புத்தாண்டு வாழ்த்துக்கள்

முத்துவேல்

'மன அழுத்தம் இல்லாத உறக்கம் வேண்டும்,
மாசு இல்லாத சுவாசம் வேண்டும்,
மக்களை காப்பாற்றும் நல் அரசு வேண்டும்,
மது அருந்தாத குடி மகன் வேண்டும்
பகுத்தறிவு வளரவேண்டும்,
பசியோடு உறங்குவோர் நிலை குறைய வேண்டும்,
உதவும் உணர்ச்சி உள்ள மனிதர்கள் வேண்டும்,
கோபுரங்கள் தலை சாய்த்து குடுசைக்கு உதவ வேண்டும்,
காமம் இல்லாத காதல் வேண்டும்,
அரவாணிகளை அரவணைக்கும் சமுதாயம் வேண்டும்
ஊழல் இல்லாத அரசியல் வேண்டும்,
முதுகில் குத்தாத பந்தகள் வேண்டும்,
வறுமையில் பிறந்தவன் வசதி பெறவேண்டும்,
குழந்தை தொழிலாளர் முறை ஒழியவேண்டும்,
கற்றதை கக்கும் கல்வி முறை மாறவேண்டும்
காசுக்கு கல்வியை விற்கும் அவலம் அகலவேண்டும்
வரதட்சணை வாங்காத மணமகன் வேண்டும்,
தடுக்கி விழுந்தவன் தன்னம்பிக்கை பெறவேண்டும்
சூது வாது இல்லாத உலகம் வேண்டும்
சுயநலம் இல்லாத மனிதர்கள் வேண்டும்,
தீவிரவாதம் களையவேண்டும்,
குற்றங்கள் குறையவேண்டும் ,
பிரிவினைவாதம் தூர எறியவேண்டும்,
அணு ஆயுதங்கள் ஒழிய வேண்டும்,
அன்பு மலர்ச்சி பெருகவேண்டும்,
படித்தவனுக்கு பணி கிடைக்கவேண்டும்,
விவாகரத்தை, விட்டுகொடுத்து தடுக்க வேண்டும்,
வன்முறை இல்லாத போராட்டங்கள் வேண்டும்,
மதியோடு மக்கள் செல்வம் பெற்றிட வேண்டும்,
மக்கள் தொகை குறைத்திட வேண்டும்,
ஓட்டுக்கு, விலை பேசாத தேர்தல் வேண்டும்,
மொத்தத்தில், மக்களிடையே மனித நேயம் மலரவேண்டும்.......


muthuvel_a2000@yahoo.co.in