கறுப்பு
யூலை 1983
புலவர் முருகேசு மயில்வாகனன்
புத்தரின்
போதனையைப் போற்றியே வாழ்கின்ற
சித்தங் கலங்காத சிந்தனை யாளர்கள்
புத்தரின் கொள்கையைப் போதிக்கும் பிட்சுக்கள்
உத்தமர்கள் ஒன்றுசேர்ந்த உற்சவமே கறுப்புயூலை.
செந்தமிழைச் சீரழிக்
கச் செய்த சதியதுவே
சொந்தமாய் வீடுவாசல் சோர்விலா உழைப்பினாலே
நிந்தையிலா வர்த்தகத்தால் நீடுயர்ந்த கட்டிடங்கள்
சிந்தைகவர் கொழும்புநகர் தீச்சுவாலை யானதுவே.
தொழிலகம் சென்றோரின்
செய்திகள் ஏதுமில்லை
தொழிலகத் தொலைபேசி தொடர்பற்றுப் போனதுவே
வழியெங்கும் காடையரின் வாள்வீச்சு மட்டுமல்ல
களிவிரக்க மற்றதந்தக் கற்பழிப்புக் கொலைகளவு.
அகதிகள் முகாங்கள்
ஆங்காங்கே காவலர்சூழ்
அகதிகளாய் நாமங்கே அழுது புலம்புகையில்
முகமறியாத் தொண்டர்கள் முன்வந்து உதவிடவே
தகதக்க்கும் நெருப்பணைய தக்கநல் ஆதரவே!
தமிழர்க்கோர் தாய்நாடு
அதுவேதான் வடகிழக்கு
நம்தமிழ் நாட்டுக்கு நாம்செல்ல கப்பல்கள்
தம்பியையா(a.l) தலைமையிலே தக்கதோர் பிரயாணம்
நிம்மதியாய்ச் சென்றவர்கள் நீண்டநாள் தங்கவில்லை.
மில்லரென்னும் மாவீரன்
முதலாம் கரும்புலியாய்
வல்லவனாம் தலைவனின் வாழ்த்துடனே நெல்லியடிப்
பாசறையை நேர்நின்று தாக்கியழித் தந்நாள்தான்
ஊசலாட வைத்த திருநாள் யூலையந்தே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்