உதவாத உள்ளம்!!!
கலைமகள்
ஹிதாயா றிஸ்வி இலங்கை.
'உம்மா...உம்மா...தாயே...?
மிஸ்கீன் வந்திருக்கேன் உம்மா....ஏதாச்சும் ஹதியா தாங்கம்மா ...'குரல்
கேட்டு முகம் சுழித்தவளாய் அவசரமாக விரைந்து வருகிறாள் றிபா.'ஏய்...சனியனே...!
இந்த விடி காலையில் உனக்கு என் வீட்டை விட்டா அக்கம் பக்கம் வேறு வீடே
இல்லையா....?' 'உனக்கு தர சில்லறை இல்லை. தொலைந்து எங்காவது போ' றிபாவின்
இரக்கமில்லாத மனதையும்இமுட்டாள் தன பேச்சையும் கேட்ட அந்த ஏழை மாதுக்கு
ஈட்டியால் குத்தியது போன்றிருந்தது.
தாங்க முடியாத மனவேதனை! கண்ணீர் துளிகளாய்
சிதறியது. இப்படியும் எம் சமூகத்தில் பெண்கள் இருக்கின்றார்களே! நீண்ட
பேறு மூச்சுடன் வெளியானாள்.வீட்டுக்கு யாசகம் கேட்டு வரும் ஏழைகளை வெறும்
கையோடு திருப்பி அனுப்பாதீர்கள் என்று எமது மார்க்கம் சொல்லுகின்றதே!
யா.. அல்லாஹ் பெண் மனசு மென்மையானதுஇஇரக்கமானது என்று சொல்லுவார்களே...!
ஆனால் இந்த பெண் மனசு வன்மையாகி விட்டதே! ஏழைக்கு உள்ள இதயம் கூட இந்த
பணக்காரர்களிடம் இல்லையே! நீதான் இவர்களுக்கு நல்ல மனத்தைக் கொடுக்கனும்
அல்லாஹ்! கவலை நிறைந்த இதயமுடன் போய் கொண்டிருந்தாள்.
முன் ஹோலில் தூங்கிக் கொண்டிருந்த
சில்மியின் காதுகளில் உம்மா றிபாவின் கொடுமையான வார்த்தைகள் தீயாய்
விழுந்தன.
'அடுத்தவன் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே' என்று எமது மார்க்கம்
சொல்கிறது.ஆனால் எம் வீட்டில் நடப்பதோ எதிர் மாறானதே! நினைத்துப்
பார்க்கவே அவன் கண்கள் கண்ணீரை வடித்தன.கேட்டு வந்த அந்த ஏழையை ஏசி
விரட்டி விட்டாங்களே உம்மா! எவ்வளவு தான் இருந்தும் கூட இல்லாதது போல்
அல்லவா நடந்து விட்டார்கள்.கல் மனமாவது அந்த ஏழை பெண்ணின் அன்பான குரல்
கேட்டால் கரைந்து போய் விடுமே! இடது கைக்கு தெரியாமல் கொடுங்கள் என்று
சொல்லியுள்ள எம் அண்ணலாரின் அமுத வாக்காவது இவங்களுக்கு தெரியவில்லையே......
எப்ப தான் இவர்கள் மணம் திருந்துமோ...? சின்ன மகன் சில்மியின் சிந்தனையில்
பென்னம் பெரிய எண்ணங்கள் உருவாகத் தொடங்கியது. அடுத்த கனம்இவீட்டை விட்டு
வெளியேறினான். அவன் செலவுக்காக பெற்றோர் கொடுத்த பணத்தையெல்லாம் சேகரித்து
வைத்த உண்டியலை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக அந்த ஏழை பெண்ணைத் தேடி
நடந்தான்.
