எழுத்தாளர் என்.கே.இரகுநாதன்

புலவர் முருகேசு மயில்வாகனன்

ழத்து மூளையாம் பருத்தித் துறையின்
வழமான வராத்துப் பளையின் வாழ்மகன்
இரகு நாதன் இயற்கை அறிவாளன்
தரமான கொள்கை யாளன் சார்புடை
சமதர்மக் கோட்பாடு சார்புடை எழுத்தாளன்
தமக்கென வாழாத் தக்கதோர் சமுகப்
பார்வையும் சார்புடைப் பண்பான எழுத்தும்
ஆர்வமாய்ச் செய்யும் அற்புத மனிதர்
வாசகர்க் கேற்ப வளமான ஆக்கம்
பலசெய்தே அற்புத மாக வெளியிட்டு
களம்பல கண்ட கண்ணிய சீலன்
நாவல் சிறுகதை நாடகம் என்றுபல
ஆவலாய்த் தந்த அற்புத மனிதர்
ஆண்டாண்டாய் வாழ்ந்தே அற்புதஞ் செய்த
தூண்டா மணிதான் தூரச் சென்றதுவே
மீண்டும் வராயோ வீரனே
மீண்டொருகால் வந்தால் வீறொகொள்வோம் நாமே!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்