நெல்லு விதைப்போம் (சிறுவர் பாடல்)

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ரை கிடைச்சி கூடாப் புற்கள்
       கோர்த்துப் பிடுங்கிடுவோம் - களைகள்
       கூடிப் பிடுங்கிடுவோம்
ரை வந்து பார்த்துப் போகுதே
       நாற்று நட்டிடுவோம் - நெல்லு
       நாற்று நட்டிடுவோம்!

றுத்த மேகக் காற்றும் வீசுது
      கனத்த மழைவரும் - மூலைக்
      கச்சான் புயல்வரும்
றுத்த நேரம் இடியும் முழங்கப்
      பூமி சிலிர்த்திடும் - வெள்ளம்
      பொங்கி வழிந்திடும்

யலில் நீரும் வரப்பிற் தேங்கி
       வண்டல் சேர்த்திடும் - பயிரை
       மதத்து வளர்த்திடும்!
யலு மீன்கள் பாய்ந்து பாய்ந்து
       கடலைச் சேர்ந்திடும் - வயலின்
       பக்கம் ஊர்ந்திடும்!

ளங்கள் சுனைகள் வாரும் நிரம்பிக்
       கொசுவும் பாடிடும் - குத்திக்
       குடிக்கும் இரத்தமாம்!
ளர்ந்த நெல்லு வளைக்கும் கதிரின்
       வடிவம் காட்டுமாம் - சூடு
       மாதர் போலுமாம்!

சின்னப் பயலாய் மாடு கட்டிச்
       சூடடித்த சீலத்தை - என்றன்
       சிந்தனையின் பாடத்தை
ன்று எண்ணி வாட்ட முற்றேன்
       எப்பவரும் காலமோ? -
       எங்களுக்குச் சீலமோ?
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்