா என்கிற ரூபாவதி

அன்புசிவா


ரூபா என்கிற ரூபாவதி. நடுத்தர வர்க்கம் வாடகை வீட்டின்> அறைக்குள்ளிருந்தபடியே ரூபாவதியின் உறவினர்களுடன் சேர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளைச் சாந்தி ஓரக்கண்ணால் பார்த்தாள்.

காப்பி> மிக்சர். இனிப்பு. ஒவ்வொருவருக்கும் பரிமாறப்பட்டு இருந்தன.

மாப்பிளையின் பெரியப்பா> பெரியம்மா> காலில் விழுந்து வணங்குதல் போன்ற சம்பிரதாயங்கள் முறையாக நடந்தன. மாப்பிள்ளை சிறிது நேரம் எதிரில் கீழே அமர்ந்து ரூபாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்ட> வெட்கமோ> என்னவோ> வீட்;டுத் தோட்டம் சூப்பரா இருக்கு சுற்றிப் பார்க்கிறேன்> என்று எழுந்தார். கூடவே ரூபாவின் அண்ணன் எழுந்து மாப்பிள்ளையுடன் துணைக்குப் போனார்.

மாப்பிள்ளையி;ன் பெரியப்ப> பெரியம்மா> ரூபா> அவள் அப்பா அம்மா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். சாந்திக்கு சுவர்க் கடிகாரம் மாலை
6.00 மணியை ஒலித்துக் காட்டியது. சட்டென எழுந்த> ரூபாவிடமும்> பெரியோர்களிடமும் அவசரமாக விடைபெற்றுக் கொண்டு> பேருந்தைப் பிடிக்க விரைந்தாள்.

பேருந்து பயணத்தில் சாந்தியின் மனம் அசைபோடத் தொடங்கியது.

இந்த மாப்பிள்ளையைக் கொண்டு வந்தது ட்ரஸரியலே சீனியர் கிளார்க்கான எங்க அண்ணன்தான். மாப்பிள்ளை வேலைக்குச் சேர்ந்த> எட்டு மாதங்கள் இருக்குமாம். விபத்தில் இறந்து போன அவங்க அப்பா வேலையை கருணை அடிப்படயில் கொடுத்தார்களாம். இருபத்தியாறு வயது ரூபாவுக்கு மூன்று அண்ணன்கள். ஒருத்;தருக்கும் கல்யாணம் நடக்கல. ரூபாவுக்கு ஒரு வழிபண்ணிட்டுத்தான், பையன்களுக்கு என்று அவளோட அப்பா அம்மா உறுதியாக இருந்தார்கள். அவளுக்கு ஏத்தமாதிரி எனக்குத் தெரிஞ்சு ஐந்து வருஷத்துக்குள்ள நூறு வரனாவது வந்திருக்கும். பேப்பரில் விளம்பரம் கொடுத்தும் ஒன்றும் பலனில்லை. ஏதோ விதத்தில் வந்த வரனெல்லாம் தட்டிப் போனது> நானும் இதற்காக > கவலைப்பட்டு என் அண்ணனிடம் ரூபாவோட சாதியில குணமான> நிரந்தர வேலையிலும் முக லட்சணமான பையன் பாhக்கச் சொன்னேன். அப்படி வரவழைக்கப்பட்டவர் தான் இந்த மாப்பிள்ளை. இந்த மாப்பிள்ளையைப் பற்றி நேற்று எங்க அண்ணன் சொன்னதாவது. நல்ல பையன். அவங்க குடும்பத்த நல்லா தெரியும். பையன் நீதி நேர்மைக்குப் பேர் போனவன். அவங்க மாதிரியே குனிஞ்ச தலை நிமிராதவன். ஏல்லோரிடமும் அவ்வளவு பணிவு. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பான். அவன் நம்ம சாதி இல்ல> நம்ம சாதியா இருந்துந்தா உனக்கே முடிச்சுடுவேன். ரூபாவோட சாதியா போயிட்டான். ரூபாவுக்குப் பொருத்தமானவன். பாவம் அவன் அம்;மாவும் சின்ன வயசுல போயிருச்சு. இப்ப அப்பாவும் போயிருச்சு. ஒரு தங்கை> ஒரு தம்பி கல்லுரியில் படிக்கிறான்.

