யாழ் நூல் நிலையமதை யார்தான்
எரித்தாரோ!
கவிஞர் அச்சுவேலியூர்
கு.கணேசன்
ஈழவள
நாட்டினிலே ஈடில்லாத நூல்நிலையம்
பாழடைந்து போர்னதங்கே பாதகர்கள்--சூழவந்தே
கொள்ளிவைத்தே தீயாற் கொழுத்தி எரித்தாரே
நள்ளிரவில் நூல்யாவும் நீறு!
கோடிக்
கணக்கான கல்விக் கனவான்கள்
பாடிவைத்த கல்விப் பனுவல்கள்--கூடிப்
படித்துவிட்டுக் கொள்ளிவைத்தார் பாதகர்கள் அந்தோ
இடிந்ததே எம்மிதயம் ஈங்கு!
கொள்ளை
அடித்தார் கொடியவர் இந்தியாவில்
வெள்ளைக் கலைமடந்தை வீற்றிருந்த—பள்ளி
சரஸ்வதி நூல்நிலையம் சண்டாள ராலே
பரகதியாகப் போனதனைப் போல்!
இந்திய
மாதாவின் ஈடில்லா நூல்நிலையம்
அந்தோ சரஸ்வதிமால் அம்மம்மா—விந்தைமிகு
மெஞ்ஞான விஞ்ஞான மேன்மைக் கலைச்செல்வம்
அஞ்சாது கொள்ளைபோச்சே ஆங்கு!
விண்ணோரும்
போற்றுகின்ற வேதசாலை நூல்நிலையம்
கண்ணின் மணியெனவே காப்பாற்று---புண்ணியம்
வேறுண்டோ பூமியிலே வெற்றிக் கலைமடந்தை
நூறுவகை நன்றிசெய்வாள் நீடு!
(1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்