எட்டு வழிச்சாலை ஏதுக்கிந்த வேலை!
கவிஞர் அச்சுவேலியூர்
கு.கணேசன்
நட்டநடு
ஊரினிலே எட்டுவழிப் பாதையடா
விட்டுவிட விரும்பாது வெம்புகிறான் ஏதையடா
திட்டமிடல் ஏதுமின்றி தோட்டத்துள் சாலையடா
அட்டூழியம் அனிஞாயம்!.; எங்குபோச்சு நீதியடா?!
எட்டுவழிச் சாலைவரப் பட்டுவிடும் சோலைபல
நட்டநடு விளைநிலங்கள் நாசமாப் போகுமிங்கே
திட்டிமனம் நொந்தே தேம்பியழும் விவசாயி;
பட்டிதொட்டி எங்கும் பாமரர்கள் பதைபதைப்பு!
தேசத்தின் செல்வத்தைத் தெருப்போட்டு அழிப்பதா
பாசமிகு விழைநிலங்கள் நாசமாய்ப் போவதா
கூசாமற் தாய்மடியில் கொள்ளியிடப் பாற்பதா
ராசாங்க வரிப்பணத்தைப் பாசாங்காய்த் திருடுவதா?
மலைதனை மடுவாக்கி மாபெரும் பாதையேன்
அலையென மக்களிங்கு ஆற்பாட்டம் செய்கின்றார்
மலைதரும் செல்வமெலாம் மாற்றான் அபகரிக்க
உலைவைக்கும் திட்டமிங்கு ஊரறிந்த நாடகமே!!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்