மீளவிட்டான் தமிழ்க்குடிகள்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

க்கத்தை உண்டாகும் அரசாங்கம்;
       அந்நாளில் மனிதரது வாழ்விடத்தை
நோக்காது நற்சாலை கட்டுதற்கு
       நன்னெறியைப் பேணாது அனுமதித்து
தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டில்
      தமிழரையே நோயாளி யாய்மாற்றி
தூக்கத்தைக் கெடவைத்து மக்களையே
      துன்புறுத்தி ஆண்டயிந்த அரசாங்கம்

சொல்லொன்னாத் துன்பத்தால் மீளவிட்டான்
       தமிழ்க்குடிகள் ஆலையினை மூடக்கோரி
அல்லலுடன் போரிட்டு வந்தபோது
      ஆட்சியாளர் நோக்கியே போனபோது
கலவரங்கள் இருபக்கம் மூண்டதினால்
     காவலர்கள் இதயமில்லா துசுட்டனரே
கள்ளமில்லா போராட்டம் கடைசியிலே
      கருணையின்றி மரணத்தில் முடிந்தனவே.

திராவிடக் கட்சிகள் இரண்டும்
      தூத்துக்குடி ஆலையில் ஈடுபாடே
இரண்டும் லஞ்சம் வாங்குவதில்
      ஈடில்லா இன்பம் கண்டவர்கள்
தருணம் பார்த்து நடிப்பதிலே
       தகுதியான வேடம் போடுவார்கள்
அருமை ஈழவரை கொன்று
       குவித்தவர் தலைமை தாங்குவதா?

நீதிகேட்டு பலதடவை போரிட்டு
      நியாயமும் தீர்வுகளும் பெற்றீரா?
பாதியிலே உதித்திட்ட சாதியினை
      பரலோகம் அனுப்பிவிட்டு பண்புடனே
ஆதியில் இருந்ததுபோல் தமிழினத்தை
      அன்புநெறி யைக்காத்து ஒன்றுபட்டு
வாதியாய் நிமிர்ந்துநின்று அரசியல்
       வாதிக்கு ஆயுள்தண் டனைகொடுப்போர்

தூய மனத்தவராய் உறவுகளின்
      துன்பத்தைத் துடைக்கும் நல்லவராய்
நேயமாய் ஏழைகளை மதிப்பவராய்
      ஞாலத்தில் லஞ்சம் பெறாதவராய்
தாயாய் நாட்டினையும் மக்களையும்
      தரணியில் பேணுகின்ற உத்தமராய்
நேர்மை உள்ளவரை தலைவராக்கி
      தமிழகத்தை தலைசிறக்கச் செய்வீரே





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்