ஹைக்கூகள்
முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.
நின்றவாரே பயணிக்கிறான்
குளிர்க்கண்ணாடி அணிந்த
பார்வையற்றவன்.
செவ்வக வடிவில் நீந்துகின்றன
கண்ணாடி தொட்டியிலிருந்து
கடலில் கொட்டிய மீன்கள்.
தொடரும் நன்னடத்தை
மரக்கன்று நடுகிறான்
விடுதலையான ஆயுள்கைதி.
சிறை வளாகச் சுவற்றை
தாண்டி வெளியேறுகிறது
விடுதலையடையா மரக்கிளை.
நிலத்தின் நீதிமன்றத்தில்
வழக்கு பதிவிற்கு எதிர்ப்பு
கடல் கொள்ளையர்கள்.
மழையில் நனைகிறது
காலை ஈரமாக்கிச் செல்கையில்
கடலலை.
முந்திட இடைவெளியின்றி
வண்டியைத் தொடர்கிறது
ஒற்றையடிப் பாதை.
நிழலை இழந்தவனுக்கு
துணையாகிறது
சவப்பெட்டி.
தந்தை மறைவுக்கு பின்
தாயை வந்தடையும் இடைவெளியில்.
ஓய்வெடுக்கிறது ஓய்வூதியம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|