பசுமைசாலையா
கூற்றுக்கயிறா
பாவலர் கருமலைத்தமிழாழன்
எற்றுக்கிங்
கரசாங்கம் மக்கள் தம்மை
ஏதிலியாய் ஆக்குதற்கா !
திட்ட மெல்லாம்
வற்றாத வளங்கனினைத் தருதற் கன்றி
வாடவிட்டு மக்களினைக்
கொல்வ தன்று !
கொற்றவனே கூற்றுவனாய் மாறி யிங்கே
கொடுங்கோலாய் செய்வதுவா
மக்க ளாட்சி
பெற்றதாயின் உயிர்பறித்தல் போன்ற தன்றோ
பேணுகின்ற வயலழித்துச் சாலை
போடல் !
மக்களுக்கு
நன்மைதரும் திட்ட மென்றால்
மகத்தான திட்டமென்றே உலகு
போற்றும்
தக்கபடி செயல்திட்டம் வகுக்கும் போதே
தகுதிட்டம் எனமக்கள் ஏற்றுக்
கொள்வர் !
சிக்கலினை உண்டாக்கி வாழ்வு தம்மை
சீரழிக்கும் திட்டமதோ கீழ்மை
திட்டம்
திக்கெட்டும் எதிர்த்தபோதும் செய்வே னென்றால்
திருவாட்சி அன்றஅது தீய ஆட்சி !
நெல்வயல்கள்
அழித்தமைக்கும் நீள்சா லையா
நெஞ்சினிக்கும் பசுமைசாலை ! வீட ழித்தே
எல்லோரைத் தெருவினிலே நிற்க வைக்கும்
எண்சாலை களாஇன்பம் நல்கும் சாலை
!
அல்லலினைத் தருகின்ற செயல்கள் செய்யும்
ஆட்சியதோ மக்கள்தம் தீய ஆட்சி
தொல்லைதரும் ஆட்சியினைத் தூக்கெ றிந்தே
தோள்தட்டி நல்லாட்சி அமைப்போம்
வாரீர் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்