அமரர் எழுத்தாளர் என் கே ரகுநாதன்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

ண்டது ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தொன்(பதில்)
வேண்டியே பெற்றபெரும் வித்தகப் பிள்ளையிவன்
கனைகட லோரம் பருத்தித் துறையூரின்
பனனமரக் கிராமம் வராத்துப் பளையிலே!

அனைவர்க்கும் அன்பனாய் இன்பனாய் வந்துதித்தான்
வினைத்திறன் மிக்க வித்தக மைந்தனாக
புனைபெயர் பலபல பெற்று உயர்ந்தான்
மனையோடு மக்கள் மதிப்பினைப் பெற்றான்

சிறுகதை கவிதை கட்டுரைகள் படைத்தான்
குறுநாவல். நாவல் படைப்பினில் உயர்ந்தான்
'பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சியில்' எழுந்தான்
இனங்கண்டு எழுத்தாளர் இதயத்தில் அமர்ந்தான்

நாடக நடிப்பிசை நவின்கலைப் பிரியன்
ஊடக நண்பரால் உயர்வுற்ற கலைஞன்
ஈழகேசரி, பொன்னி, சுதந்திரன், தினகரன்
வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைப் படைப்பாளன்

சீனச் சார்பு எழுத்தாளர் வரிசையில்
ஞானக் கயிலாய பதியோடு இழங்கீரன்
டானியல் ரகுநாதன் கணேசலிங்கம் சுபந்திரன்
வானாய் உயர்ந்த வித்தக எழுத்தாளரே!

பொற்கால வாழ்வெலாம் பிறந்தகத்தில் போனதையா!
பிற்கால வாழ்வெலாம் பெருமைசேர் கனடாவிற்கே
அற்புதக் கனடாவே அனைவருக்கும் சரணாலயமே
சொற்சுவை ரகுநாதன் சிறப்பினைப் பேசுவோம்வா

கொடுமை மிகுந்த கொத்தடிமைச் சாதிப்பேயை
கடுமையாய் சாடும் எறிகணைப் பீரங்கி
வறுமை கண்டு இரங்கும் மனத்தோன்
பொறுமை மிகுந்த மனிதனைப் போற்றுவோமே!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்