சென்னை முதல் சேலம் வரை

புலவர் முருகேசு மயில்வாகனன்

ட்டுவழி வீதியாலே ஏற்படும் துன்பம்
        எடுத்தியம்பக் கேட்காத எடப்பாடி அரசின்
கட்டுக்கு மீறிய காவல் கெடுபிடி
        கமக்கார ர் தற்கொலை காணுங் காட்சி
வட்டாட்சி யரொடுமற்றும் நிலஅளவை அதிகாரி
        வாய்மையைக் கைவிட்டே வலிந்த ளந்தே
இட்டமுடன் காணியரின் எதிர்ப்புக் கிடையில்
        ஈர்ப்பாக கல்நட்டு ஈனஞ்செய் கிறாரே.

சேலமென்னும் திருநகரின் செழிப்பு மங்க
       சீலமற்ற ஆட்சியரின் செயல்க ளங்கு
காலமெல்லாம் கமத்தொழிலே செய்து வந்த
       கமக்கார ர் மட்டுமல்ல கைத்தொழில், வர்த்தகர்
மூலதனம் அற்றவராய் முற்பணம் இன்றியும்
       முறையான அறிவித்தல் தானு மற்றே
பாலங்கள், கட்டிடங்கள், பாச மரங்கள்
       பாவியர்கள் அழித்தொழித்துப் பணஞ்சேர்க் கிறாரே.

ட்டுவழி வீதிதான் யாருக்கு வேண்டும்
      ஏழைகளுக் கேனப்பா இவ்வீதி
கட்டிய வீடுகள், கனிவள மலைகள்
     காணிகள் அளப்போரின் கையில்
தட்டியே கேட்டாலோ தயங்காமற் கைது
      தடியடிப் பிரயோகம் தப்பாது
திட்டமிட்ட மேலிடத்தின் செயற்றிட் டந்தான்
      செய்வதேதென் றேங்கும் மக்கள்.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்