இரகுநாதன் என்றும் மறையான்!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

காலத்தின் மீது ஊஞ்சல்
       கட்டிய ஒருவன் என்பத்
தூலத்தின் மடியில் ஊன்;றிச்
       சோதனை யிட்ட வாழ்வின்
பாலத்தின் அடியிற் பெற்ற
       பரிட்சயம் சமுதா யத்தின்
கீலத்தைப் பிரித்துத் துன்பக்
       கீற்றினை எழுத்தில்; வைத்தான்!

முற்போக்கு எழுத்தர் என்ற
       முத்திரை பதித்த வாறும்
கற்போரைக் காந்த மாக்கிக்
       கரைசலாய் வடித்த போதும்
வற்போரைச் சிறுக தைக்குள்
       வண்ணமாய் எடுத்த போதும்
நற்காந்தம் எழுத்தில் ஈர்த்த
      இரகுநாதன் மறைந்தான் அம்மா!

ஈழகே சரியும் மற்றை
      வீரகே சரியும் பொன்னி
ஆழமாம் தினக்கு ரல்லும்
      அரசியற் சுதந்தி ரன்உம்
மூழவோர் தினக ரன்னும்
      முற்பல ஏடு எல்லாம்
சூழவே எழுத்தில் வைத்த
      சிற்பியே அவனென் றறிவீர்!

கைலாச பதியும் சீனக்
      கம்யூனி சத்தும் ரஷ்ய
மேலாதிக் கத்தும் நின்று
      வேளையும் நாவல் மற்றும்
நூலாக இரண்டும் ஏட்டின்
      நூதனத் தோடும் பெற்ற
வாளாக எழுத்தைச் செய்தோன்
      வரலாற்றை எழுதிப் போனான்!

எழுத்தாளர் அகிலின் காணல்
      இளங்கீரன், டானி யல்லின்
விழுதொடும் ரகுநா தன்தன்
      கணேசலிங் கத்தோ டும்பேர்
எழுத்தாகி வியாபித் தோனாய்
      வித்தெனுஞ் சாத னைக்குள்
அழுத்தமாய் நின்ற மேதை
      அவனியில் மறையான் அம்மா!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்