சோலையில்
சாலை ஏன்...?
கவிஞர் சா.சம்பத்து
பெருமாங்குப்பம்
வியர்வை
சிந்தினோம்...! உடல்வலி மறந்தோம்...!
வாழ்க்கைச் சக்கரம் சுழன்றிட மகிழ்ந்தோம்...!
அயரா தெம்முடல் உழைப்பினால் விளையும்
அரிய பண்டமும் உலகினுக் களித்தோம்...!
பயிர்செய் மண்தனில் பலவழி எதற்காம்
பலவாய் முன்னமே வழித்தடம் இருக்க...?
உயிர்தம் மெய்தனில் நிலைத்திட உதவும்
உழவர் வாழ்வினைச் சாய்த்திடு வதற்கா...?
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்