வல்லநற் பேச்சாளர் வலிமைசேர் கவிஞர்கள்
அல்லல் அகற்றும் அருந்தமிழ்ப் பேச்சுக்கள்
சொல்லிய செய்திகள் சேருமே பாவலர்க்கே
முகமறியாக் கவிஞரை முன்னாலே கண்டோமே
தகவுடைய செய்திகளைத் தவறின்றித் தந்தார்கள்
சிகரமாய் அமைந்ததே. சிந்தனைச் செல்வர்க்கு
அகரமிதே பன்னாட்டுக் கவிஞர்க்கு ஐயமில்லை.
கலைமகளின் ஆசியுடன் கன்னிதமிழ் வளர்ப்போம்
அலைமகளின் ஆதரவும் அமைந்திட் டாலே
நலமுடனே இந்நிகழ்வு நன்றாக மேலோங்கும்
பலமோ உங்கையில் பார்வையோ எங்களில்.
நன்றியுரை சொன்னவர்கள் நற்றமிழில் வல்லவர்கள்
இன்னல்சேர் இரவங்கே ஏற்றதனை அலைவந்தே
பன்முகப் பார்வையுடன் பக்குவமாய் பகர்ந்தனரே
அன்னைத் தமிழாள் ஆசி அன்னவர்க்கே.
புலவர் முருகேசு
மயில்வாகனன்