தூத்துக் குடிமண்ணைத் தேடு!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

தூத்துக் குடிமண்ணைச் சொக்கும் குடிலைஅம்
நாத்துப் பிடிமண்ணை நாராக்கி – மாத்துத்
தமிழகத்தின் முத்துத் தமிழர்கள் சாவில்
குமிழுந் துயரமே கொள்!

சாத்துக் குடி,மாவும் சாந்துப் புலத்தழகும்
மூத்தகுடி என்கும் முருகழகும்-காத்தபெரும்
முந்தைப் பழங்குடியை மூடி அகழ்ந்தெடுத்துக்
கந்தைநிலம் ஆக்குவதுவோ காண்!

ழக் குடிநீரும் அற்றுப்போம் மண்ணினொடும்
வாழை, வளர்தெங்கு, மாச்சாயும்-கோழையெனக்
கொற்றம் கொடுப்போரைக் கோலோச்ச விட்டீரேல்
முற்றம் நெருப்பாகும் முன்!

ண்ணிற் சுடலை மரிக்காட்டுப் பேயாக்கிக்
கண்ணைக் குருடாக்கிக் காண்நிலத்தின்-பொன்னை
அகழ்ந்தெடுத்துப் பூட்டி அருஞ்செல்வத் தோடும்
முகம்காய வையாதீர் மூச்சு!

மிழன் தறிகெட்டார் தார்ப்பூமி யென்றே
உமிழார் நினைவின்பால் உள்ளும்-செமியார்
இதிகாசம் பாடும் இனமாகப் போகீர்
புதிதாகும் நீயோர் பொறி!

போரும் புயலோடும் பொல்லாங்கு விட்டோராய்க்
காரும் மழையென்றுங் காண்பீரே-தேரோடும்
தூத்துக் குடிமண்ணைத் தீங்காக வையாதீர்
மூத்த தமிழன்னை முன்!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்