தமிழ்நாட்டைக் காப்பீர்
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
ஐயகோ
தமிழ(ர்) நாடே
அழிகிறாய் யார்தான் காப்பார்?
மெய்ந்நெறி விளைந்த நாட்டை
விருட்சமும் நிறைந்த காட்டை
பொய்வடம் கழுத்தைச் சுற்றிப்
போட்டதோர் மரணக் கூட்டை
கையிலே ஏந்தி யாடும்
கஞ்சலால் அழிவை யாமோ?
வானொலி
எல்லாம் பொய்யே
மனிதமும் உறிஞ்சும் பேச்சு
காணொலி தமிழே இல்லை
கலப்பினில் உசுப்பு ஏத்தும்
வீணொலி போதை யூட்டும்
விசரெனப் பட்ட பேச்சுக்
கூனொளி காட்டுங் காலை
குடிசையும் அமிழ்ந்த தாங்கே!
பாதையாம்
எட்டு என்ற
பரதேசி ஆட்சி சொல்லி
மூதையர் விளைச்சற் பூமி
வெடிவைத்துத் தகர்க்க வாறார்!
காதையாய்ப் பயிரைத் தந்த
கனிநில இரும்புத் தாதை
கூதியாய் எடுக்க வாறான்
குப்பென எரியும் நாடே!
மலையினைக்
குடைந்து மார்பை
மழித்திட ஊட லாக்கி
முலையினைக் கிள்ளி அந்தோ
வேதையைக் கற்ப ழித்தான்!
வலையினில் அரசி யல்லும்
வாரியே அபக ரிக்கும்
உலையினிற் பணமும் கிள்ளும்
ஊத்தைகள் இனிவேண் டாமே!
மெய்மொழி
பேசும் நாட்டை
வியனுல கத்தே கொஞ்;சும்
நெய்யருட் சோதி வாழ்வை
நெருப்பினிற் கொட்டித் தீய்த்துப்
பொய்யெலாம் பேசிப்; பேசி
புழுதியாய் ஆக்குங் கோடி
கையிலே எடுப்பதற் காய்க்
கலைகொண்டு வாறார் கேள்மின்!
தாரணி
போற்றுந் தூய
தமிழ்மொழி கற்பாய் தம்பி!
பேரணி அரசி யற்குப்
பித்தனாய் ஆகாய் அப்பா!
வீரனாய் மௌலி பத்தும்
வீற்றிடும் மொழியைக் காப்பீர்!
சூரனாய் அழிப்பார் தம்மைத்
தீர்த்திடு அவர்வேண் டாமே!
கோட்டையும்
கோபு ரங்கள்
கூத்திடும் வழியுஞ் சாலை
நாட்டையே அழிக்கும் கேளாய்
நல்வழி அஃதே யில்லை!
மூட்டையாய்ப் பணத்தை அள்ள
மூடனாய்ப் போகா தேநீ!
வீட்டைநீ காப்பாய்! தூய
விருட்சமே தமிழா கட்டும்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்