வானம்பாடி (ஆங்கிலத்தில் - பி.பி.ஷெல்லி)

தமிழில் - முனைவர் செ.இராஜேஸ்வரி

ன்பத்தில் இசைக்கும் உயிரே நீ வாழ்க வாழ்க
பறவையாய் நீ தோன்றவில்லை
சொர்க்கத்தில் இருந்தோ அல்லது
அதற்கு மிக அருகில் இருந்தோ
முன் எப்போதும் தியானம் செய்யாத கலையின்
முன்னெடுத்துச் செல்லும் இசையாய்
முழு இதயத்தையும் பொழிகிறாய்

யரமாக இன்னும் உயரமாக
பூமியில் இருந்து பொங்கி வரும் ஊற்றாக
நெருப்பு மேகம் போல
உன் அடர் நீலச் சிறகு ஒளிர
பறக்கின்ற நீ
உயரப் போய் பாடுகிறாய்
பாடுவதால் உயர்கிறாய்

மூழ்கும் கதிரவனில் இருந்து எழும்
பொன் மின்னல் சுற்றுக்கு
மேலெ தெரியும் மேகத்தின் ஒளியில்
உருவமில்லா இன்பமாய்
இப்போது தொடங்கிய பந்தயமாய்
நீ மிதந்து ஓடுவாய்

வெளிறிய கருஞ்சிவப்பு கூட
உன் பறப்பை சுற்றி உருகுகிறது
பகலின் வெட்ட வெளிச்சத்தில்
சொர்க்கத்தில் தோன்றும் நட்சத்திரம் போல
நீ கண்ணுக்கு புலப்படவில்லை- எனினும்
உன் உற்சாகக் கிறீச் குரலைக் கேட்கிறேன்

ந்த வெள்ளிக் கோளத்தின்
அம்புகளைப் போல் கூரியதாய்
வெள்ளை விடியலில் தெளிவாய்த் தெரியும்
விளக்கின் நேர் சுடராய்;
பார்வைக்கு இதுவரை தென்படவில்லை – எனினும்
அங்கு அதன் இருப்பை உணர்கிறோம்

பூமி வானம் முழுவதிலும்
உரக்க கேட்கிறது உன் சத்தம்
இரவில் வெறுமையில் - அந்த
ஒற்றைத் தனி மேகத்தில் இருந்து
நிலவு ஒளிமழை பொழிகிறது
சொர்க்கம் நிரம்பி வழிகிறது

நீ யாரென்று யாம் அறியோம்
உன்னை போல் வேறு யாருண்டு
வானவில் மேகத்தில் இருந்து
பளிச்சென மழைத் துளி சிந்தவில்லை
நீ இருப்பதால் - அங்கிருந்து
இசை மழையே பொழிகிறது

கசிய நேரத்தில்,
தன் காதல் கனிந்த அத்மாவுக்கு
ஆறுதல் அளிக்கின்ற;
அரண்மனை உப்பரிகையில் உள்ள
உயர் குடிப் பெண் போல [நீ]
பொழியும் இசை -
காதலைப் போல் தித்திப்பாக
பூங்கொடிப் பொதும்பரில் நிறைந்து வழிகிறது

மின்னும் புற்களின் மேலே
உள்ளூர் மழையின் ஓசை;
மழையால் விழித்த மலர்களில்
எப்போதும் எங்கும் நிரம்பியிருக்கின்ற
இன்பம், தெளிவு, மலர்ச்சி
ஆகிய இவை அனைத்திலும்
சிறந்து விளங்குகிறது உன் இசை



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்