நீ என்ன செய்தாய்?
கவிஞர் செல்வராஜா
மலரின் வாழ்க்கை
உதிரும் வரை
இருந்தும் வாசத்தை
வழங்கிச் செல்கிறது
திரியின் வாழ்க்கை
எரியும் வரை
இருந்தும் ஒளியை
அளித்துச் செல்கிறது
பயிரின் வாழ்க்கை
மூன்று மாதம்
இருந்தும் அரிசியை
பரிசாகத் தருகிறது
மனிதா!
உனது வாழ்க்கை
எத்தனை ஆண்டுகள்
என்னத்தை
கொடுத்து விட்டு
செல்கிறாய்....?
பிறருக்காய்............!
|