சிந்தனைச் சிற்பி ரகுநாதன்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
முற்போக்கு
வாதிகளில் உள்ளத்தால்
முழுமையாகத் தத்துவத்தைக் கடைப்பிடித்தோன்
சொன்னதையே யாப்பதிலும் செய்வதிலும்
சளைக்காது நடந்துகொண்ட உத்தமனார்
அற்பமான பதவிக்காய் தன்னுடைய
ஆத்மாத்தக் கொள்கையினை கைவிடவில்லை
என்றென்றும் சாதிக்கொ டுமைதன்னை
எதிர்த்திட்ட உண்மையான பெருமகனார்
சீனாவில்
மழைபெய்தால் இலங்கையிலே
சற்றேனும் குடைபிடிக்கா மாமனிதர்
தானாக அவர்களின் கோட்பாட்டை
தகுந்தால்போல் இலங்கையிலே கைகொண்டார்
வானமாக வாழ்ந்;திட்ட ரகுநாதர்
வாழ்கையையே சிறுகதையாய் வடித்திட்டார்
ஊனமுள்ள சமுதாயத் தவறுகளை
உன்னதமாய் சீர்திருத்த முனைந்திட்டார்.
ஆதியிலே
வாழ்ந்திட்ட தமிழராக
அணைவரையும் காணவிரு ம்பியதோழர்
பாதியிலே உதித்திட்ட சாதியினை
பார்புகழ அழித்திடவும் துணித்தவரே
நீதியினைக் காப்பாற்ற முன்னின்று
நானிலத்தில் போர்புரிந்த பெரியாரே
சோதியிலே ரகுநாதர் கலந்தாலும்
சாதிவெறி கட்டாயம் மறைந்திடுமே
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்