கறுப்பு யூலை
கவிஞர் அச்சுவேலியூர்
கு.கணேசன்
கறுப்பு
யூலைக் கண்ணீர்க் கதைக்குப்
பொறுப்பு யாரங்கே
மறுப்பு இல்லை மண்ணை ஆண்டவர்
சிறப்பே பொறுப்பாகும்
வெறுப்பு ஊட்டி வேற்றுமை காட்டி
வளர்த்தார் இனப்பகையை
அறுப்பு நடத்தி ஆனந்தங் கொண்;டார்
கறுப்பு யூலையிலே!
ஓன்றாய் இணைந்து
ஒற்றுமைப் பட்டார்
நன்றாய் இருந்ததாட்சி
வென்றார் தமிழர் என்றே நினைந்து
பொன்றாப் பொறாமையுற்றார்
குன்றா அமைதியைக் குலைக்க நினைத்தே
கொடுமை செய்தாரே
அன்றே கொழும்பில் அமைதியைக் கெடுத்தே
அடிதடி தொடுத்தாரே!
நாடே பற்றி எரிந்தது
கொழும்பில்
நாயாய் தமிழர் அலைந்தாரே
வீடே தேடி விசமிகள் வந்து
வெட்டிக் கொன்றாரே
கூடே எரிந்து குருவிகள் அங்கே
குதறப் பட்டனவே
ஆடாய் மாடாய் அடித்தார் வதைத்தார்
ஆண்டவர் தடுத்தாரா!
தோசைக் கல்லில் பாலனை
வறுத்தார்
தாகம் தீரவில்லை
ஆசைக் குழந்தையை அடுப்பில் எரித்தார்
ஆத்திரம் தீரவில்லை
பாசப் பிள்ளையைக் கொதிக்கும் தாரில்
போட்டு மகிழ்தீரே
நாசப் பிறவிகளே நங்கையர் தங்கையர்
கூடப் பிறந்தீரா?!
கறுப்பு யூலையிலே
கருக்கி எரித்தீரே
உறுப்பை அரிந்தீரே
சிறப்ப நடவடிக்கை. செத்தவர் சொத்தைத்
திருடி மறைத்தீரே
பிறவிக் குணமடா! புலையரின் ஆட்சியடா
பிரம்ம தேவனே
அறத்தினைக் காப்பாற்ற ஆருமே இல்லையா
ஆண்டவன் வருவாண்டா!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்