விலை
முத்து குமரன்
அழகான
உன் மழலை மொழியால்
என் மனம்
குழந்தையாகிறது!
மென்மையான
உன் புன்னகையால்
என் மனம்
கலையாகிறது!
புயலான
உன் கொலுசோசையால்
என் மனம்
சிலையாகிறது...
கனமான
உன் கனவுகளால்
என் மனம்
கவிதையாகிறது...
குணமான
உன் குறும்புகளால்
என் மனம்
குதூகலமாகிறது...
நிலையான
உன் நினைவுகளால்
என் மனம்
விலையாகிறது... |