இடியும் மின்னலும்

சரோ வர்ணன்

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நான் திடீரென பலமாக கேட்ட இடியோசைச் சத்தத் தினால் த்;pடுக்கிட்டு கண் விழித்தேன். மெல்ல போர்வையை விலக்கி ஆமை போல தலையை தூக்கி பார்த்தேன். இடிகள் வானவெளியில் உருண்டு உருண்டு சப்பரித்தன. வானம் அதனது மூடிய விழிகளைத் திறந்து ஒரு முறை பார்த்து விட்டு, பின் பட்டென இமை கதவுகளை மூடிக் கொள்வது போல மின்னல் விட்டு விட்டு பளீச் பளீச்சென பளிச்சிட்டது. நான் பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டேன். அறைக்குள் மின்னல் பாய்ச்சிய வெளிச்சம் எனக்கு பயத்தை கொடுத்தது. உடம்பு என் அனுமதியில்லாமலே வெடவெட என நடுங்கியது. இதயம் அடிக்கும் டிக்டிக் சத்தத்தைக் கூட என்னல் கேட்க முடிந்தது. படபடப்புடன் போர்வை இழுத்து உடம்பு தெரியாமல் மூடினாலும், இடி சத்தம் போர்வையை துளைத்துக் கொண்டு காதுக்குள் புகுந்தது. மிரண்ட கண்களால் வெளியில் பார்த்தாலும், என் பார்வைக்கு போர்வை ஆதரவு கரம் நீட்டியது போல் இயற்கையின் சீற்றத்தக்கு தடை சட்டம் போட்டது.

அரிச்சுனா!அரிச்சுனா! அம்மா!அம்மா! ஏன மெல்ல என் உதடுகள் முணுமுணுத்தது.என் அம்மா அடிக்கடி அரிச்சுனா! அரிச்சுனா என சொல்லுவா ஆனால் ஏன் இப்படி சொல்கிறாள் என்ற காரணம் எனக்கு தெரியாது. இப்போதுதான் அம்மாவின் அருமை தெரிகிறது. பாவம் அம்மா. அவ இப்போது தொழிற்சாலையில் இரவு வேலை செய்துக் கொண்டிருந்தாலும், கட்டாயம் என்னை நினைத்துக் கவலைப்படுவாள். ஏன எனக்கு தெரியும்.

அம்மா வீட்டில் இருக்கும் நேரங்களில் இடி மின்னலுடன் மழை வந்தால் எனது அறைக்கு அம்மா வந்த விடுவாள். அன்று இரவு தன்னுடன் படுக்கும் படி கூறுவாள் .அல்லது என் கட்டிலில் வந்து அம்மா படுப்பா. ' பிரியா குஞ்சு பயமாக இருக்கா?' என அம்மா கேட்க நான் மேலும் கீழும் தலையாட்டுவதுடன் அம்மாவின் கைகளுடன் என் கைகளை கோர்த்துக் கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். அப்போதெல்லாம் அம்மா சிரித்துக் கொண்டே சொல்லுவாள் ' இது என்ன உடும்பு பிடி. ஆம்மா பக்கத்தில்தானே இருக்கிறேன்.' என மெல்ல மெல்ல தலையை வருடி விடும் போது தொடர்ந்து மின்னல் மின்ன வேண்டும் போலிருக்கும். எனது கட்டில் சிறியது என்றாலும், அம்மாவுடன், என் கட்டிலில் நெருக்கிக் கொண்டு படுப்பதிலுள்ள சுகம் அம்மாவினது அறைக்கு போய் அவர்கள் இருவருக்குமிடையில் படுக்கும் போது எனக்கு கிடைப்பதில்லை. காரணம் அப்பா அடிக்கும் குறட்டை சத்தமும், அதனுடன் கலந்து வரும் பீயர் நாற்றமும், வயிற்றை ஏதோ செய்யும். அம்மா எப்படி தான் அப்பாவுக்கு அருகில் படுக்கிறாளோ தெரியாது. ஒரு நாள் அம்மாவிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன்.

