வாழிய கனடாவே வரலாறாய் நீடு
கவிஞர் அச்சுவேலியூர்
கு.கணேசன்
151ம்
கனடிய தேசிய தினம்
விழவிழ
எழுந்த கனடிய தேசியம்
அழகுடன் நிமிர்ந்த அதிசய தினமே
உளமகிழ் வுடனே ஒன்றாய் இணைந்தே
அழகுறு கனடா அரும்பிய தினமே!
மேபிள் இலையை மேன்மைப் படுத்தி
மேவிடும் தேசியக் கொடியிற் பொருத்தி
ஆவலாய் அனைவரும் ஒன்றாய்க் கூடி
அரும்பிய கனடாத் தேசிய தினமே
கல்வியிற் சிறந்தது கனடாத் தேசம்
கருணையிற் சிறந்தது கனடாத் தேசம்
பல்லின மக்களும் பண்பாய்ச் சேர்ந்தே
பாரினில் உயர்ந்தது கனடாத் தேசம்
தாய்போல் மக்ககைக் தாங்;திடும் பண்பு
தரணியில் மனிதம் தாங்கும் அன்பு
நோய்க்கு மருந்தாய் நோக்கும் நட்பு
யாற்கும் யாவும் ஈந்திடும் ஈவு
மனிதனும் மிருகமும் மேன்மை பெறவே
புனித உறவைப் பேணி வளர்த்தே
கனிவுற உயிர்களைக் காத்திடும் நாடு
இனியொரு நாடு இதற்கேது ஈடு
கனிமம் குழைமம் கடல்படு திரவியம்
பனியும் குளிரும் பழமரச் சோலை
இனிதாய் வாழிய இராட்சியம் அனைத்தும்
இனிதே வாளிய தேசியக் கொடியே!
சீஎன் கோபுரம் நையகரா நீர்வீழ்ச்சி
சீவிய காலம் சிந்திடும் செல்வம்
பாயும் நதியும் பழமுதிற் சோலையும்
பாவை கனடாவின் பண்புக்குப் பரிசே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்