ஹைக்கூகள்

முனைவர் வே.புகழேந்தி, பெங்களுரு.

டி அணில்கள்
பழம் அருந்துகையில்
சண்டையிடுகின்றன நிழல்கள்.

டைவிடா மழை -
மெல்ல துளிர்க்கிறது
உழவனின் முகத்தில் புன்னகை.

ழை பெய்தும்
நிரம்பவில்லை
யாசகனின் பாத்திரம்.

ம்மா ஞாபகப்படுத்துகிறாள்
முதியோர் இல்லத்திலிருந்தது
அப்பாவின் நினைவு நாள்.

த்தரித்த வெளிச்சத்தை
இருளில் எறிகிறது
'மின் வெட்டு'.

புல்வெளியில் குதிரை -
அசைப் போடுகிறது
பந்தயக்கால நினைவுகள்.

வெய்யிலில் குழந்தை விளையாடுகிறது
தாய் திட்டுகிறாள்
வெய்யிலை

ன்னும் தேடுகின்றன
தம் நிழல் விழும் தலத்தை
முகிலினங்கள்.

சிறகுகளின் ஆசியுடன்
உயரே பறக்கிறது
சுதந்திரம்.

ல்லைச் செதுக்கிய உளிக்குள்
இன்னும் ஒட்டியுள்ளது
தெய்வீகக் களை.

தொடர்வண்டி வேகமடைந்ததும்
பின்தங்கி விடுகின்றன
துரத்தி வந்த மழைத்துளிகள்.

சிறகு முளைப்பதற்குள்
நிறம் பெறுகிறது பட்டாம் பூச்சி
தவறி விழுந்த வண்ணக்கலவை.

ருட்டிலும் வழித்தவறாமல்
வந்தடைகிறது
முதல் மழை.

ண்ணத்துப்பூச்சியை
சுற்றி பறக்கிறது
வடிவம் பெறா ஹைக்கூ.

சிரமப்படுகிறார்
வயதான ஏழை தையல்காரர்.
ஊசியில் கோர்க்கவியலா நூல்.

ற்காமலே நடனம் ஆடுகிறது
நடனப்பயிற்சி நிலையத்தில்
எரியும் ஊதுபத்தி.
 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்