நெகிழியைத்
தவிர்த்து
நிலத்தை
நிமிர்த்து
பாவலர் கருமலைத்தமிழாழன்
காற்றுதனை
மாசாக்கும்
புகையைப்
போல
கழிவுநீரால்
மாசாகும்
ஆற்றைப்
போல
ஊற்றுதனை
அடைக்கின்ற
நெகிழி
யாலே
உயிர்காக்கும்
மண்ணெல்லாம்
மலடாய்
ஆகும் !
கூற்றுவன்போல்
நிலம்மீது
பரந்து
நின்று
கொட்டுகின்ற
மழைநீரைத்
தடுப்ப
தாலே
ஏற்றத்தில்
நீரிறைக்கும்
கிணற்றுக்
குள்ளே
எங்கிருந்தோ
வரும்நீரும்
நின்று
போகும் !
மக்காத
குப்பையாக
நெகிழி
நின்று
மண்தாயின்
மூக்கோடு
வாய
டைக்கும்
சக்கையாக
மண்சத்தைப்
பாழாய்ச்
செய்து
சந்ததிக்குச்
சாக்காட்டை
விருந்த
ளிக்கும் !
பொக்கைவாய்
தாத்தாபோல்
பூமி
யாகிப்
பொலிவிழந்து
மரம்செடிகள்
பட்டுப்
போகும்
தக்கபடி
நெகிழியினைத்
தடுக்கா
விட்டால்
தங்காது
துளிநீரும்
நிலத்திற்
குள்ளே !
தாள்களிலும்
துணிகளிலும்
பைகள்
தைத்தும்
தரமான பொருள்வாங்க
எடுத்துச்
செல்வோம்
பால்தயிர்நெய்
எண்ணெயினை
வாங்கு
தற்குப்
பாத்திரத்தைக்
கடைகளுக்கு
எடுத்துச்
செல்வோம் !
நாள்தோறும்
விழிப்புணர்வை
மக்கட்
கூட்டி
நஞ்சென்றே
நெகிழிதனைத்
தவிர்க்கச்
செய்து
கால்பதிக்கும்
வரலாற்றை
நமக்க
ளிக்கும்
கனிமவள
நிலந்தன்னை
நிமிர
வைப்போம் !