'தன்னைப் போல் ஓர் பெண் தானே அவள்'
நினைத்துப் பார்க்கத் தவரிய தாயை நினைத்து கவலைப் பட்டான் சில்மி.லுகர்
தொழுகை நேரமானதால் தொழுது விட்டே அந்தப் பெண்ணை தேடிச் செல்லலாம் என்று
நினைத்தவாறு பள்ளிக்குச் சென்றான் அவன். பள்ளியின் பின்னால் இருந்த
அகதிகள் வாழும் இருப்பிடத்தின் முன்னே சோகமாக இருந்த அந்த ஏழைப் பெண்ணைக்
கண்டு எதுவுமே செய்ய முடியாது தவித்தான்.'உம்மா ....ஏன்...உம்மா கவலையா
இருக்கீங்க... நீங்க எந்த...ஊர்...?எப்படி இங்கு வந்தீங்க...? நீங்களும்
இந்த அகதிகளோடா இருக்கீங்க...?' பாசத்தோடு பதறிப் பதறி கேள்வி மேல்
கேள்விகள் கேட்கும் அந்த பையனைப் பார்க்க அவளுக்கு வியப்பாகவும் கவலைகள்
மறந்து மனம் சந்தோசமாகவும் இருந்தது. 'அது சரி நீங்கள் யாரு மகன்?'
தலைமுடியை தடவிக் கொண்டே வினவினாள் அவள்.'நான்...நான்....உம்மா...இப்ப
உங்களுக்கு ஏசி விரட்டினாங்களே அந்த பெரிய வீட்டு உம்மா... அவங்கட ஒரே ஒரு
மகன் நான் தான். எங்கட உம்மா முன் பின் யோசிக்காம உங்கள எசிட்டாங்க.
அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் உம்மா. அல்லாஹ்வுக்காக அவங்களை
மன்னிச்சிடுங்கம்மா.இந்த பணத்தை வேண்டாமென்று சொல்லாம வங்கிக்கோங்கோ'
இப்படியான நல்ல மகனை பெற்றவளா அந்த தாய்...? அப்படி திட்டித் தீர்த்தாளே!
' மகன் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்! மறுமையில் அகிலத்துக்கே
அருட்கொடையாக அவனியிலே வந்துதித்த எம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்
எம்மைப் போன்ற ஏழைகளுடனே தான் இருப்பவர்கள் மகன். அந்த பாக்கியத்தை விடவா
மகன் இந்த பேச்சுக்களும்! ஏச்சுக்களும்! மகன் நான் ஒரு பணக்கார பெண்
1990ம் ஆண்டு கிழக்கு மாகாண கிராமங்கள் தாக்கப்பட்டதில் என் பெற்றோரை
துப்பாக்கி பலியாக்கி விட்டது. அவங்கடமௌனத்துக்குப் பிறகு உடமைகளை இழந்து
வீடு வாசல்களை விட்டு உடன்பிறப்பு ஒரே ஒரு நானா அவரையும் பிரிந்து
அகதியாக புத்தளம் வந்து சேர்ந்தேன் மகன்.என் நானா என் நனாஸ்
பாசமுள்ளவர்.அவரைத் தேடித் தேடி தவிக்கின்றேன்.தொடர்ந்து தேடிக் கொண்டே
தான் இருக்கின்றேன். ஆனால் என் அன்பான நாணவைக் காணலியே...!'குரல் தள
தளக்க கண்கள் கண்ணீரை வடிக்க வேதனையோடு மீண்டும் தொடர்ந்தாள்.'மகன் உன்
முகத்தை பார்க்கும் போது எனக்கு உன் மீது ஒரு தனிப்பட்ட பாசம்
வருது.என்னட நானா முகச் சாயல் கூட உன் முகத்திலே தெரியுது மகன்....'
அவளின் வேதனை நிறைந்த செய்திகளைக் கேட்டு சில்மியும் கண் கலங்கினான்.
