நட்பின்
பயன்
புலவர் முருகேசு மயில்வாகனன்
உற்றநேரத்
துதவுவான் உற்ற நண்பன்
உறுதுணை யாமவனே
பற்றுடனே காப்பான் பகலிரவு பாரான்
பாசப்பிணைப் பவனே
நற்றுணையாய் நாடிவந்தே நல்லறிவு தந்திடுவான்
நயமாய்ப் பேசி
கற்றவற்றைப் பகிர்ந்தளிப்பான் காலந் தவறாதே
காதலுக்கும் உதவிடுவான்.
“நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்”
நாணுவதில் ஏது பயன்?
வாடாது நல்லவரை வாட்டமின்றிக் கொள்வதே
வாய்ப்பான நட்புக்கு வாய்ப்பு
ஏடேதுங் கற்காத ஏதிலியைக் கைவிட்டே
ஏற்பான நண்பரை நாடில்
ஈடேற வாய்ப்புண்டு ஏற்றநல் உதவியால்
ஏற்றமுறும் வாழ்வு என்றும்.
“குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இன னும்” அறிந்தே யாக்க நட்பு
இணையிலா வாழ்வுக்கு ஏற்ற மனையாளும்
ஏற்றமுறு நண்பனும் என்றும் துணையே
துணையாமே கற்றநற் கல்வியும் சான்றோர்
தூயநல் அறிவுரையும் துணையா மென்றும்
இணையிலா வாழ்வுக்கு ஏற்றமுறு நண்பன்
ஈடில்லாத் துணையாக என்றும் இருப்பான்.
நட்டல் – நட்பு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்