பேரிழப்பு

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்

ல்லாமே
எட்டும் தூரத்தில்...!

எதை எட்டிட
எட்டு வழிச் சாலை...?

எட்டு மலைகளைக் குடையவா
ஏரி குளங்களை அழிக்கவா...?

தாது வளத்தை எடுத்து - தமிழ்
நிலத்தைத்
தரகர்களுக்குத்
தாரை வார்க்கவா...?

மண்ணை நம்பி வாழும்
மாவினைத் தோழர் வாழ்வை
மண்ணுக்குள் புதைக்கவா...?

காற்றையும் - வான்
ஊற்றையும் - விரிகதிர்க்
கீற்றையும்
கோட்டை விட்டுவிட்டு - மலைகளைக்
குடைவதா சிறப்பு...?

கொட்டிக் கொடுக்கும்
கரங்களைக்
கொடும் வாள் கொண்டு கொய்வது பேரிழப்பு...!
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்