'அப்பாவின் வாய் மணக்குதும்மா'

'அப்பாவுக்கு வேலை செய்த களைப்பம்மா' என என்னை சாமானப்படுத்தினாலும், அப்பாவின் வாய் மணப்பதை எப்படி மறைக்க முடியும்? எனக்கு ஒன்பது வயதாகிறது அடிக்கடி டிவியில் காண்பிக்கப்படும் சிம்சன் காட்டூனில் வரும் ர்ழஅநச பீயர் குடித்து விட்டு இப்படிதான் கதைப்பார். அம்மா நினைக்கிறா நான் சின்னப் பிள்ளை எனக்கு ஒன்றும் தெரியாது என்று. ஆனால் எங்கள் பாடசாலையில் மதுபானம் குடிப்பது எவ்வளவுக்கு உடல் நலத்துக்கு கெடுதி என பலதடவைகள் ஆசிரியர்கள் கற்பித்திருக்கிறார்கள் இப்போது அம்மா இரவு வேலைக்கு போகிறாள். புகலில்தான் படுப்பா. ஏன்னை பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும், ஏனைய டியூசன் வகுப்புக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டுமென்பதற்காகதான் அம்மா இரவு வேலைக்கு போகிறாள்.

தொடர்ந்து மின்னலும்,இடியும், மழையும் போட்டி போட்டுக். கொண்டு என் சிந்தனையை களைத்தது. இடியின் சத்தம் என் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடுமோ என பயமாக இருந்தது. எழுந்த போய் அப்பாவின் ரூமில் போய் படுப்போமோ என நினைத்தாலும், எழுந்து என்னறையிலிருந்து அப்பாவின் அறைக்கு போக முடியாதப்படி லைட் எல்லாம் அணைந்து விட்டது. பவர்கட் இருள் ஒரு பக்கம், இடி சத்தம் மறுபக்கம் காதுகளை இரு கைகளால் மூடியபடி படுத்திருக்கிறேன்.

அம்மாவுக்கும்,, அப்பாவுக்கு நான் செல்லப்பிள்ளை எது கேட்டாலும், இல்லை என சொல்ல மாட்டார்கள். மற்றவர்களை போல சகோதர்கள் எனக்கு இல்லையே என்ற கவலை இருந்தாலும், ஆரம்பத்தில் நாங்கள் தொடர்மாடி கட்டிடத்தில் இருந்தப் போது எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நான் அவர்கள் வீட்டுக்கும், அவர்கள் எனது வீட்டுக்கும் வருவதால் தனிமை என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. தம்பி தங்கைகள் இல்லையே என்ற கவலையும் இருக்கவில்லை. ஆனால் சொந்தமாக வீடு வாங்கி வந்தப் போதுதான் என்னுடன் விளையாட யாருமில்லையே என அம்மாவை அடிக்கடி நச்சரிக்கத் தொடங்கினேன். ஏன் அம்மா எனக்கு மட்டும் தம்பி, தங்கைகள் இல்லை? என நான் கேட்க, அம்மாவின் கண்கள் கலங்கி விடும். கடவுள் கொடுக்கவில்லையம்மா என கவலை படுவதுடன் தனக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் ஒரு ஆப்ரேசன் செய்ததாக கூறுவா.

ஆம்மாவின் கண்கள் கலங்கவதைக் கண்டபிறகு இப்படியான கேள்வியை கேட்பதை தவிர்த்துக் கொண்டேன். ஆரம்பக்காலத்தில் அம்மாவும், அப்பாவும் காலையில் வேலைக்குப் போக, என்னை பாடசாலையிலிருந்து அழைத்து வந்து தனது வீட்டில் வைத்து பராமரிப்பது எங்கள் வீட்டுக்கு கீழே டியளநஅநவெல் வாடகைக்கு இருக்கும் ரஜனி அன்ரிதான்.. அவ மிகவும் நல்லவா. அங்கிளும் அப்படிதான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. அங்கிள் இரவு வேலைக்கு போவதால் பகலில் படுப்பார். எனவே ரஜனி அன்ரிக்கு போர் அடிக்கிறது என்று ஏன்னுடன்தான் அதிக நேரத்தை கழிப்பாள். விளையாடுவாள், நல்ல நல்ல கதைகள் சொல்லுவா. பாட்டு எல்லாம் பாடி காட்டுவாள். நடனம் கூட நன்றாக ஆடுவாள்.நானும் அவவிடம் படித்த பாட்டையும், கதையும் தமிழ் வகுப்பில் படிப்பிக்கும் டீச்சரிடம் பாடி காட்டி, கதையும் சொன்னால் தமிழ் டீச்சர் சுகி ' உங்களுக்கு இவ்வளவு அழகாக பாட்டும், கதையும் யார் சொல்லி தந்தது என கேட்டு சபாஸ் போடுவார்.

