லலிதா புரூடியின் மனிதம்
போற்றுதும்!
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
லலிதா
புரூடி மலிதம் இலாதார்
பலியாத் தமிழ்தன் வலிமை எழுத்தர்
நீரா யுருக்கி நெருப்பாய் நடக்கும்
ஆரா அமுதாள்! அடக்கத் துள்மனம்
சத்திய வேட்கை நித்தியக் கரணம்
புத்தியிற் பனித்த புண்ணியஞ் சுவறும்
பற்றும் பாசமும் பணிவுங் கனிவும்
கற்று முதிர்ந்த காலப் பெருவெளி
மாது எனத்தாய் தீது இலாதாள்
சாதா ரணமாய்ப் போதம் புகல்வாள்!
வேதம் பருகிய நீதிச் சல்லடை
நாதம் கொடுக்கும் நாயகி அறிவீர்!
புன்சிரிப் போடுயர் மென்மொழிக் கீற்றின்
மன்பதை காட்டும் நன்மகள் தாமே!
மும்மொழிச் சிங்களம் முத்தமி ழாங்கிலம்
இம்மை எழுத்தின் தம்மை இணைத்தவள்
அம்மை எனவே செம்மை வகுத்தவள்
செம்மொழி போலே அம்மொழி உரைப்பவள்
தனக்குப்பின் னாலே தன்னுடல் மாணவர்
தனக்குக் கொடுத்தாள்! சார்ந்து படித்துக்
கனதி அடைகென கனதியைக் கொடுத்தாள்!
மனதார் மகளவள் மனிதம் போற்றுதும்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்