டார்வின் தியரி

நியாஸ் அஹமட்

படிக்கும் போது... எனக்கு அடுத்த நம்பர் பார்த்திபனுக்கு. எல்லா 'எக்ஸாமிலும்' என் பின்னாடிதான் அவன் வருவான். 'எக்ஸாமுக்கு' வந்த முதல் வேலை, என்னய தயார் படுத்துவதுதான். 'மச்சி எப்டி படிச்சிருக்கே? உன்னய நம்பித்தான் நான் இருக்கேன், நல்லா படி மச்சி' என்று ஒன்னு ரெண்டு பில்டப்பப் போட்டுட்டு, கடைசி நிமிடம் வரை என்னய படிக்கச் சொல்லிவிட்டு.... அவன் பந்தாவாக வலம்வருவான். இதுல இது வருதுன்னு ரமேஷ் சொன்னான், அதுல அது வருதுன்னு மகேஷ் சொன்னான்னு சில பல அட்வைஸ்கள் வேறு கொடுப்பான்.

எக்ஸாம் நடக்கும் நாட்களில் என் அம்மாவைவிட அதிக அக்கறையோடு பார்த்துப்பான். நானும் இல்லாத பந்தாவெல்லாம் பண்ணுவேன் (கெடைக்கும் போதே மஞ்ச குளிச்சிரனும் இல்லன்னா.....). எனக்கு பூஸ்ட்தான், கிங்க்ஸ் சிகரேட்டுட்தான்னு..., நம்ம காட்லயும் மழைபெய்யும். அது ஒரு சுகானுபவம். நான் 'என்ன மச்சி என்னய நம்பியே வர்ரீயேன்னு...?' கேட்டா 'என் ஆபத்பாந்தவன், அநாதரட்சகன்.... அஞ்சாநெஞ்சன்...., நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை' என்பான். நானும் நம்பளையும் ஒருத்தன் இப்படி நேனைச்சிருக்காநேன்னு பீல்ஆவி அவனுக்கும் சேர்த்து படிப்பேன் (நேஜமாளுமேபா!!).

எக்ஸாம் ஹாலில் நான் எப்பவாவது எதேச்சையாகத் திரும்பிப் பார்ப்பதுபோல் இவனைப் பார்த்தால்.... ஏதோ இவன்தான் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கப் போறா மாதிரி, யோசிப்பான். நான் முதல் 'அன்ஸர்' புக் எழுதி முடித்து 'அடிஷனல்' புக் வாங்கி உட்கார்ந்ததும்....., இவன் இம்சை ஆரம்பிக்கும். புதுப் பொண்டாட்டிய படுக்கைக்குக் கூப்ட்ராமாதிறியே.... கால நோன்றதும், காது கூசும் வினோத ஒலி எழுபபுறதும்னு, என்னைய எழுத விடாம பண்ணுவான்.

என் பேப்பர அவன் டேபுளுக்கும், மறுபடி அந்த பேப்பர என் டேபுளுக்கும் மாத்த.... புதுப் புது ஐடியா பண்ணுவான். 'எப்டிடா மச்சி இந்த ஐடியாவெல்லாம் யோசிக்குற,  இந்த யோசனைகள கொஞ்சம் படிப்புளையும் காட்டலாமிள்ளன்னு....?' கேட்டா 'போ மச்சி நேத்து என் ஆளோட அவ வீட்டுக்குப் போனதுல லேட் ஆயிடிச்சிடா' 'அடப்பாவி... அவ வீட்ல என்னடா பண்ணீங்க....?' 'என்னத்த பண்ணுறது சும்மா பேசிக்கிட்டிருந்தோம்ன்னு' கண்ணடிப்பான்.

நானும் காதலுக்கு உதவுனதா இருக்கட்டுமேன்னு..., அவனுக்கு என் எல்லா பேப்பரையும் காண்பிப்பேன். அசுர வேகத்தில் எழுதி முடிப்பான் பின்ன எக்ஸாம் தொடங்கி ஒருமணிவரை சும்மாதான் இருப்பான்.... என் பேப்பர் போன கணம்...,அவனுக்குள்ள இருக்க அந்நியன் முழிச்சிக்கும்.... சும்மா பர பரன்னு எழுதிமுடிப்பான்.

ரிசல்ட் வந்ததும் என்னைவிட எப்படியும் ஒரு அஞ்சு மார்க் அதிகம் வாங்கியிருப்பான்... 'என்ன மச்சி இது, உன்னப் பார்த்து எழுதுன எனக்கு அதிகம் மார்க் போட்டிருங்காங்க... என்ன கொடுமை இதுன்னு?' பீலிங்ஸாக் கொட்டுவான். நானும் அத உண்மைன்னு நம்பி திருத்துன வத்திமாருங்கள வாரி கொட்டுவேன். இது கடைசி வருஷம் வரை தொடர்ந்தது.

பின் மப்பில் ஒரு நாள் மல்லாக்கக் கிடக்கும் போது...... 'மச்சி.... நா எப்டி தெரியுமா எல்லா எக்ஸாமிலும் உன்னவிட நிறைய மார்க் எடுத்தேன்?'..... என்று கொசுவத்தி சுத்தினான். 'அது வந்து மச்சி...., நீ கொஞ்சம் சுமாராப் படிப்பே, ஆனா உன்னவிட சரவணன் நல்லாப் படிப்பான். அதனால உங்க ரெண்டு பேர் பேப்பரையும் மேட்ச் பண்ணி பார்த்து..., எது கரைக்ட்டோ, அதைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன். 'அகவுண்ட்ஸ்' அன்ஸர் எல்லாம் அவன் கரைக்ட்டா போடுவான்...., நீ கொஞ்சம் சொதப்பி இருப்பே, அதனால நீ தப்பாப் போட்டத அடிச்சிட்டு...., அவன் போட்டத போடுவேன்னு' எனக்கு பிபி ஏத்துனான்.

'அடப்பாவி.... என்னய ஏண்டா இப்படி ஏமாத்துனன்னு?' கேட்டா 'என்னப் பண்ணுறது.... மச்சி,  இதுதான் டார்வின் தியரி,  'சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்'' என்றான்.

பின் எனக்கும் அவன்தான், அவன் கம்பெனியிலேயே வேலை பார்த்து வைத்தான். அதுக்கப்புறம் நான் பல மன்னார் அண்ட் கம்பெனிகள் மாறினேன், ஆனால் அவன் அந்த கம்பெனியிலேயே இன்னும் இருக்கான். ஒரு நாள் எதேச்சையாக அவனை தியேட்டரில் பார்த்து 'எப்படி மச்சி இருக்கேன்னு?' கேட்டா 'நல்லா இருக்கேண்டா மச்சி..., ரெண்டு பசங்க' என்று தன மனைவியை காட்டினான் அதிர்ந்து 'என்னடா மச்சி உன் லவ் என்னாச்சி...?' ன்னா

சிரிச்சிக்கிட்டே சொன்னான் 'டார்வின் தியரி,  'சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்''.



niyaz_fawaaz@yahoo.com