பரிகாரம் தேடியே….

முகில் தினகரன், கோயமுத்தூர்.

காலை ஏழரை மணி.

அந்த மருத்துவமனையின் சவக்கிடங்கு வாசலில் வெளிறிப் போன முகத்தோடு அமர்ந்திருந்தான் சிவசைலம்.

கேன்டீனிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அழகுப்பாண்டி விசாரித்தான்.  'என்ன சிவம் மொகமெல்லாம் வாடிப் போய்க் கெடக்கு?…என்ன சமாச்சாரம்,…வீட்ல எதுனா பிரச்சினையா?”

''ப்ச்வீட்ல இல்ல அழகுஇங்கதான் பிரச்சினை

"என்னது….இங்கதான் பிரச்சினையா?…என்ன சொல்லுறே சிவம்,…டீன்கிட்ட எக்கச்சக்கமா வாங்கிக் கட்டிக்கிட்டியா?”

"இல்லப்பாநேத்திக்கு ராத்திரிஒரு சவம் வந்திச்சு….”

"சரி…,”

"அதோட போஸ்ட்மார்ட்டம்இன்னிக்குத்தான்பத்துபத்தரைக்கு டாக்டர் வந்ததும் சொல்லும் போதே அவன் முகம் சோகத்திற்குத் தாவ

….உறவுக்காரங்களா,”

"ம்ம்ம்உறவுக்காரங்கதான்ஆனா எனக்கில்லைநம்ம அருணகிரிக்கு

அருணகிரி சிவசைலத்தின் சக ஊழியன். கிட்டத்தட்ட ஐம்பதைத் தொட்டு விட்ட அவன்  அந்தச் சவக்கிடங்கில் போஸ்ட்மார்ட்டம் முடிந்த சவங்களின் உள்ளுறுப்புக்களை மீண்டும் எடுத்து உள்ளே திணித்து ஒரு சாக்குப்பையைத் தைப்பது போல தைக்கும் பணி புரிபவன்.  ஓவ்வொரு முறை அதைச் செய்யும் போதும் அவன் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடும். 

ஒரு முறை சிவசைலம் அதைக் கேட்டே விட யாராயிருந்தா என்னப்பா,…இவனும் ஒரு தாய்க்குப் பொறந்து….தாய்ப்பால் குடிச்சுதரையில் தவழ்ந்துதாய் அன்பிலும்….தகப்பன் அரவணைப்பிலும்தானே வளர்ந்திருப்பான்,…முந்தாநாள் வரைக்கும் இந்த உலகத்தை முழுசாப் பார்த்துரசித்துஅனுபவிச்சு வாழ்ந்திட்டுஇன்னிக்கு இப்படிக் கூறு போடப்பட்டுக் கெடக்கறானேவாழுற காலத்துல என்னென்ன ஆசைகளைகனவுகளைசுமந்திருப்பானோ,..எத்தனை எதிர்பார்ப்புக்கள்….ஏக்கங்கள் இவனோட இருதயத்துக்குள்ளார இறுகிப் போய்க் கெடக்கோ,…ஹூம்நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் செய்தேனோ தெரியலை….ஆண்டவன் எனக்கு இப்படியொரு தொழிலைக் குடுத்திட்டான். என்று அருணகிரி அன்று சொன்ன பதில்  சிவசைலத்தின் காதுகளில் இப்போதும் ஒலித்தது.

"என்ன சிவம் சொல்றே,…நம்ம அருணகிரிக்கு உறவா,..” வார்டு பாய் அழகுப்பாண்டி கிசுகிசுப்பாய்க் கேட்டபடியே சிவசைலத்தை நெருங்கி வர

"ஆமாம் அழகுஅவரோட சொந்த மகன்தான்இப்ப டெட் பாடியா உள்ளார கெடக்கான்

"அடக் கடவுளே….எப்படி சிவம்,…எப்படி ஆச்சு,…ஏதாச்சும் ஆக்ஸிடெண்ட்டா?”