சரிம்மா ...நீங்க கவலைப்பட வேண்டாம்! நான் அடிக்கடி வந்து உங்களைப்
பார்க்கிறேன்.உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் நான் என்
வாப்பாவிடம் சொல்லி நிறைவேற்றுகின்றேன். இப்போ நீங்க போய் கொஞ்சம் தூங்கி
எழும்புங்க எல்லா சோகமும் தானாகவே போய் விடும்.' என்று கூறிவிட்டு
திரும்பி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான்
சில்மி அஸர் தொழுகைக்காக மீண்டும் பள்ளிக்கு
சென்ற போது...ஜனங்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டு என்னவென்று
பார்ப்பதற்காக போனான். அங்கே அவன் கண்ட காட்சி மனத்தை இடித்து உடைப்பது
போலிருந்தது.ஆம்! திடீரென்று மாரடைப்பு வந்ததால் அப் பெண் மரணத்தை
தழுவியிருந்தாள்.அப்பெண்ணைக் கண்ட ஜனங்கள் எல்லாம் கவலையாக பேசிக்
கொண்டிருந்தார்கள்.முகாமில் உள்ளவர்களின் கண்களும் கலங்கிப் போயிருந்தன.
பிறகு சிறிது நேரத்தில் அடிக் கழுவி ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக சிலர்
போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.சில்மியின் மனசு எரிமலையாய் வெடித்துக்
கொண்டிருந்தது.சில்மி அழுகையுடன் வீடு நோக்கி வருவதைக் கண்ட றிபா 'ஏன்
மகன் அழுதுகிட்டு வாறீங்க ...முகம் சிவந்து போய் இருக்கே என்ன நடந்திச்சு
சொல்லுங்க மகன்.' அவன் நடந்த விடயங்களை அழுது அழுதுசொல்லி
முடித்தான்.அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த றிபாவின் கணவர் சியாம் 'மகன்
அந்தப் போம்புள்ள வேறு என்ன சொன்னா?'என்று கேட்டார். 'வாப்பா என்ன
பார்க்குறப்போ ...அவங்கட நானாவைப் பார்க்கிறது போல இருக்குதாம்.ஏன் மீது
தனிப்பட்ட பாசம் வருகிறதாம் என்று சொன்னப்பா' சியாமுக்கு சம்மட்டியால யாரோ
தலையில அடிப்பது போலிருந்தது.தன் மனைவி றிபாவைப் பார்த்த அவர் இ'றிபா
யாரைக் காண வேண்டுமென்று துடியாய் துடித்துக் கொண்டு தேடி அலைந்து
திரிந்தேனோ ...அதே ஜீவன் தான் என்னுடைய ஒரே ஒரு தங்கை பாத்திமா
அவளாகத்தான் இருக்குமோ தெரியாது' சியாம் ஒரு கணம் தன் கடந்த கால வாழ்வில்
நடந்து போன கசப்பான நிகழ்வுகளையெல்லாம் ஞாபகப்படுத்திப் பார்த்தான்.'நாம்
ஊர் தாக்கப்பட்ட போது மக்களெல்லாம் வெளியேறி பள்ளிவாசல் வளவில் தானே
அகதிகளாக குடியேறினார்கள்.அதில் எனது தங்கச்சியும் அடங்குவாலோ? அப்போ
சல்மா சாச்சியோட தானே இருந்தா அப்படின்னா?...அந்த பொம்புள்ள என்
தங்கச்சியா இருக்குமோ?...'விரைவாகப் போகின்றார் சியாம்.கூடவே றிபாவும்,
சில்மியும் சென்றனர். 'சியாம் நீங்களா ...வாங்க மகன் பாருங்க உங்கட
தங்கச்சி பாத்திமா! மௌத்தாகி போயிட்டா...'என்று சாச்சி துடித்து அழுவதைக்
கண்ட சியாமுக்கு இந்த ஊரிலே தன் தங்கை இருந்த செய்தி தெரியாமல் போனது
தலைவிதியகத் தோன்றியது.வேதனைகளை எல்லாம் மறந்து றிபாவின் மைனி பாத்திமா
நிம்மதியாக மீளாத்துயிலில் மூழ்கியிருந்தாள்.அந்த ஏழை மாதுவின் மைனி றிபா
தன் பணமே தன் மைனிக்கு உதவவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் திகைத்து
நின்றாள்.
sk.risvi@gmail.com |