மூச்சுப் பரிசு
கவிஞர் சா.சம்பத்து,
பெருமாங்குப்பம்
கலைக்குத்
தாயான
தமிழ் மணற்கரை
நிலையில் திரிந்து
தமிழர்
உயிர் அறையும் கரையாய்...!
காற்றில் கரைந்த தாமிரம்
கரிசல் மண், நீரிலும்...!
மண் திரிந்த பின்
மாந்தன்...?
உலை நெருப்புக்கு
உத்தரவாதம் தரும் தாமிரம்
உயிர் அழிப்புக்குமா...?
சோலை தெரிந்த மண்ணை
பாலை ஆக்கும் சூழ்ச்சி இது...?
சூட்சுமம் அறிய
தமிழர் திணறியதால்
விளைந்த வீழ்ச்சி இது...?
இன எழுச்சியை
அடக்க இயங்கியத் துப்பாக்கிக்குத் - தமிழ்
உறவுகளின் மூச்சுப் பரிசு...?
துப்பாக்கியை இயக்கி அழித்தவனுக்குக்
காலம்
கொடுக்கக் காத்திருக்கிறது
அரிய பரிசு...?
முறை மீறியதைக்-காலம்
கணக்கில் வைத்துக் கொள்ளும்...!
விரைவில்
இதற்கொரு பதிலையும் சொல்லும்...!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்