கொண்டுவந்து போட்டுக் கொழுத்து

புலவர் முருகேசு மயில்வாகனன்

ண்ணில் விளையும் மதிமயக்கும் கஞ்சாவைத்
தண்ணழியான் காண்பதற்காய்த் தந்த்திந்த – வண்ணமிகு
கண்களால் கண்டறிந்த போதைப் பொருட்களைக்
கொண்டுவந்து போட்டுக் கொழுத்து.

தேடி எடுப்பதற்காய்த் தேசத்தின் காவலர்கள்
நாடி வரும்போது நாமுமே – கூடியே
கண்டறியப் பேருதவி காட்டித் துவக்குகளைக்
கொண்டுவந்து போட்டுக் கொழுத்து.

நாட்டின் முதுசமாம் நல்லிளைஞர் வாழ்வினை
வாட்டமுறச் செய்கின்ற கேடிகளைத் – தேடியே
கண்டறிந்து தேசத்துக் கேற்றவராய் மாற்றிடுவீர்
தண்டனை ஏதுமறத் தான்.

 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்