அவங்க கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் இதுவரைக்கும் பத்து பைசா யார் கிட்டையும் லஞ்சம் வாங்கினது கிடையாது. அந்தப் பைனோட செக்ஷன்லே> லஞ்சத்தை ஷேர் பண்ணி தந்தாலும் வாங்க மாட்டான். 'ஒழச்ச காசே நிக்கமாட்டேங்குது. லஞ்சம் தான் நிக்கப் போகுதாக்கும். 'வாழ்க்iயில ஏதாவது ஒரு வழியில லஞ்சப் பணம் நம்மள சீரழிச்சிடும் சார்' . என்று ஞானி மாதிரி தத்துவம் பேசுவான் 'கலயாணங்கிறது> ஆயிரங்காலத்துப் பயிர். நாம பேசி வச்ச பொண்ணு மாப்பிள சந்தோஷமா இருந்த> நம்மள ஏத்துவாங்க. ஒரு மாதிரியா வீணா போச்சுன்னா> நம்;மள தூத்துவாங்க. கல்யாணத்த பேசி வக்கிறவங்களுக்கு ஒண்ணு மாலை வரும். இல்லேன்னா கத்தி வரும். பொதுவா நான் இந்த கல்யாண மேட்டர்ல ஈடுபடுவதில்ல. நானே முன்னே நின்று பேசுகிறேன்னா> மாப்பிள்ளைப் பயலோட சுப்பர் டைப் தாம்மா... என்று நீட்டி மடக்கிப் புகழ்ந்து தள்ளினான். பெண் பார்க்கும் படலத்தில் மாசக் கடைசியில் ஆபீசில் வேலை அதிகமானதால் அண்ணன் கலந்து கொள்ளவில்லை. பல நிமிடப்பயணத்திற்குப் பின் பேருந்து தனது ஸ்டாப்பில் நின்றது. சாந்தி இறங்கி வீட்டை நோக்கி விரைவாகப் பாய்ந்தாள். நிச்சயம் எப்போ? கல்;யாணம் எப்போ? தான் பேருந்து பிடித்து வந்த பிறகு என்ன நடந்தது? என்றெல்லாம் அறியும் ஆவலுடன் தொலை பேசியைத் துணை நாடினாள். 'நீங்கள் டயல் செய்த தொலைபேசி எண் பழுதடைந்துள்ளது.' என்றே சளைக்காமல் தொலைபேசி சொல்லிக் கொண்டே இருந்தது. சரி விடிந்தால் கல்லூரிக்குப் போவோம். அடுத்தநாள் காலேஜ் ஸ்டோன்பெஞ்சுக்கு ரூபா வருவாள். இனிப்பு செய்தியைக் கேட்போம்> என்று அமைதியானாள்.

இன்னைக்கு நம்ம பிரண்ஸுக்கெல்லாம் ஐஸ்கிரீம் பார்ட்டி. எக்ஸ்ட்ரா...எக்ஸ்ட்ரா... ஆமாம் ரூபா ஆடம்பரப்பிரியை> அவள் வசதிக்குத் தகுந்த மாதிரிதானே பார்ட்டியும் தருவாள். என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த சாந்தியின் நினைவை டூவீலர் சத்தம் ஒன்று கலைத்தது.

ரூபா டூவீலரில் காட்சியளித்தாள். சாந்தியின் மனம் 'என்ன ரூபாவின் முகத்திலே கல்யாணக் களை இல்லையே' என எண்ணத் தொடங்கியது. இன்னொரு மனம் சே! சே! இருக்காது. இன்னிக்கு பார்ட்டி உண்டுதான். எனச் சொல்லியது.

ரூபா என்ன சாந்தி இன்னும் பஸ்ட் பெல் அடிக்கலையா?

சாந்தி இன்னும் ஐந்து நிமிடம் இ;ருக்கு. எப்ப.. நிச்சயம்... எப்ப... கல்யாணம்... எப்ப... டும்...டும்...டும் எப்படி எங்க அண்ணன் புடிச்ச மாப்ள'...

ரூபா> 'இந்த இடம் எனக்கு புடிக்கல' இதைச் சொன்ன ரூபாவின் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை. வருத்தமும் இல்லை. சாந்திதான் கொஞ்சம் அதிர்ந்;து போய் அடுத்த விநாடி இயல்பு நிலைக்கு வந்து>

ஏன்...ஏன்....?

