மும்மொழியில் ஆட்சிகொண்டோர்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
மும்மொழியில்
ஆட்சிகொண்ட மாட்சியுள்ள புரூடியம்மை
முத்தான படைப்பான சமாதான நீதியினை
சித்தத்தின் நிறைவுடனே பூமியில் வெளியிட்டார்
பத்திரிகை வாணொலியில் பளிங்குபோல் ஒளிவீசும்
பண்புள்ள
குடும்பஸ்தர் புகழ்மிக்க புதுமைப்பெண்
கண்ணியமும் கடமையையும் கண்ணாகப் கடைப்பிடித்தோன்
எண்ணத்தைப் பயமின்றி எழுதுகோலால் எழுதியவர்
அண்ணலவன் அழைத்திடினும் அஞ்சலியால் போற்றிடுவோம்
ஆன்மிகத்தில்
அளவில்லா ஆற்றலுள்ள அம்மையவர்
தேனான தமிழ்மொழியைத் தெளிவாகப் பேசுபவர்
வான்டைந்து சென்றுவிட்டார் அவரிடத்தில் யாருமில்லை
ஊன்உடம்பு அழிந்தாலும் உலகத்தில் புரூடியுள்ளாரே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்