மறக்க முடியா யூலாய்மாதம்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

லகில் எங்கும் நடைபெறாத
         உள்ளத்தை உலுப்பிய சம்பவம்
இலங்கையில் நடந்தது தமிழருக்கு
         ஈடில்லா சோகம் தந்தநாள்
கலவரம் சீராய் ஏற்படுத்தி
         கட்டவுழ்த்து கொலைகள் செய்தநாள்
விலங்குகள் போலவே சிறையினிலே
         வைத்திருந்த கைதிகளை வெட்டியநாள்

றக்க முடியா யூலைமாதம்
         மண்ணில் வாழும் தமிழருக்கு
இறந்த உறவினர் யாவருக்கும்
         இன்றும் நீதிவ ழங்காநாள்
துறந்த புத்தர் அன்றிருந்தால்
        துயரால் இரத்தக் கண்ணீரும்
அறத்தில் தர்மம் காப்பாற்ற
        அகிலத்தை அழித்து ஒழித்திருப்பார்

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்
         வானத்தில் உறைந்து விட்டதாலும்
கயவர்கள் யாவரும் ஆள்வதாலும்
         கட்டில்லா துன்பம் புரிவதாலும்
பயமடைந்து நீதியும் நேர்மையும்
         பூமியில் நடுங்கி ஓடியதோ
நியாயம் இன்றிக் கொடுங்கோன்மை
         நாட்டில் ஓங்கிபூ மியழியுமே





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்