எட்டு வழிச்சாலை

சூரியபுத்திரன்



ட்டு வழிச்சாலை
எதுக்கு இந்த வேலை...?

அழிக்கும் சோலைக்கு
அடைமொழியோ
பசுமை வழிச் சாலை...!

பெயர்ச் சூட்டலில்
பொதிந்திருப்பது
பணச்சுருட்டலும் தான்

அடுத்தத் தேர்தலுக்குள்
இல்லாமல் போகும் தம் இருப்பு என - அதற்குள்
பணம் குவிக்கப்
போடுகிறார் தப்புக் கணக்கு...!

ஆட்சியும் மாறும்
காட்சியும் மாறும் - காலம்
பணம் எண்ண நினைத்த விரல்களுக்கு
சிறைக் கம்பிகளைக்
கையில் கொடுக்கும்...!


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்