தன்முனைக் கவிதைகள்  

கவிச்சுடர் கா..கல்யாணசுந்தரம், சென்னை

 

சொத்து பிரித்து 

வாங்கிய கையோடு பிள்ளைகள் 

பெற்றோர்களை விட்டுச் சென்றனர் 

முதியோர் இல்லத்தில் 

 

சுள்ளிகள் வைத்திருப்போர் 

தீ மூட்ட என்னோடு வாருங்கள் 

புல்லாங்குழல் வைத்திருப்போர் 

சற்றுத் தள்ளியே நில்லுங்கள் 

 

அணைத்தபடி நடந்தாலும் 

கைத்தடியைப் பிரிய மனமில்லை 

முதுமையின் பயணிப்பில் 

தள்ளாடும் கால்கள். 

 

உள்ளங்கை ரேகையில் 

எதிர்காலம் இருப்பதில்லை 

எல்லோருடைய உள்ளங்களிலும் 

இருக்கிறது என்பதே உண்மை 

 

உனது இன்னல்களுக்கு என்னிடம் 

ஆறுதல் மட்டுமே உள்ளது 

அதற்கான தீர்வு வேண்டுமெனில் 

அது உன்னிடமே உள்ளது 

 

யாசகனின் வேண்டுதல்களில் 

உணவே பிரதானமானது 

வீடுதோறும் அன்னபூரணிகள் 

வாழ்தலே அவசியமானது




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்