ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் இரா.இரவி
சீதை
இருக்குமிடம்
இராமனுக்கு அயோத்தி
வீட்டோடு மருமகன் !
உதட்டிலே
உறவு
நெஞ்சிலே பகை
அரசியல் கூட்டணி !
இறக்காமல்
வாழ்கின்றனர்
பிறருக்காக வாழ்ந்தவர்கள்
மக்கள் மனங்களில் !
ஆற்றில்
எடுத்தாலும்
அளந்து எடுங்கள்
மணலை !
அன்னையும்
பிதாவும்
முன்னறி தெய்வம்
முதியோர் இல்லத்தில் !
உலகப்
பொதுமொழி
காதலர்களுக்கு
சைகை மொழி !
தொற்றுநோயானது
அரசியல்வாதிகளுக்கு
ஊழல் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|