"இல்ல அழகு….இது போலீஸ் கேஸ்போன வாரம் பேப்பர்ல போட்டிருந்தானல்ல,…பத்து வயசுப் பள்ளிக்கூடச் சிறுமியை யாரோ கற்பழிச்சுக் கொலை பண்ணிட்டாங்கன்னு,”

"ஆமாம்ஆமாம்படிச்சேன்…”

"அந்தக் குற்றவாளியப் பிடிச்சுட்டாங்க……அது வேற யாருமில்லைஉள்ளார பொணமாக் கெடக்கறானே அருணகிரியோட மகன்அவன்தான்

"அடப்பாவமே பெண்ணைப் போல வாயில் கை வைத்து அங்கலாய்த்தான் வார்டு பாய்.

"பாவிப்பயல்பண்றதையும் பண்ணிட்டுபோலீஸ் அரெஸ்ட் பண்ணி கோர்ட்டுக்குக் கொண்டு போறப்ப தப்பிக்க முயற்சி பண்ணியிருக்கான்அப்படித் தப்பிச்சு ஓடும போது போலீஸ் சுட்டதில்தான் செத்துப் போய்ட்டான்ஹூம்….அருணகிரி எவ்வளவு நல்ல மனுஷன்நல்ல மனசுக்காரன்அவனுக்குப் போய் இப்படியொரு மகன்

மதியம் மூணு மணி.

போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுகண்டபடி குதறிப் போடப்பட்டிருந்த தன் மகனின் பாகங்களை நிதானமாய் எடுத்து உள்ளே திணித்துக் கொண்டிருந்தான் அருணகிரி.

சற்றுத் தள்ளி நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவசைலம் வியப்பின் உச்சியில் இருந்தார். "என்னாச்சு இந்த அருணகிரிக்கு,….யார் யாரோ சவங்களைத் தைக்கும் போதெல்லாம் கண்ணீர் விட்டு அழும் மனுஷன்இன்னிக்கு தன் சொந்த மகனோட சவத்தைத் தைக்கும் போது துளியும் சோகமில்லாமஅழுகையில்லாமஇறுகிப் போன முகத்தோட செய்யறானேஏன்,…ஒரு வேளை அவனுக்கு அது தன் மகனோட பாடின்னு தெரியாதோ,…”

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தன் பணியைச் செவ்வனே செய்து முடித்து விட்டு வெளியே வந்த அருணகிரியை நெருங்கி வந்த சிவசைலம் "அண்ணே

"என்னப்பா,”

"அண்ணேவந்துஇப்ப நீங்க தைச்ச சவம்….,”

"தெரியும்என் மகனோடது

அந்த பதிலைக் கேட்டதும் சிவசைலத்தின் மொத்த உடலும் அதிர்ந்தது.

"ஏண்ணேயாருன்னே தெரியாத சவங்களைத் தைக்கும் போதெல்லாம் கண்ணுல தண்ணி வருமே உங்களுக்குஅப்படியிருக்கும் போது இன்னிக்கு சொந்த மகனைத் தைக்கும் போது எப்படிண்ணே,”

விரக்தியாய்ச் சிரித்த அருணகிரி த பாருப்பாஇப்ப நான் தைச்ச சவம் ஒரு மனுசனோட சவமாயிருந்திருந்தா நிச்சயம் கண் கலங்கியிருப்பேன்இவன் மனிதனல்லமனித வடிவில் உலவிக்கிட்டிருந்த மிருகம்பத்து வயசுச் சிறுமிய கொஞ்சமும் இரக்கமில்லாமச் சிதைச்ச ஒரு சைத்தான்இது அழிக்கப்பட வேண்டிய

விஷ ஜந்துஇதுக்காகவெல்லாம் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை..

"என்ன இருந்தாலும்உங்க மகன்…”

"அந்தப் பாவத்துக்குத்தான் பரிகாரம் தேடிட்டிருக்கேன் சொல்லி விட்டு அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வேக வேகமாக நடந்த அருணகிரியை குழப்பமாய்ப் பார்த்தபடியே நின்றிருந்தான் சிவசைலம்.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்தத் தகவல் எல்லோருக்கும் வந்து சேர்ந்தது.

"பாவம்அருணகிரி….பையன் செஞ்ச காரியத்துனால அவமானம் தாங்காமஇனி சமூகத்துல நடமாட கேவலப்பட்டுக்கிட்டு….தூக்குல தொங்கிட்டார்…”

 

(முற்றும்)

                                                           

mukildina@gmail.com