கொண்டுவந்து போட்டுக் கொளுத்து

பாவலர் கருமலைத்தமிழாழன்

வேலியாய் நல்லொழுக்கம் பேணா திளைஞரிடை
பாலியலைத் தூண்டுகின்ற வக்கிரத்தைக் -- கூலிக்காய்
வண்ணப் படங்களுடன் வார்க்கின்ற ஏடுகளைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து !

லையினில் தேங்காய் உடைப்பதுடன் ஆட்டின்
தலையைப் படைப்பதுவா பக்தி - கொலைகளையா
கண்ணீரைத் மாற்றும் கடவுளேற்பார் ! மூடத்தைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து !

ன்றஅற நூல்கள் அறவியல்நூல் ஆன்மீகம்
போன்ற பலதுறையில் பெற்றிருக்க -- மான்விழியே
தண்டமிழில் ஆகாது கல்விகற்க என்போரைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து !

வேதங்கள் எல்லாமே வேண்டாத குப்பைகள்தாம்
வாதத்திற் கொவ்வாத ஏடுகள்தாம் -- பாதகமாய்ப்
பண்டில்லா வர்ணத்தில் பாகுபாடு செய்வதனால்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து !

சாதிமதம் வேறென்று காதலரைப் பெற்றோரே
வீதிகளில் வெட்டியே வீசுகின்றார் -- நீதியாமோ
பண்பற்ற இச்செயலைப் பார்ப்பதுவோ அன்னாரைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து !


 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்