காலமெல்லாம் வாழும் கண்ணதாசன்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
குற்றாலம்
அருவியாய் பாட்டிருக்கும்
காற்றாலும் மழையாலும் அழியாது
வற்றாத தமிழாய் பொருளிருக்கும்
வையகத்தில் கண்ணதாசன் பேரிருக்கும்
கற்றாரும் புகழும் பெரும்புலவர்
கல்லாரும் மனம்விரும்பும் பெருமைகொண்டோன்
அன்பான கண்ணதாசன் படைப்புக்கள்
அவனியும் மறைந்தாலும் மறையாதே
காலத்தால்
அழியாப் படைப்புக்கள்
கருத்தொன்றிக் கேட்கும் பாடல்கள்
ஞாலத்தில் என்றும் நிலைத்திட்ட
ஞாயிறாக உலகினில் வருகின்றார்
கோலமுள்ள ஐலகண்ட கண்ணப்பன்
குருபற்றால் கண்ணப்ப தாசநானார்
மாலவனின் மேலும் பற்றுள்ளோன்
மண்தன்னில் மறையாத மறையவனே.
சங்கத்
தமிழை இலகுவாக
சகலரும் புரியவைத்த வித்தகன்
எங்கள் தமிழில் சமயத்தை
எளிமை நடையில் எழுதியோன்
திங்கள் முகத்தோன் இயேசுவின்
தெவிட்டா வரலாற்றுக் காவியம்
தங்கத் தமிழில் யாத்துமே
தரணிக்கு பெருமையினைச் சேர்த்தவரே
எங்கும் வாழும் உன்தமிழ்
எக்கால மும்யிருப்பார் நீவீரே
(யூன்24
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்