ரூபா, அவரே என்னிடம் மனச விட்டுப் பேசணும்னு அண்ணன் மூலமாகச் சொன்னார். சரின்னு ஐந்து நிமிடம் பேசினோம். மாப்பிள்ளை கொஞ்சம் முற்போக்கு வாதி போலிருக்கு. நகை சீர்வரிசை பத்தியெல்லாம் டிமாண்ட் பண்ணல. படிப்ப பத்தி> குடும்பச் சூழல் பத்தியெல்லாம் பேசினோம். பேச்சு வாக்கில் அவரோட சொத்து பத்து> பாங்க் பாலன்ஸ் எல்லாம் விசாரிச்சேன். எல்லாம் டேஸ்..டேஸ்;;... என்னைப் பெண் கேட்டு பெரிய பெரிய லட்சாதிபதி> கோடீஸ்வரனெல்லாம் வந்தாங்க. ஜாதகம் சரியிருக்காது. இல்லாட்டி பையன் சுமாரா இருப்பான். கை நழுவிடும். ஒங்க அண்ணன் பார்த்த மாப்பள ஆப்ட்ரால் கிளார்க் தான். சம்பளம் குறைவாக இருந்தாலும்> கிம்பளம் நிறைய வரும்னு தான் மாப்பிள்ளை பார்க்க வரச்சொன்னோம். பொழைக்கத் தெரியாத ஆள். லஞ்சம் வாங்குவீங்களான்னு கேட்டேன். தப்புன்னு உபதேசம் பண்றார். எனக்கு இது சரிபட்டு வராது. எங்க அப்பா அம்மாவும் அண்ணனும் என்னை மாதிரியே இந்த இடம் சரிபட்டு வராதுன்னாங்க.

சாந்தி இதற்கு மேல் கேட்கப் பொறாதவளாய்> மெதுவான குரலில் 'நிறுத்து ரூபா...நிறுத்து...' ரூபா சிறிதளவே திடுக்கிடச் செய்தாள். சாந்தி தொடர்ந்தாள். நீ அவசரப்பட்டு தெரிஞ்சிக்கிட்டயே தவிர> புரிஞ்சிக்கல... கல்யாணத்தப்பத்தி இல்ல.. இல்ல.. வாழ்க்கையைப் பத்தி. கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒங்க அப்பா அம்மாவுக்கே தெரியலை... புரியல. உனக்கு வர்ற மாப்பிள்ளையோட பணம் தான் முக்கியம்.. குணம் முக்கியமில்லை... உன்னோட டேஸ்ட்டுக்கு எஸ்டேட் மாப்பிள்ளையும்> ஸ்டேட்ஸ் மாப்பிள்ளையும் தான் லாய்க்கு. நீ ஸ்டேட்ஸ்க்கு ஆசப்பட்டு வேஸ்ட் ஆகிடக் கூடாந்துங்கற ஒரே எண்ணத்துல தான் இந்த இடம் சுமாரா இருந்தாலும் தங்கமான பையன அனுப்பி வச்சோம். எத்தனையோ பொண்ணுங்க பறக்கறதுக்கு ஆசப்பட்டு பெரிய இடத்துல புகுந்து> தொண்ணுத் தொம்பது சதவீதம் பெயிலியர் தான் ஆனாங்க. அது உனக்குத் தெரியுமோ? இல்லியோ? இதப்பத்தி வாழ்ந்து சலிச்சவங்ககிட்ட போய் கேளு. உன்ன சொல்லி குத்தமில்லை. கலிகாலம் அப்படி இருக்கு. நான் சொல்றது அறிவுரை... ஆலோசனை... எப்படி வேணாலும் எடுத்துக்கோ... இது வாழ்க்கை.. இது கல்யாணம்... பைய்யனோட கேரக்டர் தான் முக்கியம்... மறுபடியும் யோசிச்சு ஒரு முடிவு எடு. பிறகு 'ஆஸ்.. யூ.லைக்..இட்..' என்று முடித்துக் கொண்டாள்.

ரூபாவின் முகத்தில் மறுபரிசீலனைக்கான தடயங்கள் இல்லை. சாந்தி இதனை நன்கு கவனித்தாள்.

முதல் மணி கடகடவெனக் கதறியது.

ரூபா வேகமாக வகுப்பறையை நோக்கி அடியெடுத்து வைத்துவிடட்டாள்.

சாந்தி மெதுவாகத்தான் நடக்கத் தொடங்கினாள். ரூபா என்கிற ரூபாவதிக்கு ஏன் திருமணம் தடைபட்டு வருகின்றது என்று மிகத் தெளிவாக துல்லியமாகச் சாந்தி இப்பொழுதுதான் உணரத் தொடங்கினாள்.




anbushiva2005@gmail.com