ஹைபுன் கவிதைகள்

ந.க.துறைவன்
 
 
ஆமைத் தலைகள் ஹைபுன் 
 
நத்தைஇ ஆமை ஆகியன ஓரே இனத்தைச் சேர்ந்த நீர் வாழ்வனவாகும். அவைகள் கெட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓட்டிற்குள் தன் உடல் உறுப்புக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. நத்தையின் ஆயுள் குறைவு என்றாலும்இ ஆமையின் ஆயுள் காலம் முந்நூறு ஆண்டுகள் என்று கூறுகின்றார்கள். இதன் வடிவைப்பைக் கண்டு தானோ என்னமோ இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் உயிர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் என்ற தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளார்கள். வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன்பேரில் பாதையில் எங்கும் விதவிதமானத் தலைக்கவசமணிந்துப் பயணிக்கின்றார்கள்..
 
பக்தர்களைக் காப்பது கந்தசஷ்டிக் கவசம்
வாகன விபத்திலிருந்து மனிதஉயிர்களைக் காப்பது
ஹெல்மெட் மென்பொருள் தலைக்கவசம்.
 
சாதுர்யமாய் ஹைபுன்

அவன் தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்களை நிறையப் படிப்பது வழக்கம். பலரும் அவனை புத்தகப்புழு என்று கேலி பேசினாலும்இ 'ஏதோ பைய விஷயம் கொஞ்சம் தெரிஞ்சி வைச்சிருக்கான்னு' - அறிந்தவர்கள் பாராட்டுவார்கள். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவனிடம் வந்துஇ ஆலோசனைக் கேட்பார்கள். அவனும் உடனடியாக அதற்கான தீர்வு சொல்லி அனுப்பி வைப்பான். இதனால், அவனுக்கு நிறைய பேர் ' பட்டப்பெயர்' வேறு வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.

இவ்வளவு அறிவா இருக்கே...
பொழப்புக்கு வழி தேடலையா?
பெரியவரின் பாராட்டுக் கேள்வி.
 
நித்தியக்கல்யாணி ஹைபுன்
 
குழந்தைகள் தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மாவோ அப்பாவோ தேர்வு செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர். குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர். இந்த பிடிவாத குணம் நல்லதா? கெட்டதா? என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. குழந்தைகளின் இப்பிடிவாதப் போக்கை விட்டுப் பிடித்து கவனித்து வரவேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். இப்போக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை எற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
 
மரத்தின் நிழலில் வளர்ந்தது
கர்வமில்லாமல் பாதுகாப்பாய்
நித்திய கல்யாணி செடிகள்.
 


  

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்