யாழ்
கவிஞர் சா.சம்பத்து
பெருமாங்குப்பம்
தொன்மைச்
சுரப்பிகளின்
ஊற்றுக் கண்களுக்கு
நெருப்பு மை தீட்டி மகிழ்ந்தனர்
நயவஞ்சகர்கள்...!
உலர் ஏட்டில் உறைந்திருந்த-தமிழ்ப்
பண்பும்
பண்பாடும்
அவர் கண்களுக்குச் சாம்பல்
எம் நெஞ்சுக்கு அது உரம்...!
மாறும் தலைமுறையின்
மாறாப் பண்பாடு-தமிழனின்
மரபு விதைக்குள் மாணிக்கமாய்
மின்னிக்கொண்டே இருக்கும்...!
அழித்தது நூல்-நெஞ்சில்
அழியாதது யாழ்...!
(தொன்மை சுரப்பி - தமிழனின் தொன்மையை விளங்கவைக்கும்
தமிழ்நூல்கள் என்றவாறு கையாண்டேன்.)
1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்