திடீரென ரஜன்p அன்ரியின் அப்.பா இறந்து விட்டார். அன்ரி ஓரே அழுகை இலங்கையில் பிரச்சனை என்பதால் போய் கடைசியாக அப்பாவின் இறந்த முகத்தைக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என அழுவாள். இந்த நேரங்களில் அம்மாதான் அன்ரிக்கு ஆறுதல் கூறி, சமைத்த கொடுத்தாள்.. இரவு அங்கிள் வேலைக்கு போவதால் .தனியாக படுக்க அன்ரிக்கு பயமென்பதால், அம்மா என்னை அன்ரியுடன் படுக்க அனுப்புவா. அப்போது அன்ரி தனது அப்பாவின் கதைகளை, அவர்பட்ட கஸ்டங்களை சொல்லி அழும் போது நான் அவவின் கண்ணீரை துடைத்து அழாதீர்கள் அன்ரி . எனக்கும் அழுகை வருகிறது. ஏன கூற அன்ரி என்னை கட்டிப் பிடித்து கொஞ்சுவாள். அம்மாவுக்கு இரவு வேலை கிடைத்தப் பிறகு அம்மா பகலில் படுத்திருப்பாவென்று சொல்லி வீட்டுக்கு அதிகம் வரமாட்டாள். ஆனால் என்னை அழைத்துக் கொண்டு பார்க்கில் விளையாடவும், கடைக்கெல்லாம் அழைத்துச் செல்லுவாள்.

ஒரு முறை நான் பாடசாலையில் விழுந்து கால் முறிந்து நடக்க முடியால் கஸ்டப்பட்டப் போது அன்ரிதான் என்னை தூக்கிக் கொண்டு திரிந்தாள். இப்படி என் மீது அதிக அன்பு காட்டுவதால் எனக்கும் அன்ரி மீது கொள்ளைப்பிரியம். ஏனக்கு கோபம் வரவேண்டுமென்பதற்காக தானும், அங்கிளும் வேறு வீட்டுக்கு மாற போவதாக கூறுவாள்.அப்போது 'பிளீஸ் அன்ரி போகாதீர்கள்'என நான் கெஞ்சுவதை பார்த்து அப்பாவும், அம்மாவும் சிரிப்பார்கள்.

எனது மாமா ரகு அமெரிக்காவிலிருக்கிறார். அவரோடு இருக்கும் தாத்தாவுக்கு சுகமில்லை என்று தாத்தாவை பார்க்க அங்கு வரும்படி மாமா போன் பண்ணி;னார். எனக்கு பாடசாலை லீவு என்பதால் போக சுலபமாக இருந்தது ஆனால் அப்பாவுக்கு விடுமுறை எடுக்க முடியாததால் அவர் எங்களுடன் வரவில்லை. மாhமாவின் மகன் தனு எல்லா இடங்களையும் சுற்றி காட்டினான். இரண்டு வாரங்கள் அங்கு நிற்பதற்காக அம்மா எல்லா சாப்பாடுகளை சமைத்து பிரீஜில் வைத்த விட்டு வந்தாள். தினமும் அமெரிக்காவிலிருந்து சாப்பிட்டீர்களா? மருந்து எடுத்தீர்களா? ஏன கேள்விக்கு மேல் கேள்வி கேட்பதை கேட்டு மாமா சிரிப்பார்.'அக்கா அத்தான் என்ன சின்னப்பிள்ளையா? ஏன் இங்கு வந்து அவருடன் தொணதொணத்துக் கொண்டிருக்கிறாய்? ஏன கேட்க ' தம்பி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு சுகர் கூடி விட்டால் யார் பார்ப்பது? அதுதான் சமையல் எல்லாம் செய்து விட்டு வந்தேன் என்றாள்..

பின் மேசை மீது இருந்த ரிசு பெட்டியிலிருந்த ரிசுவை உருவி எடுத்து அம்மா முகத்தை ஒரு முறை சீறி துடைத்தாள். அம்மாவுக்கு நல்ல தடிமன், காய்ச்சல் என கூறி படுக்கப் போய் விட்டாள். மாமாவும், மாமியும் இருவரும் அம்மா அப்பா மீது காட்டும் அன்பை பற்றி பெருமையாக பேசிக் கொள்வதை பார்க்க எனக்கும் சந்தோஸமாக இருந்தது.

