கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

காவிரியே வீடுவருங் காணென்று வெண்பாவைப்
பாவிரியச் செய்து படித்தோம்நாம் - காவிரியைக்
கண்டு சிலிர்த்தோம் கயமை எழுத்தெல்லாம்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

தொலைக்காட்சி எல்லாமும் தூயதமிழ் இல்லை
வலைக்காட்சி யாக்கும் மனதாய் - விலைபோகும்
துண்டு மொழிகள் செருகும் உரையெல்லாம்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

ங்கிலமும் மற்றும் அடுக்கும் மொழியூடே
வீங்கியதாய்ப் பேசும் விகற்பத்தே - நீங்கியதாய்க்
குண்டு மொழியாக்கும் கேடார் மடியூஞ்சல்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

ரியர் திராவிடமென் றான பிரிவுகளாய்
வீரிய நற்றமிழை வீணாக்கி - வேரவிழும்
முண்டு எலும்பின்றி மேவும் அலியெழுத்தைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

மிழ்நாடு இன்றித் தமிழில்லை என்றும்
அமிழ்தாம் மொழியின்றேல் அற்றே - உமிழேயாம்
மண்டுங் குரலாகி மண்ணாம் அரற்றுமொழி
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

டிப்பார் கதைப்பார் நதிபோற் தமிழை
இடிப்பார் திமிங்கிலத்தும் ஏற்றி - துடிப்பாராய்க்
கண்டு தமிழுண்ணக் காணும் எதிர்ப்பெல்லாங்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

நாளை ஒருநாள் நவிலும் வரையாகி
பாளைத் தமிழ்சிந்தும் பாங்காகி - வேளையோர்
வண்டுச் சுனைபாடும் வாகை மழிப்பார்சொல்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்