இரண்டு வாரம் கழித்து வீடு திரும்பிய போது அப்பா ஒன்றும் சாப்பிடாமல் சமைத்த சாப்பாடு எல்லாம் பிரீpஜில் அப்படியே இருக்க, ரஜனி அன்ரி சமைத்த சாப்பாட்டை அங்கிள் சாப்பிடும் படி வற்புறுத்தியதால் அம்மா சமைத்த சாப்பாட்டை சாப்பிடவில்லை என அப்பா கூற, அம்மாவுக்கு வந்த கோபத்தை எப்படி சொல்வது? காலைப் பிடித்து கெஞ்சாத குறையாகக் கண்களில் நீர் மல்க நின்ற அப்பாவை ஏதோ போனால் போகிறது என அம்மா மன்னித்தார்.

பயங்கர சத்தத்துடன் ஒரு இடி என் காதை செவிடாக்கியது போலிருந்தது. மெல்ல எழுந்து அப்பாவின் அறைக்கு போனேன். கண்களால் ஒன்றும் பார்க்க முடியவில்லை. தடவி தடவி பார்த்தப் போது அறை கதவு மூடிக் கிடந்தது. திறந்துக் கொண்டு உள்ளே போக பயமாக இருந்தது.நித்திரை கொள்ளும் வேலையில் அப்பாவை குழப்பினால் பூமிக்கும் வானத்துக்கும் குதிப்பார்.பேசாமல் ரஜனி அன்ரியுடன் படுப்போம் என மனம் கூற, மெல்ல மெல்ல படிகளில் கால்களை வைக்கிறேன். எத்தனை நாட்களுக்கு பிறகு அன்ரியுடன் படுக்கப் போகிறேன் என்னைக் கண்டால் அன்ரி எவ்வளவு சந்தோஸப் படுவாள்.

நினைத்துக் கொண்டே கதவுக்கு அருகில் கையை வைக்கிறேன். திடீரென அறைக்குள்ளிருந்து சிரிப்பொலி கேட்க, கதவை தட்ட போன நான் ஓ! அங்கிள் வேலைக்கு போகவில்லை போலிருக்கு என்ன செய்வது எனது அறையில் படுப்போம் என திரும்பிய போது அன்ரியுடன் அங்கிள் சிரித்து பேசும் சத்தம் கேட்டது இது ... இது அங்கிள் குரலில்லையே அப்பாவின் குரலில்லையா? அன்ரிக்கும் இடி மின்னல் என்றால் பயம் போலிருக்கு என எண்ண்p;ய நான், படிகட்டுகளில் தட்டுதடுமாறி மேலே வரும் போது டெலிபோன் அலறியது. இருட்டுக்குள் போனை எடுக்க போன போது எனது முழங்காலை மேஜையின் கால் நன்றாக இடித்து விட்டது ஆ! அம்மா என்றேன் அனிச்சையாய்க் கண்களில் நீர் துளித்தது. ரிஸிவரை எடுத்து 'ஹலோ'' சொல்வதற்குள் இணைப்பு அறுந்து விட்டது.சலிப்புடன் போனை வைத்து விட்டு திரும்பும் போது யாரோ வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்க ஏற்கனவே இடி, மின்னல் சத்தத்தில் பயந்து போன என் உடம்பு மெல்ல நடுங்கத் தொடங்கியது.
பக்கத்தில் இருந்த மேஜைக்கு அருகில் நான் ஒளிந்துக் கொள்கிறேன்.கண்கள் மட்டும் வாசல் கதவை பார்த்தக் கொண்டிருக்கிறது. திடீரென அம்மா கதவை திறந்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அவவின் மூக்குத்தி இருட்டிலும் பளபளக்கிறது.

அம்மாவை கண்ட சந்தோஸத்தில் இருட்டையும் பொருட்படுத்தாது ஓடுகிறேன். ஆம்மா ஆச்சிரியத்துடன் என்னை பார்க்கிறாள். லைட் இல்லாததால் வேலை இல்லை. அது சரி அப்பா எங்கே? இவ்வளவு நேரமாக படுக்காமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

ரஜனி அன்ரிக்கு இடி, மின்னல் என்றால் பயமென அப்பா கீழே படுக்க போய் விட்டார். கூறி விட்டு அம்மாவின் பதிலுக்கும் காத்திருக்காமல் ஓடுகிறேன் அம்மாவுடன் சேர்ந்து படுக்கும் மகிழ்ச்சியில்..... இப்போது வெளியில் இடியும:; மின்னலும் ஓய்ந்து விட்டன.



sarovarnan@gmail.com